குழந்தைகள், தன் தேவைக்கு ஏற்ப பால் குடிக்கிறார்களா? இல்லையா? என தெரிந்து கொள்ள நிபுணர் டிப்ஸ்!

  • SHARE
  • FOLLOW
குழந்தைகள், தன் தேவைக்கு ஏற்ப பால் குடிக்கிறார்களா? இல்லையா? என தெரிந்து கொள்ள நிபுணர் டிப்ஸ்!

குழந்தையின் நல்ல முன்னேற்றத்திற்கு தாய்ப்பால் கொடுப்பது மட்டுமின்றி, வயிறும் நிரம்பியிருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டியது அவசியம். வயிறு நிரம்பியதற்கான அறிகுறிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.

அவர்களுக்குப் போதுமான பால் கிடைக்கிறதா இல்லையா என்பதை சில அறிகுறிகளை வைத்து யூகிக்க வேண்டும். குழந்தைகள் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே உட்கொள்கிறார்கள். ஆறு மாதங்களுக்குப் பிறகு தாய்ப்பாலுடன் திட உணவும் கொடுக்கப்படுகிறது. பால் குடித்த பிறகு குழந்தையின் வயிறு நிரம்பி விட்டதா என்பதைப் புரிந்து கொள்ள, நீங்கள் சில அறிகுறிகளைப் பார்க்க வேண்டும், அதைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம். இதைப் பற்றிய சிறந்த தகவலுக்காக, லக்னோவில் உள்ள ஜல்கரிபாய் மருத்துவமனையின் பெண்மைப் பினியியல் மருத்துவ நிபுணர் டாக்டர் தீபா சர்மாவிடம் பேசினோம்.

1. எரிச்சல்

குழந்தை பசியுடன் இருந்தால், எரிச்சலாகக்கூடும். குழந்தை சரியான அளவு பால் குடிக்காதபோது சிறுநீரின் அளவு குறைவாகவே இருக்கும். ஆகையால் டயப்பரின் ஈரம் குறைவாக இருந்தாலும் குழந்தை சரியாகப் பால் குடிக்கவில்லை என்று அர்த்தம்.

2. சோம்பல்


வயிறு நிரம்ப பால் குடித்த பிறகு குழந்தைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். குழந்தை மந்தமாக இருந்தால், அவரது வயிறு நிரம்பவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.மேலும், குழந்தைக்குப் போதுமான அளவு பால் கிடைக்காதபோது, சிறுநீர் அடர்ந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

3. வாய் உலர்ந்து காணப்படுதல்

குழந்தையின் வாய் மற்றும் கண்களில் வறட்சி காணப்பட்டால், அது நீரிழப்பின் அறிகுறியாகும்.இது குழந்தை போதுமான அளவு பால் உட்கொள்ளவில்லை என்பதை குறிக்கிறது.

4. பால் குடித்துவுடன் தூங்குவது

குழந்தைகள் எவ்வளவு நேரம் பால் குடிக்கிறார்கள் என்பதற்கும் பாலின் அளவு அல்லது வயிறு நிரம்புவதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. குழந்தை பால் குடிப்பதை நிறுத்திவிட்டு, கொஞ்சம் தூங்க ஆரம்பித்தால், வயிறு நிரம்பிவிட்டது என்று எடுத்துக்கொள்ளலாம்.

5. பாலை விழுங்குதல்

தாய்ப்பால் கொடுக்கும்பொழுது, ​​பால் குடிக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்த அவ்வப்போது குழந்தை பால் குடிக்கும் சத்தம் கேட்கிறதா என்பதை கவனித்து கொள்ளுங்கள். உங்கள் கனத்த மார்பகங்கள் குழந்தை பால் குடித்த பிறகு லேசான தன்மையில் இருப்பதை உணருவீர்கள்.

6. எடை அதிகரிப்பு

சரியான வளர்ச்சியுடன் குழந்தையின் உடல் எடை அதிகரித்தால், கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.இதன் மூலம் குழந்தை வயிறு நிரம்பும் அளவு போதுமான பால் உட்கொள்கிறார் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

7. குழந்தைகளின் உணவுமுறை

  • குழந்தைகள் பிறந்ததிலிருந்து இரண்டு மாதங்கள்வரை, ஒரு நாளைக்கு 8 முதல் 12 முறை பால் குடிக்கிறார்கள்.
    • அதாவது, 2 முதல் 3 மணி நேரத்திற்கும் ஒருமுறை குழந்தைக்குப் பால் தேவைப்படுகிறது.
      • இரண்டு மாதத்தில், குழந்தைகள் 3 முதல் 4 மணி நேர இடைவெளியில் பால் குடிக்கிறார்கள்.
        • நான்கு மாதத்தில், குழந்தைகள் 5 முதல் 6 மணி நேர இடைவெளியில் பால் குடிக்கிறார்கள்.
          • ஆறு மாதத்தில், குழந்தைகள் 6 முதல் 8 மணி நேரத்திற்கு ஒரு முறை பால் குடிக்கிறார்கள். இந்த மாதத்தில், திட உணவு தொடங்கப்படுகிறது. குழந்தையின் உணவு தேவையும் அதிகரிக்கிறது.

          • உங்கள் குழந்தை பசி அல்லது பால் குடிப்பதற்கான அறிகுறிகளைக் காட்டாவிட்டாலும், நேரம் தவறாமல் அவ்வப்போது தாய்ப்பால் கொடுக்க வேண்டுயது அவசியம்.

            All Images Credit: freepik

அடுத்ததை படிக்கவும்

Overeating: அதிகமாக சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? இதை கைவிட சிம்பிள் டிப்ஸ்!

பொறுப்புத் துறப்பு

குறிச்சொற்கள்