Tips For Healthy Relationship With Partner: இன்று பலரும் சந்திக்கக் கூடிய பிரச்சனைகளில் ஒன்று உறவு பராமரிப்பு ஆகும். ஒவ்வொருவரும் அவருடைய பார்ட்னர்களுடன் எதாவதொரு வகையில் பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இது அனைவரது வாழ்க்கையிலும் நடைபெறும் விஷயமாகும். இதன் காரணமாக சிலர் பிரியலாம் மற்றும் சிலர் தற்காலிகமாக சமாதானம் அடையலாம். இந்த பிரச்சனைகளைத் தவிர்க்கவும், உறவுகளிடையே பெரிய விரிசல் ஏற்படாமல் இருக்கவும் சில விஷயங்களைச் செய்யலாம். இது உங்களது உறவை நீண்ட காலம் நீடிக்க உதவும்.
கணவன் மற்றும் மனைவி இருவரும் தங்கள் வாழ்க்கையை ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இந்த உறவை வெற்றிகரமாகவும், ஆரோக்கியமானதாகவும் மாற்ற சில வழிகள் உள்ளன. அவற்றைப் பற்றி இங்குக் காண்போம்.
ஆரோக்கியமாக மற்றும் வெற்றிகரமாக உறவை பராமரிப்பது எப்படி?
கணவன், மனைவி இருவரும் தனது அன்றாட வாழ்க்கையில் எடுக்கும் சில நடவடிக்கைகளின் மூலம் உறவை ஆரோக்கியமாகவும், வெற்றிகரமாகவும் வழிநடத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: திருமண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க 6 குறிப்புகள் இங்கே
கைகளைப் பிடித்துக் கொள்ளுதல்
பாசத்தினைக் குறைபட்ச அளவில் காட்டுவதாக இருந்தாலும் பரவாயில்லை. இதில் ஒருவருக்கொருவர் அன்பைக் காட்ட கைகளை பிடித்துக் கொண்டு ஆறுதல் அடையலாம். இது உறவுகளுக்கு இடையே உள்ள அன்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது. மேலும், இதில் உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது அல்லது மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை விட, உங்கள் துணையிடம் அக்கறை கொள்வது மிக முக்கியதாகக் கருதப்படுகிறது. இது உறவை நீட்டிக்க வைக்கும் வழி ஆகும்.
நம்பிக்கை மற்றும் மன்னிப்பு
உறவில் சண்டைகள் ஏற்படாமல் இருப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. எனினும், உறவில் பிரச்சனைகள் ஏற்படுமாயின் அதை சமாளிப்பதற்கான வழிகளைத் தேட வேண்டும். கணவன் மற்றும் மனைவி இருவரிடையில் ஒருவர் மன்னிக்க கூடிய தவறுகளை செய்திருப்பாராயின், அவர்கள் மற்றவர்களை மன்னிப்பது உறவை நீட்டிக்கும். மேலும் நம்பிக்கை என்பது உறவின் பலம் என்றே கூறப்படுகிறது. எனவே, உறவில் ஆழமான நம்பிக்கை இருப்பது எந்த பிரச்சனைகளையும் சரி செய்வதாக அமையும்.
பெருமிதம் அடைதல்
உறவுகளிடையே பாசம் என்பது சிலருக்கு பொய்யானதாகவும், சிலருக்கு உண்மையானதாகவும் இருக்கும். ஆனால், சிறிய பாசம் அதே சமயம் உண்மையான பாசம் எவருக்கும் தீங்கு விளைவிப்பதில்லை. உறவு உங்களுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை கணவன், மனைவி இருவரும் அறிந்து கொள்வது முக்கியமானதாகும். குறிப்பாக, உறவுகளில் வார்த்தைகளை விட செயல்களே முன்னுரிமை அளிக்கும். எனவே, உங்கள் துணையிடம் பாசத்தையும், அவர்களை நீங்கள் பாராட்டுவதில் எப்படி பெருமிதம் கொள்கிறீர்கள் என்பதையும் தெரிவிப்பதற்கான வாய்ப்பைப் பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Important Things Before Marriage: திருமணத்துக்கு முன் நீங்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
பொதுவான ஆர்வங்களைக் கண்டறிதல்
கணவன், மனைவி இருவரிடையே வித்தியாசமான ஆர்வங்கள் இருந்தாலும் பரவாயில்லை. உறவுகளில் இருப்பவர்கள் தங்கள் கூட்டாளிகளுடன் அதிகம் பழகுவதன் மூலம் சுவாரஸ்யமான விஷயங்களைக் கண்டறிந்து புதிய ஆர்வங்களை வளர்க்கலாம். மேலும், உங்களுக்கிடையே இருக்கும் பொதுவான ஆர்வங்களைக் கண்டறிந்து அதனைக் கற்றுக் கொள்வது உறவை வலுப்படுத்தும்.
உரிமைகளில் கவனம் செலுத்துதல்
உறவில் அன்பு எவ்வளவு முக்கியமானதோ, அதே சமயம் நேர்மறையும் முக்கியமானதாகும். இவை இல்லாமல் உறவு வெறுமையாக இருக்கலாம். கணவன், மனைவி இருவரில் ஒருவர் என்ன தவறு செய்கிறார் என்பதை சுட்டிக்காட்டாமல், உரிமைகளைப் பார்த்து வாய்ப்பு கிடைக்கும் போது பாராட்ட வேண்டும். எனினும் செய்யும் தவறுகளைப் புறக்கணிக்க வேண்டும் என்பது அர்த்தமல்ல. அவர்கள் தவறு செய்திருப்பின், அதை அவர்கள் உணரவில்லை எனில் அவர்களிடம் சொல்லலாம். எனவே குறைகளை மட்டும் சுட்டிக்காட்டுவதை விட, பாராட்டுவதற்கான காரணங்களையும் கண்டறிய வேண்டும்.
ஒவ்வொரு உறவும் தனித்தன்மை வாய்ந்ததாகும். உறவில் விரிசல் ஏற்படாமல் நீண்ட காலம் நீடிக்க செய்ய வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. உறவு நீடிக்க செய்யும் சிறிய முயற்சியும், அதிக அன்பும் எப்போதும் உறவை வலுவாக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Friendship After Marriage: திருமணத்திற்குப் பின் நட்பைப் பேணிக் காப்பது எப்படி?
Image Source: Freepik