முத்து போன்ற வெண்மையான பற்களுக்காக இயற்கையான பல் பொடி

  • SHARE
  • FOLLOW
முத்து போன்ற வெண்மையான பற்களுக்காக இயற்கையான பல் பொடி

வெள்ளை மற்றும் பளபளப்பான பற்கள் ஒருவரின் ஆளுமைக்கு அழகு சேர்க்கும்.முத்துக்களைப் போலப் பிரகாசிக்கும் உங்கள் பற்களின் புன்னகையால் சுற்றி உள்ளவர்களை ஈர்க்க முடியும். அதே சமயம் மஞ்சள் மற்றும் அழுக்கு படிந்த பற்களால் பல சங்கடங்களைச் சந்திக்க நேரிடலாம். பற்கள் சுத்தமாக இல்லாவிட்டால், வெளிப்படையாக வாய்விட்டுச் சிரிக்க கூட முடியாது. குட்கா மற்றும் வெற்றிலை உட்கொள்வது, புகைபிடித்தல், மோசமான வாய் பராமரிப்பு அல்லது தவறான உணவு முறை போன்ற பல காரணங்களால் பற்கள் மஞ்சள் நிறமாக மாறிவிடுகிறது.ஒரு சிலர் மஞ்சள் மற்றும் அழுக்குப் படிந்த பற்களை வெண்மையாக்க, கடைகளில் கிடைக்கும் விலை உயர்ந்த பல் பொடியைப் பயன்படுத்துகிறார்கள். இதற்குப் பதிலாக இயற்கையான பொருட்களைக் கொண்டு, வீட்டிலேயே பற்களை வெண்மையாக்கும் பல் பொடியைத் தயாரிக்கலாம். இது உங்கள் பற்களை ஆரோக்கியமாக, வெண்மையாக  மாற்றுவதோடு உங்கள் பணத்தையும் மிச்சப்படுத்துகிறது. பற்களை வெண்மையாக்கும் பல் பொடியை வீட்டிலேயே  எப்படி செய்யலாம் என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

பல் பொடி செய்யத் தேவையான பொருட்கள்.

  • வேம்பு மற்றும் புதினாவின் உலர்ந்த இலைகள்
  • இலவங்கப்பட்டை பொடி -1 டீஸ்பூன் 
  • அதிமதுரம் பொடி -1 டீஸ்பூன்
  • கல் உப்பு- 1 டீஸ்பூன் 
  • கிராம்பு பொடி -1 டீஸ்பூன்
  • how-to-make-homemade-teeth-whitening-powder

    செய்முறை :

    மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் நன்கு அரைத்துக் காற்று புகாத டப்பாவில் வைக்கலாம். 

    பல் பொடி பயன்படுத்தும் முறை:

    உங்கள் உள்ளங்கையில் ஒரு டீஸ்பூன் பொடியை எடுத்துக்கொள்ளுங்கள். பல் துலக்கியை பயன்படுத்தி, உங்கள் பற்களை மென்மையாகத் தேய்த்து சுத்தம் செய்யுங்கள். அதன் பிறகு சுத்தமான தண்ணீரில் வாய் கொப்பளிக்கவும்.இந்தப் பல் பொடியைக் கொண்டு தினமும் காலை மற்றும் இரவு என இருமுறை பற்களைச் சுத்தம் செய்ய வேண்டும். இந்தப் பல் பொடியைப் பயன்படுத்தினால் வாயில் உள்ள கிருமிகள் நீங்கும்.மேலும், உங்கள் பற்களின் மஞ்சள் நிறம் படிப்படியாகக் குறைந்து பற்கள் பளபளக்கும்.

    வீட்டில் தயாரிக்கபட்ட பல் பொடியின்  நன்மைகள்

    இந்த இயற்கையான பல் பொடி பற்களுக்கு மிகவும் நல்லது. கல் உப்பினால் பற்கள் இயற்கையாகவே வெண்மையாகவும் பளபளப்பாகவும் மாறும். அதே நேரத்தில், வேம்பு, புதினா மற்றும் அதிமதுரம் ஈறுகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும். கிராம்பு மற்றும் இலவங்கப்பட்டையின் உதவியுடன், பற்களில் படிந்துள்ள அழுக்குகள் மற்றும் வாயில் இருக்கும் பாக்டீரியாக்களையும் அகற்றலாம். உணர்திறன் வாய்ந்த பற்கள் உள்ளவர்களும் இந்தப் பல் பொடியைத் தாராளமாகப் பயன்படுத்தலாம். 

    how-to-make-homemade-teeth-whitening-powder

    வெண்மையான ஆரோக்கியமான பற்களைப் பெற, இந்த விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

    • பற்களின் மஞ்சள் நிறத்தை அகற்ற, உங்கள் உணவு மற்றும் வாய்வழி சுகாதாரத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். 
    • பற்களில் மஞ்சள் கறைகள் மற்றும் சீழ்ப்பற்களை தவிர்க்க, தொடர்ந்து பல் பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள்.
    • தினமும் இருமுறை பல் தேய்க்க வேண்டும். இரவு உணவுக்குப் பிறகும் பல் தேய்ப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது வாயில் பாக்டீரியா வளராமல் தடுக்க உதவும்.
    • பல் தேய்க்கும்போது மென்மையான பல் துலக்கியைப் பயன்படுத்தவும். நடுத்தர அல்லது கடினமான துலக்கியைப் பயன்படுத்துவது, பற்களின் மேல் அடுக்கைச் சேதப்படுத்துகிறது.
    • பற்கள் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்க, டீ மற்றும் காபி அருந்துவதைக் குறைக்கவும்.
    • பற்களின் மஞ்சள் நிறத்தை அகற்றுவது மிகவும் கடினம் அல்ல. வீட்டிலேயே இயற்கையான பொருட்களைக் கொண்டு இந்தப் பல் பொடியைத் தயாரித்து பற்களின் மஞ்சள் நிறத்தைப் போக்கலாம். வீட்டில் செய்த இந்தப் பல் பொடி கடைகளில் கிடைக்கும்  மற்ற பொடிகளைவிட நல்ல பலன் தரும். தினமும் இரண்டு முறை பல் தேய்த்தால், நீங்களும்  முத்து போன்ற வெண்மையான சுத்தமான பற்களுக்குச் சொந்தக்காரர் ஆகலாம்.

      Image Source: Freepik

அடுத்ததை படிக்கவும்

Overeating: அதிகமாக சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? இதை கைவிட சிம்பிள் டிப்ஸ்!

பொறுப்புத் துறப்பு

குறிச்சொற்கள்