How To Treat Asthma In Babies: சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படும் பிரச்சனைகளில் ஒன்றாகவே ஆஸ்துமா உள்ளது. குறிப்பாக, குளிர் காலத்தில் பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளான ஆஸ்துமா, நிமோனியா, வைரஸ் தொற்றுகள் உள்ளிட்ட சுவாசப் பிரச்சனைகளை குழந்தைகள் சந்திக்கின்றனர். இதில், ஏற்கனவே ஆஸ்துமா பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு வைரஸ் தொற்றுகள் ஆஸ்துமாவின் தாக்குதலுக்கு தூண்டுதலாக செயல்படுகிறது. வறண்ட காற்று, மாசுபாடு மற்றும் உடற்பயிற்சியின்மை போன்றவையும் அடங்குகிறது.
குளிர்காலத்தில் காற்று மாசுபாடு மோசமாக இருக்கும் சூழ்நிலை, ஆஸ்துமா தாக்குதல்களுக்கு முக்கிய காரணமாகிறது. எனவே அறிகுறிகளைக் கட்டுக்குள் வைத்திருக்க குழந்தைகளுக்கு ஆஸ்துமாவை நிர்வகிக்கும் முறைகளைப் பராமரிப்பது அவசியம். மும்பை ஹாஜி அலி, நாராயண ஹெல்த் மூலம் நிர்வகிக்கப்படும் எஸ்ஆர்சிசி குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தை நுரையீரல் மருத்துவம் மூத்த ஆலோசகர் டாக்டர் இந்து கோஸ்லா, குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா மேலாண்மைக்கான சில குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார். அவற்றைப் பற்றி இங்குக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: பிறந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த 8 குறிப்புகள் இங்கே
ஆஸ்துமா சிகிச்சை
ஆஸ்துமா சிகிச்சை அல்லது ஆஸ்துமா மேலாண்மை என்பது உள்ளிழுக்கும் மருந்துகளின் முக்கிய அம்சமாகும். இதில் உள்ளிழுக்கப்படும் மருந்துகள் நுரையீரலுக்கு நேரடியாகச் சென்று, வேகமாகவும், குறைந்த அளவுகளிலும் செயல்பட வைக்கிறது. மேலும், இவை பக்க விளைவுகள் ஏற்படுவதைத் தடுக்கிறது. இவ்வாறு உள்ளிழுக்கும் மருந்துகள் நோயின் அறிகுறி கட்டுப்பாடு, அதன் நிலை, அதிகரிப்புகளின் எண்ணிக்கை, தீவிரம், மற்றும் அவர்களின் ஒட்டு மொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாக அமைகிறது.

உள்ளிழுக்கும் கருவிகள் இரண்டு வகைகளில் உள்ளன. அவற்றில் ஒன்று நிவாரணிகள் மற்றும் மற்றொன்று கட்டுப்படுத்திகள். ஆஸ்துமாவால் ஏற்படும் தாக்குதலைத் தடுக்க கட்டுப்படுத்திகள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆஸ்துமா தீவிரமடைந்தால் ஏற்படும் இருமல் மற்றும் மூச்சுத் திணறலின் அறிகுறிகளைக் குறைக்க நிவாரணிகள் உதவுகின்றன.
இந்த பதிவும் உதவலாம்: Newborn immunity: பிறந்த குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அதிகரிப்பது?
குழந்தைகளின் ஆஸ்துமா சிகிச்சைக்கான மேலாண்மை குறிப்புகள்
- ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் ரிலீவர் இன்ஹேலரை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும். இதனால் அறிகுறிகள் தோன்றிய உடனே ரிலீவர் இன்ஹேலரைப் பயன்படுத்தலாம்.
- மருத்துவர் ஆலோசனைப்படி, கன்ட்ரோலர் இன்ஹேலரை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும், குறிப்பாக விளையாடும் போது அல்லது உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது போன்ற உடல் செயல்பாடுகளுக்கு முன் இன்ஹேலரைத் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- விளையாட்டு விளையாடும் முன் சூடான காற்றை உள்ளிழுப்பது முக்கியம். சரியான சுவாசத் தளத்துடன், மூக்கு வழியாக மெதுவாகவும், ஆழமாகவும் சுவாசிப்பது நுரையீரலுக்குள் நுழையும் காற்றை சூடாக வைத்திருக்க வேண்டும்.
- ஸ்பேசர்களுடன் இன்ஹேலரை எடுத்துக் கொள்வதற்கான சரியான நுட்பத்தை ஒருவர் தெரிந்திருக்க வேண்டும்.

பல குழந்தைகள் இன்ஹேலர்களைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர். இது நோயைக் கட்டுப்படுத்துவதற்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாக அமைகிறது. எனவே வாய்வழி சிகிச்சையில் மட்டும் நம்புவது ஆபத்தானது. குழந்தைகள் நோயை எதிர்த்துப் போராடுவதுடன், நோய் தொடர்பான பயங்களை மனதில் வைத்து எதிர்த்துப் போராடுவதால் பயனுள்ள மேலாண்மை அவசியமாகும். பொது விழிப்புணர்வை அதிகரிப்பது குழந்தைகள் சரியான சிகிச்சைக்கு செல்ல உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Food Allergy: குழந்தைக்கு உணவில் ஒவ்வாமை எதனால் ஏற்படுகிறது தெரியுமா?
Image Source: Freepik