சில நேரங்களில் வெயிலின் தாக்கத்தால், முதுகின் நிறம் இயல்பை விடக் கருமையாகலாம். வெயிலினால் ஏற்படும் இந்த நிற மாற்றம் “டேன்” என்றழைக்கப்பபடுகிறது. இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ள வீட்டு வைத்தியங்களின் மூலம் டேன்களை நீக்கலாம்.
முதுகில் உள்ள டேன் நீக்க: பெரும்பாலான மக்கள் முக பராமரிப்பில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். முகத்தில் டேன் ஏற்பட்டால் அதை நீக்கப் பல்வேறு க்ரீம்களுடன், வீட்டு வைத்தியங்களையும் செய்து வருகிறோம். முகம், கைகள் மற்றும் கால்களில் ஏற்படும் டேன் நீக்கப் பல பிரபலமான தயாரிப்புகள் கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் முதுகில் உள்ள டேன் நீக்குவதற்காகச் சில விலை உயர்ந்த தயாரிப்புகள் மட்டுமே உள்ளன. இத்தகைய சூழலில், முதுகின் தோலைப் பராமரிக்கவும், டேன் நீக்கவும் இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யலாம். இவை இயற்கையான பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதால், எந்தப் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. இதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கடலைமாவு, மஞ்சள் மற்றும் எலுமிச்சை
கடலைமாவு, மஞ்சள் மற்றும் எலுமிச்சை ஆகியவை டேன்களை நீக்குவதோடு, சருமத்தையும் மேம்படுத்தவும் உதவுகிறது. 2 டீஸ்பூன் கடலைமாவில் 1 டீஸ்பூன் மஞ்சள், அரை எலுமிச்சையின் சாறு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியான கலவையைத் தயாரிக்கவும். இதை முதுகில் டேன் உள்ள இடங்களில் தடவவும். நன்கு காய்ந்ததும், கைகளைத் தண்ணீரில் நனைத்து மென்மையாக மசாஜ் செய்து முகத்தை சுத்தம் செய்யுங்கள்.
கற்றாழை
கற்றாழை சருமத்திற்கு மிகவும் நல்லது. முதுகில் உள்ள டேன் நீக்க, கற்றாழை ஜெல்லை முதுகில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள்வரை வைக்கவும். அதன் பிறகு சாதாரண நீரில் முதுகைக் கழுவவும். இப்படி தொடர்ந்து செய்வதால், டேன் குறைவதுடன், சருமமும் பளபளப்பாக மாறும்.
பப்பாளி மற்றும் தேன்
பப்பாளி மற்றும் தேன் டேன்களை நீக்கப் பெரிதும் உதவுகிறது. பப்பாளியின் தோல் டேன் ஐ நீக்குகிறது. அதேசமயம் தேன் சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது. முதலில் பப்பாளியை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். இதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கெட்டியான கலவையைத் தயார் செய்யவும். இந்தக் கலவையை முதுகில் தடவி மசாஜ் செய்யுங்கள். 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் கழுவலாம்.
பச்சை பால் மற்றும் அரிசி மாவு
பச்சை பால் மற்றும் அரிசி மாவு டேன் பிரச்சனையை நீக்குகிறது. மேலும் சருமத்தை மென்மையாக்குகிறது. அரிசி மாவுடன் பால் சேர்த்து கெட்டியான கலவையைத் தயார் செய்து கொள்ளுங்கள். இந்தக் கலவையை முதுகில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள்வரை உலர விடவும். பிறகு முதுகை வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யவும். பின் சாதாரண நீரில் முதுகைக் கழுவவும். இதனைத் தொடர்ந்து செய்து வந்தால் டேன் நீங்கும்.
தயிர் மற்றும் மஞ்சள்
தயிர் மற்றும் மஞ்சள் முதுகில் உள்ள டேன்களை எளிதாக நீக்குகிறது. தயிர் மற்றும் மஞ்சள் சருமத்திற்கு ஊட்டமளித்து, மேம்படுத்த உதவுகிறது. 3 டீஸ்பூன் தயிருடன் அரை டீஸ்பூன் மஞ்சளைக் கலந்து முதுகில் தடவவும். 10 முதல் 15 நிமிடங்களுக்குப் பிறகு சாதாரண நீரில் கழுவவும்.
இந்த வீட்டுவைத்தியங்கள் அனைத்தும் முதுகில் உள்ள டேன் பிரச்சனையை அகற்ற உதவுகின்றன. உங்களுக்கு முதுகில் தடிப்புகள் அல்லது ஒவ்வாமை இருந்தால், நிச்சயமாக மருத்துவரை அணுக வேண்டும். இந்த வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு பேட்ச் சோதனை செய்யுங்கள்.
Images Credit: freepik