Hand Wrinkles: கைகளின் சுருக்கத்தை நீக்க பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள்!

  • SHARE
  • FOLLOW
Hand Wrinkles: கைகளின் சுருக்கத்தை நீக்க பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள்!

காலநிலை மாற்றங்கள் காரணமாக கைகளில் சுருக்கங்கள் ஏற்பட்டு, வயதான தோற்றத்தை உண்டாக்கும். சுருக்கங்களை நீக்கி, சருமப் பொலிவு மற்றும் மென்மையான சருமத்தைப் பெற சில வேதிப்பொருள்கள் கலந்த கிரீம்களை உபயோகிப்பர். சில நேரங்களில் கிரீம்கள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். மாறாக, சுருக்கங்களை நீக்க சில பாதுகாப்பான வழிமுறைகளை மேற்கொள்வது அவசியம். அந்த வகையில் வீட்டில் உள்ள சில பொருள்களைப் பயன்படுத்தி கைகளில் உள்ள சுருக்கங்களை நீக்கி விடலாம். இதில் கைகளின் சுருக்கங்களை நீக்குவதற்கான வழிமுறைகளைக் காணலாம்.

கைகளில் உள்ள சுருக்கங்களை நீக்குவதற்கான வழிமுறைகள்

வீட்டில் உள்ள சில எளிய மற்றும் இயற்கையான முறைகளைப் பயன்படுத்தி கைகளில் உள்ள சுருக்கங்களை எளிதாக நீக்கலாம்.

வெள்ளரி

கையில் உள்ள சுருக்கங்களை நீக்குவதில் வெள்ளரிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. வெள்ளரிக்காயில் வைட்டமின் சி சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் நிறைந்து காணப்படுகின்றன. வெள்ளரிக்காய் பெரும்பாலும் சரும பராமரிப்பிற்கும் உதவுகிறது. வெள்ளரிக்காயை துண்டாக வெட்டி, அதனை தேனில் குழைத்துக் கொள்ளவும். இந்த துண்டை கைகளில் சுருக்கம் உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும். இவ்வாறு குறைந்தது ஐந்து நிமிடங்களுக்கு மசாஜ் செய்து பின் தண்ணீரில் கழுவ வேண்டும். இதன் மூலம், கையில் உள்ள சுருக்கங்களை நீக்க முடியும்.

வாழைப்பழ கூழ்

வாழைப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை சுருக்கங்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. சுருக்கங்களை நீக்க வாழைப்பழத்தை எப்படி பயன்படுத்தலாம் என்பதைப் பார்க்கலாம். வாழைப்பழத்தை நன்றாக நசுக்கி, கூழாக்கி அதனை உங்கள் கைகளில் தடவ வேண்டும். இதனை காய்ந்தவுடன் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை செய்வதன் மூலம் சுருக்கங்களை நீக்க முடியும்.

அடுத்ததை படிக்கவும்

Overeating: அதிகமாக சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? இதை கைவிட சிம்பிள் டிப்ஸ்!

பொறுப்புத் துறப்பு

குறிச்சொற்கள்