Stop Baby Hiccups: பிறந்த குழந்தைக்கு வரும் விக்கலை நிறுத்த இப்படி முயற்சி செஞ்சி பாருங்க!

  • SHARE
  • FOLLOW
Stop Baby Hiccups: பிறந்த குழந்தைக்கு வரும் விக்கலை நிறுத்த இப்படி முயற்சி செஞ்சி பாருங்க!

கர்ப்ப கால பராமரிப்பை விட பிறந்த குழந்தைகளைப் பராமரிப்பதில் அதிக அளவு கவனம் தேவை. பிறந்த குழந்தைகளுக்கு வரும் விக்கல், தாய்ப்பால் கொடுப்பது, குழந்தை அழுவது போன்ற அனைத்து செயல்களையும் மிகப் பாதுகாப்பாக கையாள வேண்டும். இதில், குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் விக்கல், சில பிரச்சனைகளால் ஏற்படலாம். இந்த விக்கலை நிற்க வைப்பதற்கு சில பாதுகாப்பான முறைகளைக் கையாள வேண்டும். இதில் பிறந்த குழந்தைக்கு வரும் விக்கலை நிறுத்துவதற்கான முறைகளைக் காணலாம்.

குழந்தைகளுக்கு வரும் விக்கல் நிறுத்த செய்ய வேண்டிய முறைகள்

விக்கல் என்பது பொதுவாக அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒன்றாக இருந்தாலும், பிறக்கும் குழந்தைகளுக்கு முக்கியமானதாகும். குழந்தை பிறந்தது முதல் ஒரு வருடம் வரையே விக்கல் அடிக்கடி வந்து கொண்டே இருக்கும். அதன் பிறகும் விக்கல் தொடர்ந்து வந்தால், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. இதில் பிறந்த குழந்தைகளுக்கு வரும் விக்கல் நிறுத்த செய்ய வேண்டிய சில முறைகளைக் கையாள வேண்டும். அவற்றைப் பற்றிக் காணலாம்.

குழந்தையை நிமிர வைத்தல்

பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் அல்லது புட்டிப்பால் கொடுத்த பிறகு, குழந்தையை நிறுத்தி வைப்பது நல்லது. இவ்வாறு நிறுத்தி வைப்பதால், குழந்தை வயிற்றில் இருந்து உறிஞ்சப்பட்ட காற்று வெளியேற உதவுகிறது. இது அவர்களுக்கு பால் குடித்த பின் வரக்கூடிய விக்கலை நிறுத்த உதவுகிறது.

முதுகில் தேய்த்து விடுதல்

குழந்தைகள் பால் குடித்த முடித்த உடன், அதன் முதுகில் தேய்த்து விட வேண்டும். இது குழந்தைகளுக்கு மென்மையான அனுபவத்தை உண்டாக்கும். இது விக்கல் ஏற்படுவதிலிருந்து விடுபட வைக்கிறது. இந்த நிலைகளின் மூலம் குழந்தைகளுக்கு விக்கல் உண்டாவதைத் தவிர்க்க முடியும்.

மெதுவாக பால் அருந்த வைத்தல்

குழந்தைகளுக்குப் பால் கொடுக்கும் போது வேகமாகப் பாலூட்டுவதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைக்கு புட்டிப்பால் கொடுக்கும் போது, அதன் வயிறு விரிவடைந்து உதரவிதானத்திற்கு எதிராகத் தள்ளுவதாக இருக்கும். இதுவே குழந்தைகளுக்கு விக்கல் உண்டாக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும். இவற்றைத் தவிர்க்க, மெதுவாக பால் அளிக்கும் புட்டிபாட்டில்களைப் பயன்படுத்தலாம்.

அடுத்ததை படிக்கவும்

Overeating: அதிகமாக சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? இதை கைவிட சிம்பிள் டிப்ஸ்!

பொறுப்புத் துறப்பு

குறிச்சொற்கள்