பிள்ளைகளுக்கு உணவை சாப்பிட கற்றுக்கொடுப்பது எப்படி?

  • SHARE
  • FOLLOW
பிள்ளைகளுக்கு உணவை சாப்பிட கற்றுக்கொடுப்பது எப்படி?

உங்கள் குழந்தை திட உணவை உண்ணத் தொடங்கும் நேரத்தில் மென்று சாப்பிட கற்றுக் கொடுக்க வேண்டும். இதற்கான எளிதான வழிகளைக் கற்றுக்கொள்ளுங்கள்.

குழந்தை பிறந்து 6 மாதங்கள்வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. 6 மாதத்திற்கு பிறகே குழந்தைக்குத் திட உணவு அறிமுகப்படுத்தப்பட வேண்டும். திட உணவைக் கொடுப்பதற்கு முன், உங்கள் குழந்தைக்கு உணவை மெல்ல கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம். இதுவரை பால் மட்டுமே கொடுக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு, உணவை மெல்லுவது ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.


உங்கள் குழந்தை இன்னும் திட உணவை உட்கொள்ளத் தொடங்கவில்லை என்றால், உங்கள் குழந்தைக்குத் திட உணவை மென்று சாப்பிட கற்றுக்கொடுக்கும் சில எளிய வழிமுறைகளை நாங்கள் உங்களுக்குச் கற்றுக்கொடுக்கப் போகிறோம்.

செய்து காட்டி கற்றுக்கொடுங்கள்

பல சமயங்களில் குழந்தை உணவை மெல்லாமல் வாயிலேயே வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கும் நிலையில் குழந்தைக்குத் தொண்டை அடைப்பு ஏற்படலாம்.

இந்தச் சூழ்நிலையைத் தவிர்க்க மென்று சாப்பிட கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம். குழந்தை முன், அவர்கள் பார்க்கும் சமயத்தில் உங்கள் வாயில் உணவுப் பொருளை வைத்து மெல்லத் தொடங்குங்கள்.

உங்களைப் பார்த்துப் பின்பற்றிக் குழந்தைகள் உணவை மென்று சாப்பிட கற்றுக் கொள்வார்கள்.

ஆரம்பத்தில் மென்மையான உணவுகளைக் கொடுங்கள்

நீங்கள் குழந்தைக்குத் திட உணவை அறிமுகப்படுத்தத் தொடங்கும் சமயத்தில், எளிதாக மெல்லக்கூடிய மென்மையான உணவைக் கொடுங்கள்.

மென்மையான காய்கறிகள், பழங்களை, குழைவான அரிசி பருப்பு சாதம் கொடுக்கலாம். குழந்தையின் தொண்டையில் சிக்கிக் கொள்ளக்கூடிய திராட்சை, பாப்கார்ன் போன்ற உணவு பொருட்களைக் கட்டாயமாகக் கொடுக்கக் கூடாது.

குழந்தை அழும்போது உணவு கொடுக்க வேண்டாம்

குழந்தைக்கு வயிறு நிரம்பிய பிறகு மென்று சாப்பிடுவதில் விருப்பம் இருக்காது.

ஆரம்பத்தில் சில குழந்தைகள் மென்று சாப்பிடுவதை தவிர்க்கலாம் அல்லது சிறிதுநேரம் எடுத்து மென்று சாப்பிடலாம், எதுவாக இருப்பினும் குழந்தை மென்று சாப்பிட கற்றுக்கொள்வதற்கான நேரத்தைக் கொடுங்கள்.

குழந்தை எரிச்சலோடு அழும்பொழுது கட்டாயப்படுத்தி மென்று சாப்பிட பழக்க வேண்டாம். குழந்தை அழும்பொழுது உணவு கொடுத்தால் உணவு தொண்டையில் சிக்கி கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. கட்டாயப்படுத்தாமல் குழந்தையின் உணவு நேரத்தை அழகாக்குங்கள்.

உணவைப் பகுதிகளாகப் பிரித்துக் கொடுங்கள்

குழந்தைக்கு ஒரே சமயத்தில் சாப்பிடுவதற்கு அதிகப்படியான உணவுகளைக் கொடுக்காமல் சிறு சிறு பகுதிகளாகக் கொடுக்கலாம்.

குழந்தை அதிக உணவை வாயில் வைத்திருந்தால், உணவு சிக்கிக்கொள்ளலாம் மேலும் மெல்லவும் கடினமாக இருக்கும். உங்களுடன் உட்கார்ந்திருக்கும்போது குழந்தைக்கு உணவளியுங்கள், மென்மையான உணவை இருவரும் சேர்ந்து சாப்பிட்டு உணவு நேரத்தை அழகாக்குங்கள். உங்களைப் பார்த்து மென்று சாப்பிடுவதற்கு குழந்தை தானாகவே கற்றுக் கொள்ளும்.

மேற்கூறிய முறைகளைப் பின்பற்றுவதன் மூலம், குழந்தைகள் உணவை மென்று சாப்பிடக் கற்றுக் கொள்வார்கள். மேலும் தகவலுக்கு, ஒன்லி-மை-ஹெல்த் பெற்றோருக்கான உதவிக்குறிப்புகள் பகுதியைப் படிக்கவும்.

Images Credit: freepik

அடுத்ததை படிக்கவும்

Overeating: அதிகமாக சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? இதை கைவிட சிம்பிள் டிப்ஸ்!

பொறுப்புத் துறப்பு

குறிச்சொற்கள்