Back Pain Home Remedies: முதுகுவலி என்பது நம்மில் பெரும்பாலானோருக்கு ஒரு கட்டத்தில் பொதுவானதாகிவிட்டது. 30 முதல் 50 வயது வரை உள்ளவர்கள் பொதுவாக முதுகுவலியால் பாதிக்கப்படுகின்றனர். வயது தொடர்பான மாற்றங்களால் இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது. நாம் வயதாகும்போது, முதுகெலும்புகளுக்கு இடையே உள்ள திரவம் குறைகிறது. இதன் விளைவாக, முதுகெலும்பில் உள்ள டிஸ்க்குகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இதனுடன் தசை சக்தி குறைவதால் முதுகுவலி அதிகரிக்கிறது.
முதுகு வலி குறைய வீட்டு வைத்தியம்
மேலும் முதுகுவலி என்பது டிஜிட்டல் யுகத்தில் பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. அமர்ந்த இடத்தில் வேலை பார்ப்பது, நடக்காமல் இருப்பது, டூவீலரில் அதிக நேரம் பயணிக்கும் வேலை என பல்வேறு காரணங்களால் இந்த பிரச்சனை வருகிறது. முதுகு வலி என்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இது பல்வேறு நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். நீண்ட நேரம் முதுகுவலி பிரச்சனை இருக்கும் பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
பொதுவாகவே கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள் இடையில் எழாமல் அப்படியே உட்கார்ந்து விடுகிறார்கள். இதன் காரணமாகவும் முதுகுவலி பிரச்சனை வருகிறது. உடற்பயிற்சி என எதுவும் செய்வதில்லை. இதன்காரணமாக எடை அதிகரிப்பு, தசை சுளுக்கு, முதுகு தசை பிடிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது. இடுப்பு மற்றும் தொடையின் பின்புறத்தில் உள்ள நரம்புகள், முதுகெலும்பை கால்களுடன் இணைக்கிறது.
முதுகு வலியை குறைப்பது எப்படி?
முதுகு வலியால் அவதிப்படுபவர்கள் அதிக ஓய்வு எடுத்தால் முதுகு வலி அதிகமாகி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவர்கள் தங்கள் அன்றாட வேலைகளை செய்ய முயல வேண்டும். மூன்று நாட்களுக்கு மேல் பெட் ரெஸ்ட் எடுக்கக் கூடாது. முடிந்தவரை உடலை சுறுசுறுப்பாக வைத்தில் பிரச்சனையின் தீவிரம் குறையும்.
உடற்பயிற்சி
முதுகு வலிக்கு உடற்பயிற்சியே சிறந்த தீர்வு என்பதை உணருங்கள். வாக்கிங் போன்ற சிறிய பயிற்சிகள் முதுகு வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். இந்த பயிற்சிகள் உங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப இருக்க வேண்டும். உடற்பயிற்சி முறையாகவும் ஆலோசனை உடனும் மேற்கொள்ள வேண்டும்.
கடுமையான உடற்பயிற்சி
ஜிம்மில் தீவிரமான உடற்பயிற்சிகளைச் செய்வது இந்தப் பிரச்சனையை ஏற்படுத்தலாம். அப்போது தெரியாவிட்டாலும் சில ஆண்டுகளில் இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும். இந்த பிரச்சனை காலப்போக்கில் மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது. அன்றாடப் பணிகளைச் செய்யும்போது முதுகில் தேவையில்லாத அழுத்தத்தால் முதுகுவலி பிரச்னை வர வாய்ப்புள்ளது.
சரியான முறையில் தூங்குவது
முதுகுவலியைக் குறைக்க ஓய்வு அவசியம். இருப்பினும், தூங்கும் போது உங்கள் நிலையும் சரியாக இருக்க வேண்டும். உங்கள் நிலை சரியில்லாதபோது பிரச்சனை மோசமாகி, நீங்கள் உறங்கும் மெத்தை முதுகுவலியை ஏற்படுத்துகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பிரேஸ்களை தவிர்க்கவும்
பலர் முதுகுவலியைக் குறைக்க பிரேஸ்களைப் பயன்படுத்தத் தொடங்குகிறார்கள், அவற்றைப் பழக்கப்படுத்துகிறார்கள். பிரேஸ்கள் அதிக எடை தூக்குதல் மற்றும் அதிக மன அழுத்தத்தை உள்ளடக்கிய செயல்களுக்கு மட்டுமே இருக்க வேண்டும். இவற்றை பதினைந்து நிமிடங்களுக்கு மேல் பயன்படுத்தக்கூடாது. நாள் முழுவதும் அவற்றைப் பயன்படுத்துவதால், இதை நாள்முழுவதும் பயன்படுத்தினால் தசைகள் பலவீனம் அடையும்.
இந்த வழிகள் அனைத்தும் முதுகுவலியை குறைக்க உதவும் என்றாலும் தீவிரத்தை உணர்ந்து உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
Image Source: FreePik