எடை இழப்புக்கு வெள்ளரி விதைகளை எவ்வாறு பயன்படுத்துவது?
By Balakarthik Balasubramaniyan
20 Sep 2023
வெள்ளரி விதை ஆரோக்கிய நன்மைகள்
எடை இழப்புக்கு பலரும் பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர். ஆனால் வெள்ளரி விதைகள் எடை இழப்புக்கு உதவும் என உங்களுக்கு தெரியுமா? இந்த பதிவை முழுமையாக படியுங்கள்.
ஊட்டச்சத்து நன்மைகள்
வெள்ளரி விதையில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. வெள்ளரி விதைகள் ஊட்டச்சத்தை அதிகரித்து எடை இழப்பை ஏற்படுத்தும்.
குறைந்த கலோரி
வெள்ளரி விதைகளை சிற்றுண்டியாக உட்கொள்வதன் மூலம் உங்களுக்கு நீண்ட நேரம் பசி எடுக்காது. இதில் குறைந்த கலோரிகள் மட்டுமே உண்டு. இதனால் வயிறு நிறைவான உணர்வை தரும்.
ஸ்மூத்திகளில் சேர்க்கலாம்
கூடுதல் ஊட்டச்சத்துக்காக உங்கள் ஸ்மூத்திகளில் வெள்ளரி விதைகளை சேர்க்கலாம். இந்த விதைகள் உங்கள் ஆரோக்கிய நன்மைகளை மேம்படுத்தும்.
சாலட் பூஸ்ட்
நார்ச்சத்து அதிகமாக பெற வெள்ளரி விதைகளை சாலட்களில் தெளிக்கலாம். இது உங்கள் சாலட் ஆரோக்கிய நன்மைகளை அதிகரிக்கும்.
உணவில் சேர்த்து சமைக்கலாம்
வெள்ளரி விதைகளை நுணுக்கி அதை உணவுகளுக்கு சுவையூட்டூம் மசாலா பவுடராக பயன்படுத்தலாம். இது உங்கள் உணவின் ஆரோக்கிய நன்மைகளையும் அதிகரிக்கும்.
வெள்ளரி விதை டீ
உங்கள் வளர்சிதை மாற்றும் மற்றும் செரிமானத்தை அதிகரிக்க வெள்ளரி விதை தேநீர் காய்ச்சி குடிக்கலாம். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்.
முழுமையாக படித்ததற்கு நன்றி
உங்கள் எடை இழப்பு செயல்முறைக்கு உங்கள் முயற்சிகள் உடன் கூடுதலாக வெள்ளரி விதைகளை பயன்படுத்தலாம். இதுபோன்ற ஆரோக்கியத் தகவலுக்கு Onlymyhealth உடன் இணைந்திருங்கள்.