இஞ்சியை இப்படி சாப்பிட்டால் எடையை ஈஸியா குறைக்கலாம்!

By Balakarthik Balasubramaniyan
24 Sep 2023

இஞ்சி மருத்துவ குணம் ஆய்ந்து என நம் பலருக்கும் தெரியும். இவற்றை பொதுவாக, தேநீரின் சுவையை அதிகரிக்கவும், சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் பெறவும் பயன்படுத்துவோம். இஞ்சி நம் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடையை குறைக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?

மருத்துவ குணம்

இஞ்சி அதிக மருத்துவ குணங்கள் நிறைந்தது. இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், உடலை பல பிரச்சனைகளில் இருந்து விலக்கி வைக்கிறது. இஞ்சி எடை குறைப்பதிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இஞ்சி தண்ணீர்

இஞ்சி தண்ணீர் தயாரிக்க, முதலில் 1 டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து, பின்னர் இஞ்சியை பொடியாக நறுக்கி அதில் சேர்க்கவும். இந்த நீரை 10 நிமிடம் கொதிக்க வைத்த பிறகு, காலை உணவுக்கு முன் மற்றும் மாலை இரவு உணவிற்கு முன் குடிக்கவும்.

குறைந்த அளவு கொழுப்பு

இவ்வாறு செய்வதன் மூலம், வளர்சிதை மாற்றம் துரிதப்படுத்தப்பட்டு, உடலில் சேரும் கொழுப்பு குறைகிறது. இந்த நீரை குடிப்பதால் கை, தொடை மற்றும் இடுப்பு கொழுப்பு குறைகிறது.

இஞ்சி மற்றும் எலுமிச்சை

இவை இரண்டையும் சாப்பிட்டு வந்தால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். இதைச் செய்ய, முதலில் ஒரு கிளாஸில் தண்ணீரைச் சூடாக்கி, பின்னர் இஞ்சியைப் பொடியாக நறுக்கி சேர்க்கவும்.

வெறும் வயிற்றில் குடிக்கவும்

தண்ணீர் கொதித்ததும், எலுமிச்சை சாறு மற்றும் கருப்பு உப்பு சேர்த்து குடித்து வந்தால், உடல் எடை வேகமாக குறையும். இந்த பானத்தை வெறும் வயிற்றில் குடிக்கவும்.

இஞ்சி மற்றும் கிரீன் டீ

இஞ்சி மற்றும் கிரீன் டீ நுகர்வு உடல் எடையை குறைக்க மிகவும் உதவியாக இருக்கும். கிரீன் டீயில் உள்ள கேடசின் மற்றும் காஃபின் உடல் எடையை எளிதில் குறைக்க உதவுகிறது.

எப்படி தயாரிப்பது?

இதை செய்ய, தண்ணீரை சூடாக்கி, அதில் நறுக்கிய இஞ்சியை சேர்க்கவும். கொதித்த பிறகு, இந்த பானத்தில் கிரீன் டீயை சேர்த்து, பின்னர் குடிக்கவும். இந்த பானத்தை காலை உணவுடன் உட்கொள்ளலாம். இது உடல் எடையை குறைக்க உதவும்.