Ways To Use Hair Oil: தலைமுடி நீளமாக, கருகருவென, ஆரோக்கியமாக வளர வேண்டும் என்பது பெரும்பாலும் அனைத்து பெண்களின் விருப்பமாகும். தலைமுடி பராமரிப்பில் முடிக்கு ஈரப்பதம், பொலிவு, மற்றும் பளபளப்பை அதிகரிக்க தலைக்கு எண்ணெய் வைப்பதும் ஒன்றாகும். முடிக்கு எண்ணெய் தடவுவது, முடியை மென்மையாக வைப்பதுடன், முடிக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை நிரப்பும் வழியாகும். உச்சந்தலையில் எண்ணெய் தடவி மசாஜ் செய்வது தலையில் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது. இது முடியை நன்கு வளரச் செய்வதுடன், ஆரோக்கியத்தையும் பராமரிக்கிறது.
தலைமுடிக்கு சரியான முறையில் எண்ணெய் தடவுவது எப்படி
தலைமுடிக்கு எண்ணெய் வைப்பதில் சில முறைகள் உள்ளன. உச்சந்தலையில் வைத்து மசாஜ் செய்யும் போது இரத்த ஓட்டம் மேம்பாடு அடைகிறது. தலைக்கு சரியான முறையில் எண்ணெய் வைப்பது பொடுகு தொல்லையை நீக்க உதவுகிறது. இப்போது தலைமுடிக்கு சரியான முறையில் எப்படி எண்ணெய் தடவுவது என்பதைக் காணலாம்.
- முதலில் தலைமுடியில் சிக்கல்கள் இருப்பின் அதனை அகற்றிக் கொள்ள வேண்டும்.
- விரல்களைப் பயன்படுத்தி, தலைமுடியைப் பிரித்து சில துளிகள் எண்ணெயை உச்சந்தலையில் தடவ வேண்டும்.
- பின் உச்சந்தலையில் எண்ணெயை விரல்களால் ஒரு வட்ட இயக்கத்தில் இயக்கி மசாஜ் செய்ய வேண்டும்.
- இவ்வாறு உச்சந்தலையில் மசாஜ் செய்த பின், தலைமுடியின் வேர் முதல் நுனி வரை எண்ணெயை இயக்க வேண்டும்.
- தலைமுடி முழுவதும் சமமாக பரப்புமாறு எண்ணெயைத் தடவ வேண்டும்.
- தலைமுடியில் எண்ணெயை 30 முதல் ஒரு மணி நேரம் வரை வைத்து, லேசான பாரபென் இல்லாத ஷாம்பூவைப் பயன்படுத்தி தலைமுடியைக் கழுவவும்.
- தலைமுடியை குளிர்ந்த நீரில் கழுவுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Flaxseed Hair Growth: முடி நீளமாக வளர ஆளி விதையை எப்படி பயன்படுத்துவது?
தலைமுடிக்கு எண்ணெய் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்
முடிக்கு எண்ணெய் தடவுவதன் மூலம் பல்வேறு நன்மைகளைப் பெறலாம்.
முடி சேதத்தைக் குறைக்க
சில சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் உடைப்பு போன்றவற்றிலிருந்து முடியைப் பாதுகாக்க இயற்கையாகவே எண்ணெய் உதவுகிறது. மேலும் இது முடியை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
முடி உடைவதைத் தடுக்க
தலைமுடிக்கு எண்ணெய் தடவுவது, முடியின் மயிர்க்கால்கள் வரை வலுப்படுத்த உதவுகிறது. இது முடி உதிர்வைத் தடுக்க உதவுகிறது. உச்சந்தலையில் எண்ணெய் தடவுவதன் மூலம், ஆரோக்கியமான முடி வளர்ச்சியை மேம்படுத்தலாம்.
பொடுகு நீங்க
தலைமுடிக்கு எண்ணெய் தடவி வருவதன் மூலம், பொடுகுத் தொல்லையைக் குறைக்கலாம். மேலும் உச்சந்தலையை ஆரோக்கியமாக மற்றும் சுத்தமாக வைத்திருக்கலாம்.
பிளவு முனைகளைத் தவிர்க்க
சரியான முறையில் தலைக்கு எண்ணெய் வைப்பது பிளவு முனைகளைத் தடுக்க உதவுகிறது. இது முடியை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Rice Water For Hair: முடி நீளமாகவும், கருமையாகவும் வளர அரிசி நீரை இப்படி பயன்படுத்துங்க.
எந்தெந்த எண்ணெய் வகைகளைப் பயன்படுத்தலாம்
தலைமுடி வளர்ச்சிக்கு எந்தெந்த எண்ணெய் வகைகளைப் பயன்படுத்தலாம் என்பதைக் காண்போம்.
எள்விதை எண்ணெய்
எள் விதைகளிலிருந்து பெறப்படும் எள் எண்ணெய் பிளவு முனைகளைத் தடுக்க உதவுகிறது. இதில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், வைட்டமின் பி1, மாங்கனீஸ், துத்தநாகம் போன்றவை அதிக அளவில் உள்ளன. இந்த எண்ணெய் உச்சந்தலையை ஈரப்பதமாக்குவதுடன், முடியை மென்மையாக்குகிறது. மேலும் இதன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகள் பொடுகுத் தொல்லையைத் தடுக்க உதவுகிறது.
பிரிங்கராஜ் எண்ணெய்
ஆயுர்வேத வல்லுநர்கள் பரிந்துரைப்படி, பிரிங்கராஜ் எண்ணெய் அல்லது ஆம்லா எண்ணெய் முடி ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது. இரண்டு எண்ணெய்களில் மன அழுத்தத்தை விடுவிக்க உதவுகின்றன. மேலும் செரிமான வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ஆற்றல் உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெயில் வைட்டமின் பி, ஈ மற்றும் கே போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது. மேலும் இதில் பி7 என்ற பயோட்டினும் நிறைந்துள்ளது. இவை முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.
தேங்காய் எண்ணெய்
அனைவரும் உபயோகிக்கும் பிரபல எண்ணெயாக தேங்காய் எண்ணெய் உள்ளது. இதில் உள்ள முக்கிய கொழுப்பு அமிலமான லாரிக் அமிலம், முடி புரதத்திற்கு வலுவான தொடர்பைக் கொண்டுள்ளது. இதன் மூலம் சேதமடைந்த மற்றும் ஆரோக்கியமான முடி இரண்டிலும் புரத இழப்பைக் குறைக்க தேங்காய் எண்ணெய் பயனுள்ளதாக அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Curry Leaves For Hair: நீளமா, கருகருனு முடி வளர கறிவேப்பிலையை இப்படி பயன்படுத்துங்க
Image Source: Freepik