கர்ப்ப பரிசோதனையை மேற்கொள்வதில், பெண்கள் ஆவலான அனுபவத்தை உணர்கிறார்கள். கர்ப்ப சோதனை எளியதாகவும், அதற்குப் பயன்படுத்தும் கருவிகள் சிறியதாக இருப்பினும், அதன் முடிவுகள் வாழ்க்கையை மாற்றக் கூடியதாக இருக்கும் தருணமாக அமையும். பெண் கர்ப்பம் தரித்துள்ளாரா என்பது, அவரது உடலில் அதாவது இரத்தத்தில் அல்லது சிறுநீரில் கர்ப்ப கால சுரப்பி உள்ளதைப் பொறுத்தே கூறப்படுகிறது. இந்த பரிசோதனைக்கு பல விதமான கர்ப்ப சோதனைகள் உள்ளன.
கர்ப்ப சோதனை
கர்ப்ப சோதனையில் பெண்ணின் சிறுநீரிலோ அல்லது இரத்தத்திலோ, ஹெச்.சி.ஜூ எனப்படும் சுரப்பி கண்டறிதலே இதன் அடிப்படைக் கொள்கை ஆகும். இந்த சுரப்பி தோன்றுதலே கர்ப்பத்தின் முதன்மைச் செயல் ஆகும். இந்த சுரப்பி கண்டறியப்படுதலுடன் அல்ட்ராசவுண்ட் மூலமும் கரு இருப்பதைக் கண்டறியலாம். அந்த வகையில், பெண்கள் எளிதாக வீட்டிலேயே கர்ப்ப பரிசோதனையை மேற்கொள்ளும் வகையில் Pregnancy Test Kit-களும் உள்ளன. அவற்றைப் பற்றி இங்கு காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: கர்ப்ப காலத்தின் தைராய்டு அளவுகளும், தீர்வுகளும்!
கர்ப்ப பரிசோதனை கிட் பயன்படுத்துவது எப்படி?
கர்ப்ப பரிசோதனை கிட்டைப் பயன்படுத்தி, பெண்ணின் சிறுநீரில் மனித சாரியோநிக் கோநாடாட்ரோபின் எனப்படும் சுரப்பி கண்டறியப்பட்டு கர்ப்பம் உறுதி செய்யப்படுகிறது.
கர்ப்ப பரிசோதனை செய்யும் பெண்கள் காலையில் எழுந்ததும் வெளியேற்றும் முதல் சிறுநீரை சிறிய டப்பா ஒன்றில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு, கிட்டில் சிறுநீர் விடுவதற்கென பகுதி ஒன்று இருக்கும். இதில் 3 சொட்டுகள் வீதம் சிறுநீரை விட்டு 5 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டும்.
பிறகு கர்ப்ப பரிசோதனை கிட்டில் தோன்றக்கூடிய கோடுகளின் அடிப்படையில் பெண் கர்ப்பமா இல்லையா என்பதை உணரலாம்.
அதன் படி, அந்த கிட்டில் பிங்க் நிறத்தில் இரண்டு கோடுகள் தெரிந்தால் கர்ப்பம் உறுதி செய்யப்படுகிறது. இந்த இரண்டு கோடுகள் நல்ல அடர்ந்த நிறத்தில் தென்படும்.
ஒரு கோடு மட்டும் தெரிந்தால் கர்ப்ப பரிசோதனை முடிவு நெகட்டிவ் ஆக கருதப்படுகிறது.
அதே சமயம், இரண்டு கோடுகளில் ஒரு கோடு அடர் பிங்க் நிறத்துடனும், மற்றொரு கோடு மெல்லியதாகவும் காணப்பட்டால் சரியாக முடிவு காட்டப்படவில்லை என்பதே ஆகும். இந்த நேரத்தில், கர்ப்ப சுரப்பி ஹெச்.சி.ஜி குறைவாக இருந்திருக்கலாம். அதன் காரணமாக கோடு மெல்லியதாக தோன்றலாம்.

இந்த பதிவும் உதவலாம்: கர்ப்பகாலத்தில் ஆரஞ்சு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? அட இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
கர்ப்ப பரிசோதனை செய்ய சரியான நேரம்
மாதவிடாய் சுழற்சி சரியாக இருப்பின், கடைசியாக மாதவிடாய் முடிந்த 35 நாள் முதல் 40 நாள்களுக்குப் பிறகு, இந்த கர்ப்ப பரிசோதனை கிட் சோதனையைச் செய்யலாம்.
இந்த நேரத்தில் முடிவு சரியாக கிடைக்கவில்லையெனில், அடுத்த 7 அல்லது 10 நாள்கள் கழித்து மீண்டும் பரிசோதனையை மேற்கொள்ளலாம்.
குறிப்பாக, அதிகாலை நேரத்தில் வெளியேறக்கூடிய சிறுநீரில் ஹெச்.சி.ஜி சுரப்பி அதிகமாக காணப்படும். எனவே, அதிகாலை நேரத்தில் பரிசோதனையை மேற்கொள்ளலாம்.