சரும சுருக்கத்தை குறைக்க வைட்டமின் E காப்ஸ்யூலை எப்படி பயன்படுத்துவது?

By Balakarthik Balasubramaniyan
25 Sep 2023

அழகான மற்றும் பளபளப்பான சருமத்தைப் பெற நாம் செய்யாத வைத்தியம் இருக்க முடியாது. ஆனால், வயதாக ஆக முகத்தில் சுருக்கங்கள் அதிகரிக்கும். கண்களில் ஏற்படும் சுருக்கத்தை குறைக்க வைட்டமின் ஈ காப்ஸ்யூல்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை இங்கே பார்க்கலாம்.

வைட்டமின் ஈ காப்ஸ்யூல்

வைட்டமின் ஈ கேப்ஸ்யூலில் வயதான எதிர்ப்பு பண்புகளை கொண்டது. இதில் இல்ல அமிலம் கண்களைச் சுற்றியுள்ள சுருக்கங்களைக் குறைக்க உதவுகிறது. இது சருமத்தில் மெலனின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. இதை பயன்படுத்துவதால், ஹைப்பர் பிக்மென்டேஷன் குறையும்.

எப்படி பயன்படுத்துவது?

கண் சுருக்கங்களை நீக்க வைட்டமின் ஈ காப்ஸ்யூல்களை நேரடியாகப் பயன்படுத்தலாம். 2 காப்ஸ்யூல்களை எடுத்து பாதியாக வெட்டவும். பஞ்சின் உதவியுடன், எண்ணெயை கண்களின் கீழ் தடவவும். 5 முதல் 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும்.

தேங்காய் எண்ணெய்

வைட்டமின் ஈ காப்ஸ்யூல்களை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவினால் சருமம் இளமையாக இருக்கும். சுருக்கங்களும் நீங்கும். இது வயதான எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

அலோ வேரா ஜெல்

கற்றாழை ஜெல்லுடன் வைட்டமின் ஈ காப்ஸ்யூல்களை கலந்து முகம் முழுவதும் தடவலாம். 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்திருந்த பிறகு, முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

பாதாம் எண்ணெய்

வைட்டமின் ஈ கேப்சூல்களை பாதாம் எண்ணெயுடன் கலந்து தடவினால் கண்களுக்குக் கீழே உள்ள சுருக்கங்கள் குறையும். இதில் உள்ள நுண்ணூட்டச்சத்துக்களும் சருமத்தை பளபளப்பாக மாற்ற உதவுகிறது.

கிளிசரின்

வைட்டமின் ஈ கேப்ஸ்யூலில் 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டீஸ்பூன் கிளிசரின் கலந்து பேஸ்ட்டை உருவாக்கவும். உங்கள் கண்களைச் சுற்றி அதைப் பயன்படுத்துங்கள். 5 நிமிடங்களுக்கு பின், ஈரமான காட்டன் கொண்டு சுத்தம் செய்யவும்.