நடைமுறையில் உள்ள பல்வேறு சிறந்த தொழில்நுட்பங்களுடன் கூடிய சிகிச்சை முறைகள் சில தீர்க்க முடியாத பிரச்சனைகளுக்கும் தீர்வு அளிக்கின்றன. அந்த வகையிலேயே, பெண்களின் கருவுறாமை பிரச்சனையும் ஒன்று. இது பலரும் சந்திக்கக் கூடிய பிரச்சனையாக இருந்தாலும், நவீன தொழில்நுட்பமான செயற்கை முறை கருத்தரித்தல் மூலம் பெண்கள் குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியும்.
மருத்துவ ரீதியாக, பலதரப்பட்ட சிகிச்சைகள் அதிக விலையுயர்ந்த செலவுகளைத் தரவல்லதாக அமைகிறது. உடல்நலக் காப்பீடு என்ற திட்டத்தின் மூலம், பெரும்பாலானோர் சிகிச்சைகளுக்கான செலவைக் கட்டுப்படுத்த முடியும். மருத்துவமனையில் சேர்க்கும் செலவுகள் முதல் சிகிச்சை முன் மற்றும் பின் ஏற்படக்கூடிய செலவுகள், ஐசியு கட்டணங்கள், தினப்பராமரிப்பு செலவு போன்ற சிகிச்சையின் பலதரப்பட்ட அம்சங்களுக்குத் தகுந்தவாறு காப்பீடு வழங்கப்படுகிறது. அந்த வகையில், செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை மருத்துவ காப்பீட்டீன் கீழ் உள்ளதா, இல்லையா என்பதைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: கர்ப்ப பரிசோதனை கருவியை பயன்படுத்துவது எப்படி?
செயற்கை கருத்தரித்தல் காப்பீட்டீன் கீழ் உள்ளதா?
ஐவிஎஃப் எனப்படும் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை, மருத்துவ ரீதியாக அவசியமான சிகிச்சையாக கருதப்படவில்லை. எனவே, இந்த சிகிச்சைக்கான செலவு சுகாதார காப்பீட்டு பாலிசியின் கீழ் அல்லது மருத்துவ உரிமைகோரலின் கீழ் இருக்காது. எனவே, இந்த சிகிச்சை மேற்கொள்ளும் தம்பதிகள் அல்லது ஐவிஎஃப் சிகிச்சை உட்பட்ட நபர்கள் சிகிச்சைக்கான முழு செலவையும் அவர்களே ஏற்றுக் கொள்வதாக உள்ளது. இந்த செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை விலை உயர்ந்த சிகிச்சையாகும். இதனால், சில காப்பீட்டாளர்கள் மட்டும் ஒரு குறிப்பிட்ட அளவிலான கவரேஜ் வழங்குகின்றனர்.
இதில் ஐவிஎஃப் சிகிச்சைக்கான முழு செலவும் அடங்குகிறது. மேலும், IVF சுழற்சி, மருத்துவ பரிசோதனை அல்லது ஹார்மோன் மதிப்பீடுகள் செலவு, ஓடி செலவு போன்றவையும் அடங்குகிறது. காப்பீட்டாளர்களால் வழங்கப்படக்கூடிய கவரேஜ் மாறுபடலாம். இயற்கையாக கருத்தரிக்க முடியாத தம்பதியர்களின் தேவைக்காக, இந்த காப்பீட்டு வழங்கத் தொடங்கப்பட்டது.