மார்பக புற்றுநோய் தொடர்பான கட்டுக்கதைகளைக் கண்மூடித்தனமாக நம்புவது ஆபத்தானது, மருத்துவரிடமிருந்து உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.
மார்பகப் புற்றுநோய் தொடர்பான கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகள்: மார்பகப் புற்றுநோய் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஏற்படலாம். ஆனால் பெரும்பாலும், இந்தப் பிரச்சனை பெண்களிடமே காணப்படுகிறது. மார்பகங்களில், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியால் இந்த வகை புற்றுநோய் ஆரம்பமாகிறது. பொதுவாக மார்பக புற்றுநோயில், புற்றுநோய் செல்கள் மார்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கட்டியாக உருவாகி இருக்கும். உலகளவில் இறப்புக்கான பொதுவான காரணங்களில், மார்பக புற்றுநோய் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
மார்பக புற்று நோய்குறித்த விழிப்புணர்வு இல்லாததால், பெண்கள் இந்த நோயால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். இது தவிர, மார்பக புற்றுநோய்குறித்து இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் கூறும் அனைத்து விஷயங்களையும் கண்மூடித்தனமாக நம்புவது ஆபத்தானது. மார்பக புற்றுநோயைப் பற்றிய பொதுவான கட்டுக்கதைகள் மற்றும் அவற்றின் உண்மையை அறிய, ஃபோர்டிஸ் மருத்துவமனை முலுண்ட் மற்றும் ஃபோர்டிஸ் மருத்துவமனை வாஷியின் புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் உமா டாங்கி அவர்களைத் தொடர்புகொண்டு ஆலோசனை நடத்தினோம்.
மார்பக புற்றுநோய்குறித்த பொதுவான கட்டுக்கதைகள் மற்றும் அவற்றின் உண்மைகளைப் பற்றி டாக்டர் உமாவிடமிருந்து தெரிந்து கொள்வோம்.
மார்பக புற்றுநோய் கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகள்
மார்பக புற்றுநோய் தொடர்பான சில பொதுவான கட்டுக்கதைகள் அல்லது தவறான கருத்துக்கள் மற்றும் அவற்றின் உண்மை பின்வருமாறு-
கட்டுக்கதை 1: தன் குடும்பத்தில் யாரும் மார்பக புற்றுநோயால் பாதிக்கபட வில்லை எனில், தமக்கும் புற்றுநோய் வரும் ஆபத்துகள் இல்லை
உண்மை: குடும்ப வரலாறு இல்லாமல் மார்பக புற்று நோய் வராது என்ற தவறான கருத்து நிலவி வருகிறது. இதன் உண்மை இதற்கு நேர்மாறானது. மார்பக புற்றுநோயின் பெரும்பாலான நிகழ்வுகளில், குடும்ப வரலாறு இல்லாதவர்கள் தான் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டுக்கதை 2: ப்ரா அணிவது மார்பக புற்றுநோயை உண்டாக்கும்
உண்மை: ப்ரா அணிவது மார்பகப் புற்றுநோயை உண்டாக்கும் என்ற தவறான தகவல் சமூக வலைதளங்களிலும், இணையத்திலும் அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது. இது குறித்து, விஞ்ஞானிகளோ அல்லது மருத்துவர்களோ எந்த உறுதியான ஆதாரத்தையும் இதுவரை வெளியிடவில்லை. எனவே ப்ரா அணிவதால் மார்பக புற்றுநோய் வரும் என்று சொல்வது முற்றிலும் தவறானது.
கட்டுக்கதை 3: எடை கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவுப்பழக்கம் உள்ளவர்கள் மார்பக புற்றுநோயைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்
உண்மை: உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது, ஆரோக்கியமான உணவை உட்கொள்வது, தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது மற்றும் மது அருந்துவதை கட்டுப்படுத்துவது ஆகியவை மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்குமே தவிர, புற்றுநோயை முற்றிலும் தவிர்க்க முடியாது என்னபதே உண்மை.
கட்டுக்கதை 4: மார்பக புற்றுநோய் எப்போதும் கட்டிகளை ஏற்படுத்துகிறது
உண்மை: மார்பகப் புற்று நோயின் தொடக்கத்தில், மார்பகங்களில் கட்டிகள் உருவாவதாகச் சொல்லப் படுகிறது, ஆனால் மார்பகப் புற்றுநோயின் ஆரம்ப கட்டத்தில் இது நடக்காது.
கட்டுக்கதை 5: ஒவ்வொரு ஆண்டும் மேமோகிராம் பரிசோதனைமூலம் மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியலாம்
உண்மை: மார்பகப் புற்றுநோயைக் கண்டறிவதற்கான மிக முக்கியமான சோதனையாக மேமோகிராபி சோதனை கருதப்படுகிறது, ஆனால் ஆரம்ப கட்டங்களில் மேமோகிராபி சோதனைமூலம் அதைக் கண்டறிய வேண்டிய அவசியமில்லை.
கட்டுக்கதை 6: பெண்களுக்கு மட்டுமே மார்பக புற்றுநோய் வரும்
உண்மை: மார்பகப் புற்றுநோய் பெண்களுக்கு மட்டுமே வரும் என்று கூறப்படுகிறது, ஆனால் பெண்களைத் தவிர, ஆண்களுக்கும் இந்தப் புற்றுநோய் வரலாம்.
கட்டுக்கதை 7: நடுத்தர வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதான பெண்களுக்கு மட்டுமே மார்பக புற்றுநோய் வரும்
உண்மை: இது உண்மையல்ல, மார்பக புற்றுநோய் பிரச்சனை எந்த வயதிலும், யாருக்கும் வரலாம்.
கட்டுக்கதை 8: டியோடரண்டுகள் மார்பகப் புற்றுநோயை உண்டாக்கும்
உண்மை:டியோடரண்டுகள் மற்றும் வியர்வை எதிர்ப்பு மருந்துகள் மார்பக புற்றுநோயை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது, இருப்பினும் இதை உறுதிப்படுத்த அறிவியல் சான்றுகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
புற்றுநோய் செல்கள் இரத்தம் அல்லது நிணநீர் மண்டலத்தை அடைந்து, உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவும்போது மார்பக புற்றுநோய் பரவுகிறது.உங்கள் மார்பகங்களில் ஏதேனும் புதிய மாற்றங்கள் ஏற்பட்டால், உங்கள் அறிகுறிகளை ஆய்வு செய்து மேலும் சோதனைகள் தேவையா என்பதைத் தீர்மானிக்க உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.
Image Source: Freepik