முடி உதிர்வதை தடுக்கும் இயற்கையான மூலிகை எண்ணெயை இனி வீட்டிலேயே செய்யலாம்!!!

  • SHARE
  • FOLLOW
முடி உதிர்வதை தடுக்கும் இயற்கையான மூலிகை எண்ணெயை இனி வீட்டிலேயே செய்யலாம்!!!

உங்கள் முடி உதிர்வை கட்டுப்படுத்த இந்த மூலிகை எண்ணெயை முயற்சித்து பாருங்கள். இயற்கையான ஆயுர்வேத மூலிகைகளைக் கொண்டு வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கலாம்.

அடர்த்தியான, நீளமான மற்றும் கருமையான கூந்தலையே அனைவரும் விரும்புகிறார்கள். ஆனால் இன்றைய நவீன வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவு முறை பழக்கங்களால், மக்களில் பெரும்பாலானோர் முடி உதிர்தல் பிரச்சனையால் சிரமப்படுகிறார்கள். நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு நாளில் 100 க்கும் மேற்பட்ட முடிகள் உதிர்வது இயல்பானதல்ல. நீண்ட கால முடி உதிர்தல், முடியின் வளர்ச்சி மற்றும் அதன் அளவை பாதிக்கிறது. அதிகப்படியான முடி உதிர்வு காரணமாக, நீங்கள் இளமையிலேயே வழுக்கைக்கு ஆளாகலாம். முடி உதிர்வதைத் தடுக்க பல வகையான எண்ணெய்கள் மற்றும் முடி பராமரிப்பு பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், முடி உதிர்தல் குறைவதில்லை. முடி உதிர்வதை தடுக்க பல தயாரிப்புகள் விற்கப்படுகின்றன. இதில் உள்ள இரசாயனங்கள் முடிக்கு நீண்ட கால சேதத்தை ஏற்ப்படுத்துகின்றன. டாக்டர் நித்திகா கோஹ்லி அவர்களின் கூற்றுப்படி, நீங்கள் முடி உதிர்வைத் தவிர்க்க விரும்பினால், இயற்கையான மற்றும் ஆயுர்வேத பொருட்களைக் கொண்டு வீட்டில் தயாரிக்கப்பட்ட எண்ணெயைப் பயன்படுத்தலாம். இது உங்கள் முடி உதிர்வை குறைத்து முடி வளர்ச்சியை அதிகரிக்கும். முடி உதிர்வை தடுக்கும் மூலிகை எண்ணெயை (Anti Hairfall Herbal Hair Oil)வீட்டிலேயே தயாரிக்கும் முறைபற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

முடி உதிர்வதை தடுக்கும் மூலிகை எண்ணெய்

தேவையான பொருட்கள்

  • கறிவேப்பிலை - 1 கப்
    • பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்
      • வறுத்த வெந்தய விதைகள் - 1/4 கப்
        • வறுத்த கருஞ்சீரகம் - 1/4 கப்
          • ஆலிவ் எண்ணெய் - 1 கப்
            • தேங்காய் எண்ணெய் - 1 கப்
            • முடி உதிர்வதை தடுக்கும் மூலிகை எண்ணெயைத் தயாரிப்பது எப்படி?

              • இந்த மூலிகை எண்ணெயைத் தயாரிக்க முதலில் மிக்ஸியில் வருத்த வெந்தயம் மற்றும் கருஞ்சீரகத்தை சேர்த்து பொடி செய்து கொள்ளவும்.
                • ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெயைச் சூடாக்கவும்.
                  • இந்த எண்ணெய் கலவையில் வருத்தரைத்த கருஞ்சீரகம் மற்றும் வெந்தயப் பொடியைச் சேர்க்கவும்.
                    • இதனுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து நன்கு கலக்கவும்.
                      • எல்லா பொருள்களையும் சேர்த்த பிறகு குறைந்த தீயில் கொதிக்க விடுங்கள்.
                        • எண்ணெயின் நிறம் மாறத் தொடங்கியதும், அடுப்பை அணைக்கவும்.
                          • இந்த எண்ணெயைப் பருத்தி துணியால் வடிகட்டிக் கொள்ளுங்கள்.
                            • மூலிகை எண்ணெயை ஆறிய பிறகு பாட்டிலில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
                            • மூலிகை எண்ணெயின் நன்மைகள்

                              • தலைமுடிக்கு வெங்காய சாறு பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது. இதில் கந்தகம்(Sulphur) நிறைந்துள்ளது, இது முடிக்கு ஊட்டமளித்து முடி உதிர்வதைத் தடுக்கிறது. இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் இது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் முடி நீளமாகவும் வலுவாகவும் இருக்கும்.
                                • இந்த மூலிகை எண்ணெயைப் பயன்படுத்தினால் முடி உதிர்தல் மற்றும் உடைவது குறையும். இதில் உள்ள கறிவேப்பிலை உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இது முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்தி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.
                                  • தேங்காய் மற்றும் ஆலிவ் எண்ணெய் முடிக்கு மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது. இது கூந்தலுக்கு ஊட்டமளித்து முடியை அடர்த்தியாகவும் மென்மையாகவும் மாற்றுகிறது.மேலும் இதைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் முடி உதிர்வது குறைந்து முடி நீளமாக வளரும்.
                                    • முடி உதிர்வதை குறைப்பதற்கு ஏற்றது கருஞ்சீரகம். இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற தடுப்பு மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் முடி உதிர்வதை குறைக்க உதவுகின்றன.மேலும் இவை முடியின் வளர்ச்சியையும் அதிகரிக்கின்றன.
                                      • வெந்தயத்தில் புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது, இது முடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. இதில் உள்ள பொட்டாசியம் முடி உதிர்தல் பிரச்சனையைப் போக்க உதவும். வெந்தயத்தை அரைத்துக் கூந்தலில் தடவினால் பொடுகு பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
                                      • உங்களுக்கு முடி உதிர்தல் பிரச்சனை இருந்தால், முடி உதிர்வதை தடுக்கும் இந்த மூலிகை எண்ணெயை வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தி பாருங்கள். இதன் மூலம் முடி உதிர்வதை நிறுத்தி, அடர்த்தியான வலுவான முடியைப் பெற முடியும்.

                                        Images Credit: freepik

அடுத்ததை படிக்கவும்

Overeating: அதிகமாக சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? இதை கைவிட சிம்பிள் டிப்ஸ்!

பொறுப்புத் துறப்பு

குறிச்சொற்கள்