பெண்கள் கர்ப்ப காலத்தில் இருந்ததை விட, குழந்தை பிறந்த பிறகு மிகுந்த கவனத்தில் இருக்க வேண்டும். குழந்தை பிறந்ததும், அதன் உடல் ரீதியான அமைப்பை மிகவும் அதிக பாதுகாப்புடன் கையாள வேண்டும். தொப்புள் கொடி, குழந்தையின் தலைப்பகுதி உள்ளிட்ட ஒவ்வொன்றிற்கும் தனித்தனி கவனம் செலுத்துவது அவசியம். பச்சிளங்குழந்தை பராமரிப்பு என்பது முதலில் சிரமமாக இருந்தாலும், பெரியவர்களின் ஆலோசனையுடன் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இதில், குழந்தை பிறந்தவுடன் கையாள வேண்டிய சில பராமரிப்பு முறைகளைப் பற்றிக் காணலாம்.
பிறந்த குழந்தை பராமரிப்பு முறைகள்
குழந்தை பிறந்த குறிப்பாக பிறந்து ஒரு மாதம் ஆன குழந்தைகளைக் கையாள்வது மிகவும் முக்கியம். புதிதாக பிறந்த குழந்தை பெரும்பாலான நேரங்களில் தூங்கிக் கொண்டிருக்கும். மேலும், உடலை சில சமயங்களில் வில் போன்று வளைத்து இருக்கும். இது குழந்தை இயல்பாக இருப்பதையே குறிக்கிறது.
இந்தப் பதிவும் உதவலாம்: குழந்தையின் முகத்தில் ஏற்படும் தடிப்புகளை தடுப்பது எப்படி?
தலைப்பகுதி
குழந்தையின் தலைப்பகுதி நீள் வட்ட வடிவில் காணப்படும். அதாவது, உச்சிப்பகுதியும், நெற்றிப்பகுதியும் சற்று புடைத்து இருப்பது போல இருக்கும். பிறந்த குழந்தையின் கபால எலும்புகள் மென்மையாக இருக்கும். எனவே, மிகுந்து அழுத்தி பிடிக்காமல் மென்மையான அழுத்தம் தந்து பிடிக்க வேண்டும். இதன் மூலம் தலை வடிவம் சீராக இருப்பதை உணரலாம். இதில் எலும்புகளின் இணைப்பும் பலமடையும். அதே நேரம், பெண்கள் தாய்ப்பால் கொடுத்த பிறகு, குழந்தையை தலையணை இல்லாத படுக்கையில் படுக்க வைக்க வேண்டும். இதன் மூலம், எலும்புகளின் இணைப்பு வேகமாவதுடன், தலை வடிவமும் சீராக அமையும்.

கண்களில் அழுக்கு
பிறந்த குழந்தை பெரும்பாலும் தூங்கிக் கொண்டே இருக்கும். அதே சமயம், விழித்திருக்கும் நேரத்திலும் இமைத்துக் கொண்டே இருப்பர். கண்களைச் சுற்றி உள்ள தசைகள் மென்மையாகக் காணப்பட்டாலும், நாளடைவில் அது வலுப்பெறும். இயல்பாகவே, பிறந்த குழந்தையின் கண்களிலிருந்து அழுக்குகள் வெளியேறிக் கொண்டே இருக்கும். ஆனால், கண்கள் அதிக மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
இந்தப் பதிவும் உதவலாம்: புதிதாகப் பிறந்த குழந்தை வாந்தி எடுத்தால் என்ன செய்ய வேண்டும்?
காது கேட்கும் திறன்
குழந்தை பிறந்து ஒரு மாதத்தில் காது கேட்குமா என்பதைத் தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருப்பர். இதில், குழந்தையின் உள்ளங்காலை மிதமாக நெருடி விட, குழந்தை கூச்சத்தை உணரும். இவ்வாறு இருக்கும் போது நரம்பு மண்டலம் சீராக இருக்கும். குழந்தைக்கு காது கேட்கிறதா என்பதை மெதுவாக காதில் சொடக்கு போட்டு கூப்பிடலாம். சத்தம் வரும் இடத்தில் குழந்தையின் கண்கள் பார்க்கும் போது காது கேட்பதை உறுதி செய்யலாம்.

தொப்புள் கொடி
பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியைக் கட் செய்து க்ளிப் மாட்டி விடுவார்கள். இது அடுத்த இரண்டு, மூன்று வாரங்களில் உதிர்ந்து விடும். எனினும், அவற்றில் தண்ணீர் படாமலும், கிருமித் தொற்று ஏற்படாமலும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம், தொப்புள் கொடியில் ஈரக்கசிவு ஏதாவது இருப்பினும், தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுவதை நல்லது.
இந்தப் பதிவும் உதவலாம்: குறை மாத குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை!!!
நோய் எதிர்ப்புச் சக்தி
எப்போதும், குழந்தையைத் தூக்கும் போது சரியான முறையில் கைகளைக் கழுவி அதன் பின்னரே தூக்க வேண்டும். குறிப்பாக, நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் குழந்தையைத் தரக்கூடாது. பிறந்த குழந்தை தாயிடமிருந்து பெறும் நோய் எதிர்ப்புச் சக்தி நீண்ட காலம் வரை நீடிப்பதில்லை. இது சில வாரங்கள் அல்லது மாதங்கள் வரையே இருக்கும். எனவே, குழந்தைகளை வைரஸ் அல்லது பிற கிருமிகளில் இருந்து பாதுகாப்பது அவசியம்.
Image Source: Freepik