பொட்டாசியம் அடங்கிய உணவுகளை எடுத்துக் கொள்வது, நன் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று உங்களுக்கு தெரியுமா? நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய பொட்டாசியம் நிறைந்த உணவுகளை இங்கே காண்போம் வாருங்கள்.
பொட்டாசியத்தின் தேவையான அளவு
நாளும் 4,700 மில்லிகிராம் பொட்டாசியம் பெற வேண்டும். ஒரு வேளை நீங்கள் அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது சிறுநீரகம் சரியாக வேலை செய்யாமல் அதிகப்படியான பொட்டாசியம் உடலில் தங்கக் கூடும்.
பொட்டாசியத்தின் அவசியம்
உடலில் உள்ள கூடுதல் சோடியத்தை சிறுநீர் மூலம் வெளியேற்ற பொட்டாசியம் உதவுகிறது. மேலும் இது இரத்த நாளங்களின் சுவர்களை தளர்த்த உதவுகிறது.
பொட்டாசியத்தின் நன்மைகள்
போதுமான அளவு பொட்டாசியம் உட்கொள்வது, உங்களை ரிலாக்ஸாக வைக்க உதவுகிறது. மேலும் இது சிறிநீரக கற்களை அகற்றவும், பக்கவாதம் வராமக் தடுக்கவும் உதவுகிறது.
பழங்கள்
வாழைப்பழங்கள், ஆரஞ்சு, முலாம்பழம், ஹனி ட்யூ, ஆப்ரிகாட், திராட்சை பழங்கள், உலர்ந்த திராட்சை பழங்கள், பேரீச்சம் பழம் இவற்றில் அதிகளவு பொட்டாசியம் காணப்படுகிறது.
காய்கறிகள்
கீரைகள், பிரக்கோலி, உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, மஸ்ரூம், பட்டாணி, வெள்ளரிக்காய், சீமை சுரைக்காய், பூசணிக்காய்கள், பச்சை இலை காய்கறிகள் போன்றவற்றில் பொட்டாசியம் அதிகளவு காணப்படுகிறது.
மீன்கள்
டூனா, கோட், ட்ரவுட்ள, ஹாலிபட், ராக்ஃபிஷ் போன்ற மீன்களில் பொட்டாசியம் நிறைந்துள்ளது.
பயிறு வகைகள்
லிமா, பிண்டோ, சோயா பீன்ஸ் போன்றவை பொட்டாசியத்தின் சிறந்த மூலமாக திகழ்கிறது.
எந்த உணவாக இருந்தாலும், அளவு முக்கியம். மேலும் உங்களுக்கு ஏதேனும் உணவு ஒவ்வாமை இருந்தால், உணவு முறையில் மாற்றம் செய்வதற்கு முன் ஊட்டச்சத்து நிபுணரை அணுகுவது நல்லது.