குறை மாத குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை!!!

  • SHARE
  • FOLLOW
குறை மாத குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை!!!

குறைமாதக் குழந்தைகளின் சரியான வளர்ச்சிக்குத் தேவையான சில முக்கிய விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

குழந்தை பிறப்பு என்பது ஒவ்வொரு தாய்க்கும் சவாலான விஷயம். சில சமயங்களில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் 40 வாரங்கள்வரை தாயின் கருவறையில் வளர வேண்டிய குழந்தை 37 வாரம் அல்லது அதற்கு முந்தைய வாரங்களிலேயே பிறக்கிறது. இப்படி முன்கூட்டியே குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளைக் குறை மாதக் குழந்தைகள் என்று அழைக்கிறார்கள். முன்னதாகவே பிறப்பதால் இந்தக் குழந்தைகளின் வளர்ச்சி மற்ற குழந்தைகளைவிட மெதுவாகத்தான் இருக்கும். பிறக்கும்பொழுது குழந்தையின் உடல் எடை 2 கிலோ அல்லது அதற்கும் குறைவாகவும் இருக்கலாம். பெரும்பாலான குறை மாதக் குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சி முழுமையடையாமல் இருக்கும். ஆனால் கவலைப்படத் தேவையில்லை. சரியான பராமரிப்பின் மூலம் குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க முடியும். இந்தப் பதிவில் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான 5 விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். இதைப் பற்றிய சிறந்த தகவலுக்காக, லக்னோவில் உள்ள ஜல்கரிபாய் மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவ நிபுணர் டாக்டர் தீபா சர்மா அவர்களிடம் பேசினோம்.

1.தூய்மையை கவனித்துக் கொள்ளுங்கள்

புதிதாகப் பிறந்த குழந்தையைத் தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க, அவர்களின் தூய்மையை கவனித்துக் கொள்ளுங்கள். குழந்தையின் தூய்மையை பராமரிக்க, அவ்வப்போது மென்மையான காட்டன் துணியால் குழந்தையைச் சுத்தம் செய்யுங்கள். அழுக்கைச் சுத்தம் செய்ய வெதுவெதுப்பான நீரை பயன்படுத்தலாம். தூய்மையை கவனித்துக்கொள்வதன் மூலம், குழந்தையின் சரியான வளர்ச்சியை உறுதிப்படுத்த முடியும்.

2. உங்கள் குழந்தையைச் சுற்றி சரியான வெப்பநிலையைப் பராமரிக்கவும்

புதிதாகப் பிறந்த குழந்தையின் வளர்ச்சிக்கு உங்கள் அறையின் வெப்பநிலையைக் கவனித்துக் கொள்ளவும். வெப்ப நிலைக்கு ஏற்றச் சரியான ஆடையைக் குழந்தைக்குத் தேர்வு செய்யுங்கள். சுற்றியுள்ள சூழல் வசதியாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதிக சூடான அல்லது குளிர்ந்த நீர் குழந்தைக்குத் தீங்கு விளைவிக்கும். குழந்தையை நேரடியாக மின்விசிறி அல்லது குளிரூட்டியின் கீழ் படுக்க வைக்க வேண்டாம். உங்கள் குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால், உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

3. கங்காரு தாய் பராமரிப்பு சிகிச்சை

கங்காரு தாய் பராமரிப்பில், உடல் சூட்டைக் கொண்டு குழந்தையின் எடையை அதிகரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. தாய் மட்டுமல்லாமல் தனிப்பட்ட சுகாதாரத்தை கடைப்பிடிக்கும் மற்ற குடும்ப உறுப்பினரும் குழந்தைக்கு உடல் சூட்டை கொடுக்கலாம்.

4. குழந்தைக்குத் தாய்ப்பால் அவசியம்

தாய்ப்பாலில் அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் உள்ளன. குழந்தையின் வளர்ச்சிக்கும், உடல் எடை அதிகரிப்பதற்கும் தாய்ப்பால் அவசியம். குழந்தைக்கு ஆறு மாதங்கள் முடியும் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.

5. குழந்தைக்கு எந்த நேரத்திலும் தொற்று ஏற்படலாம்

குறைமாதக் குழந்தைகளுக்குத் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இவர்கள் இரத்த சோகைக்கு ஆளாகலாம். இது தவிர, மஞ்சள் காமாலை, மூச்சுத்திணறல், குறை வெப்பம் போன்ற நோய்களுக்கும் ஆளாகிறார்கள்.

குறை மாதக் குழந்தைகளை முடிந்தவரை ஓய்வெடுக்க அனுமதிக்கவும். அவர்களைச் சுற்றி அமைதியான சூழலை வைத்திருங்கள். குழந்தைகள் எவ்வளவு ஓய்வு எடுக்கிறார்களோ, அந்த அளவுக்கு அவர்களின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

Images Credit: freepik

அடுத்ததை படிக்கவும்

Overeating: அதிகமாக சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? இதை கைவிட சிம்பிள் டிப்ஸ்!

பொறுப்புத் துறப்பு

குறிச்சொற்கள்