வீட்டிலேயே ஸ்கின் பாலிஷிங் செய்தல்: சருமத்தை பளபளக்க வைக்கும் சிகிச்சையை ஸ்கின் பாலிஷிங் என்று அழைக்கிறோம். பணத்தையும் நேரத்தையும் வீணாக்காமல் இதை வீட்டிலேயே செய்வதற்கான வழிகளைப் பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம்.
குழந்தைகளின் சருமத்தில் இயற்கையாகவே பளபளப்பு தன்மை நிறைந்திருக்கும். வயது கூடும்போது தோலில் இருக்கும் இந்தப் பளபளப்பு தன்மை குறையத் தொடங்குகிறது. இதற்கு ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ளாதிருத்தல், சருமத்தை சுத்தமின்றி வைத்திருத்தல், வெயிலில் அதிகம் இருத்தல் போன்றவை காரணமாக இருக்கலாம். உங்கள் சருமத்தின் பளபளப்பை இயற்கையாக அதிகரிக்க சில வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யலாம். தங்கள் சருமத்தின் பொலிவை அதிகரிக்க அழகு நிலையங்களில் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து ஸ்கின் பாலிஷிங் செய்து கொள்கிறார்கள். ஆனால் இதை இயற்கையான முறையில் எளிதாக வீட்டிலேயே செய்யலாம். வீட்டிலேயே ஸ்கின் பாலிஷிங் செய்வதற்கான வழிமுறைகளைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
ஸ்கின் பாலிஷிங் வழிமுறைகள்
- ஸ்கின் பாலிஷிங் செய்ய முதலில் ஸ்கிரப்பிங் செய்ய வேண்டும்.
- இது சருமத்தின் இறந்த செல்களை அகற்றும் ஒரு நுட்பமாகும்.
- அதற்குப் பிறகு 2 நிமிடங்களுக்கு எண்ணெயைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்யவும்.
- மசாஜ் செய்தபிறகு, சருமத்தை அலசவும்.
- இறுதியாக, கிரீம் அல்லது லோஷனை தடவிக் கொள்ளலாம்.
- ஸ்கின் பாலிஷிங் செய்வதற்கு முன், இந்த விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.
- ஒரு மாதத்தில் 1 முதல் 2 முறைக்கு மேல் ஸ்கின் பாலிஷிங் செய்ய வேண்டாம்.
- சரும நோய்கள் இருந்தால் ஸ்கின் பாலிஷிங் செய்வதை தவிர்க்கவும்.
- சருமத்தில் காயம் இருந்தாலும், நீங்கள் ஸ்கின் பாலிஷிங் செய்வதை தவிர்க்க வேண்டும்.
- வெயிலின் தாக்கத்தால் எரிச்சல் உண்டானால், ஸ்கின் பாலிஷிங் செய்வதை தவிர்க்க வேண்டும்.
- ஸ்கின் பாலிஷிங் செய்தபிறகு சருமத்தை ஈரப்பதமாக்க மறக்காதீர்கள்.
- சருமத்தை அதிகமாக அழுத்தம் கொடுத்துத் தேய்ப்பதை தவிர்க்கவும்.
- ஸ்கின் பாலிஷிங் செய்த பின் வெயிலில் செல்ல வேண்டாம்.
சர்க்கரை, காபி மற்றும் தேன்
சர்க்கரை, காபி மற்றும் தேன் கலவை, சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க உதவலாம். இது இயற்கையாகச் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்க உதவுகிறது.
இதைச் செய்வதற்கு, 2 டீஸ்பூன் காபி தூளுடன் 1 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை ஒன்றாகக் கலக்கவும். தயாரிக்கப்பட்ட இந்தக் கெட்டியான கலவையைக் கொண்டு கை, கால், கழுத்து, தோள்பட்டை, இடுப்பு, வயிறு மற்றும் முகத்தை மசாஜ் செய்யலாம். உங்களின் தேவைக்கு ஏற்றவாறு அளவை அதிகரித்து கொள்ளலாம். சர்க்கரை மற்றும் தேன் கலவையானது சருமத்தை பளபளப்பாகவும் மென்மையாகவும் மாற்றும். மேலும், தேனிலிருந்து சருமம் நீரேற்றம் பெறுகிறது.
பால் மற்றும் பாதாம்
சருமத்தை மெருகூட்டி பளபளப்பை அதிகரிக்க விரும்பினால், நீங்கள் பால் மற்றும் பாதாமை பயன்படுத்த வேண்டும். பால் மற்றும் பாதாம் கலவையானது சருமத்திற்கு நீரேற்றம் அளித்து, பளபளப்பாக்கி, சருமத்தின் இயல் நிறத்தையும் அதிகரிக்கிறது. இந்தக் கலவையைத் தயார் செய்வதற்கு, 2 ஸ்பூன் பாலில் 1 ஸ்பூன் பொடி செய்த பாதாமை சேர்க்கவும். பொடியைக் கரகரப்பாக அரைக்கவும். இதனைச் சருமத்தில் தடவி, தேய்ப்பது போல் மசாஜ் செய்யவும். 5 நிமிடங்களுக்குப் பிறகு, சருமத்தை சுத்தமான தண்ணீரில் கழுவிய பின் கிரீம் தடவவும்.
ஸ்கின் பாலிஷிங் செய்வதற்கான முக்கிய குறிப்புகள்
மேற்கூறிய முறையைப் பின்பற்றி நீங்கள் இயற்கையாக வீட்டிலேயே ஸ்கிரப்பிங் செய்வதற்கான கலவையை உருவாக்கிச் ஸ்கின் பாலிஷிங் செய்து கொள்ளலாம். முகத்தைக் கழுவிய பிறகு கிரீம் அல்லது லோஷன் தடவ மறக்காதீர்கள். இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் மறக்காமல் பகிரவும்.
image source: freepik