தூக்கத்தில் பேசுவது அல்லது உளறுவது என்பது பலருக்கும் சிக்கலமாக இருக்கலாம். தூக்கத்தின் போது பேசுவது அல்லது உளறுவது என்பது பலருக்கும் சிக்கலமாக இருக்கலாம். தூக்கத்தில் பேசுவது என்பது நம்மை மீறி உதடுகள் வார்த்தைகளை உதிர்க்கிறது. தூக்கத்தில் பேசுவதற்கான காரணங்கள் மற்றும் சிகிச்சைக்கான நடவடிக்கைகள் குறித்து நிபுணர்கள் அளிக்கும் விளக்கம் குறித்து பார்க்கலாம்.
தூக்கத்தில் பேசுவது ஏன்?
மணிப்பால் மருத்துவமனை மருத்துவ உளவியலாளர் டாக்டர் சதீஷ் குமார் சிஆர் கூறுகையில், "சோம்னிலோகி(தூக்கத்தில் பேசுவது) என்பது ஒரு மருத்துவ நிலை அல்ல பொதுவான நிகழ்வு. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரை பொறுத்தவரை, ஆசிரியர்கள், நண்பர்கள். பள்ளி அல்லது படிப்பைப் பற்றிய பேச்சுக்கள் போன்ற பள்ளியில் அவர்களின் அனுபவங்கள் குறித்து தூக்கத்தில் பேசுவார்கள். அதேபோல் இளைஞர்கள் அல்லது பெரியவர்கள் ஏதோவொரு கூற்றையோ, அர்த்தமில்லாத சொற்களையோ, கிசுகிசுப்பையோ பேசலாம்.
ஸ்லீப் மெடிசின் வெளியிட்ட ஆய்வுப்படி, 3ல் 2 பேர் தங்கள் வாழ்வின் ஒரு கட்டத்தில் தூங்கும் போது பேசுகிறார்கள்.
தூக்கத்தில் பேசுவதால் ஏற்படும் விளைவுகள்
டாக்டர் குமார் மேலும் பேசுகையில், தூக்கத்தில் பேசுவது என்பது குறுகிய காலமோ அல்லது சில நாட்களுக்கு மட்டுமே ஏற்படலாம். ஆனால் இது மாதக் கணக்கிலும், வருடக் கணக்கிலும் தொடரும் போது கோளாறாக மாறுகிறது. இது சாதாரண நிகழ்வு என்றாலும், சில சமயங்களில் அதை அனுபவிக்கும் நபருக்கோ அல்லது அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கோ இது விரும்பத்தகாததாக இருக்கும். தூக்கத்தில் பேசுபவர்கள் தங்கள் குரலைக் கேட்டவுடன் விழித்துக்கொண்டு பயப்படுவார்கள். ஒரே அறையைப் பகிர்ந்து கொள்ளும் குடும்ப உறுப்பினர்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ அது தொந்தரவு செய்யலாம் அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என குற்ற உணர்ச்சியமாக உணருவார்கள். சிலர் தூக்கத்தில் சிரிக்கவும் திடீரென எழுந்து அழுகவும் செய்வார்கள்.
தூக்கத்தில் பேச காரணம்
குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினருக்கு தூக்கத்தில் பேசுவதற்கான காரணங்களில் கல்வி சார்ந்த மன அழுத்தம், வீட்டுப் பாடம், தேர்வு கவலை போன்றவைகள் காரணமாக இருக்கலாம். பெரியவர்களில், குடும்பப் பிரச்சனைகள், திருமண பிரச்சனைகள், வேலை தொடர்பான மன அழுத்தம் மற்றும் மது அருந்துதல் கூட சோம்னிலோகியைத் தூண்டும். தூக்கத்தில் பேசுவதற்கு மன அழுத்தம் தான் அடிப்படை காரணம். நீங்கள் சோகமாகவோ, கவலையுடனோ, எரிச்சலாகவோ இருக்கும் போது இதுபோன்ற உளறல்கள் ஏற்படுகிறது.
தூக்கத்தில் பேசுவதற்கான சிகிச்சை
மன அழுத்தம் அடிப்படை பிரச்சனைக்கு ஆதாரமாக இருப்பதால், தூக்கத்தில் பேசுவதை சரிசெய்ய தங்கள் மன அழுத்தத்தை சரிசெய்ய முயலுங்கள். தூங்குவதற்கு முன் கேஜெட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. தூக்க சுகாதாரத்தை பராமரிப்பது நல்லது. தூக்கத்தின் தரம் பெரிதளவு மேம்படுத்திக் கொள்ளுங்கள். தினசரி சரியான நேரத்தில் தூங்குவது பல பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும்.
டாக்டர் குமார் கூறுகையில், பல நேரங்களில் மக்கள் தூக்கத்தில் பேசுவதை அனுபவிக்கும் மற்றவர்களை தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். இது இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வு ஆகும். ஒருவரின் மன அழுதத்தை புரிந்துக் கொள்ள வேண்டும். இதற்கு சிகிச்சை பெறுவதற்கு முன் தூக்கத்தில் எதுகுறித்து உளறுகிறார்கள் என்பதை அறிந்து அதை சரி செய்ய முயல வேண்டும்.
மேக்னிஃப்ளெக்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் நிச்சானி கூறுகையில், “உறங்கும் முன் மது மற்றும் மயக்க மருந்துகளை உட்கொள்வதும் தூங்கும் பேச்சுக்கான வாய்ப்பை அதிகரிக்கும். நீங்கள் தூக்கத்தில் பேசுபவராக இருந்தால், தியானத்தின் உதவியுடன் அமைதியாக இருப்பதும், தூங்கச் செல்வதற்கு முன் மன அழுத்தமான செயல்களைத் தவிர்ப்பதும் நல்லது. உங்கள் படுக்கையறையை ஒழுங்கிப் படுத்திக் கொள்ளுங்கள், நிம்மதியான படுக்கையறையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
சிகிச்சையாக உடற்பயிற்சி செய்யுங்கள்
உடற்பயிற்சி தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவும், இது தூக்கத்தில் பேசும் வாய்ப்பைக் குறைக்கலாம். இருப்பினும், உறங்கும் நேரத்துக்கு மிக அருகில் உடற்பயிற்சி செய்வது உங்களை அமைதியின்மையாக்கும் என ஆனந்த் நிச்சானி கூறினார்.
இந்த கட்டுரையில் உள்ள தகவல் ஒரு நிபுணரால் வழங்கப்படுகிறது, இருப்பினும், உங்கள் தேவைகளுக்கு ஏற்ப நிபணர்களை கலந்தாலோசிப்பது என்பது சிறந்த முடிவாகும்.