மனிதனின் உடல் ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பதில் பல்வேறு முக்கிய காரணிகள் உள்ளன. அவற்றுள் நம் முன்னோர்கள் வழிமுறைகளான ஆரோக்கியமான உணவு எடுத்துக் கொள்வது முதல் உடற்பயிற்சி செய்வது வரை அனைத்தையும் செய்ய வேண்டும். அந்த வகையில், முக்கியமான ஒன்று உடற்பயிற்சியே. உடற்பயிற்சியில் சூரிய நமஸ்காரம் பல்வேறு விதமான நன்மைகளை அளிக்கிறது. குறிப்பாக, உடல் எடை இழப்பிற்கு சூரிய நமஸ்காரம் மிகப்பெரும் பங்காற்றுகின்றன.
சூரிய நமஸ்காரம்

உடலுக்கு பல வகைகளில் நன்மைகளைத் தருவது சூரிய நமஸ்காரம் ஆகும். இந்தப் பயிற்சி செய்வதால், உடலுக்குத் தேவையான ஆற்றம் கிடைப்பதுடன் உடலுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது. காலை, மாலை என இரு நேரங்களிலும் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. இது பன்னிரண்டு வகையான யோகாசனங்களைக் கொண்டுள்ளது. அதாவது, 12 வகை ஆசனங்கள் மூலம் சூரியக் கடவுளுக்கு வணக்கம் தெரிவித்து, உடலை வலுப்படுத்தவும், எடையைக் கட்டுப்படுத்தவும் பயனுள்ளதாக அமைகிறது.
சூரிய நமஸ்காரத்தின் பயன்கள்

சூரிய நமஸ்காரம் உடலுக்குப் பல வகைகளில் நன்மை அளிப்பதாக உள்ளது. ஆரோக்கியமான பயிற்சியான இதனை தினந்தோறும் செய்வதால் உடல் வலிமை அடைவதுடன், மன அமைதி பெறும். உடல் எடையைக் குறைப்பதில் சூரிய நமஸ்காரம் மிக அதிக பங்கு வகிக்கிறது.
முழு உடல் பயிற்சியாக அமைவதால், வயிறு, தொடை, இடுப்பு போன்ற இடங்களில் உள்ள கொழுப்புகள் குறைந்து, உடல் உறுப்புகளுக்கு வலிமை தருவதாக அமைகிறது. மேலும், இது எலும்பு வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.
சூரிய நமஸ்காரத்தின் ஒரு தொகுப்பு அதாவது 12-18 நிமிடங்களுக்குச் செய்யும் போது 14 கலோரிகளை நீக்குகிறது.
இந்தப் பயிற்சி செய்வதற்கு எளிதாக அமைகிறது. இதற்கு உபகரணங்கள் எதுவும் தேவையில்லை. காற்றோட்டமான பாதையில், சூரிய நமஸ்காரம் செய்யும் போது உடலுக்குப் புத்துணர்ச்சி அளிப்பதாக அமைகிறது.
காலை நேரங்களில் செய்யக் கூடிய இந்த சூரிய நமஸ்காரம், அன்றாட வாழ்விற்கு தேவையான கலோரிகளை வழங்கி, தேவையற்ற கொழுப்புகளை நீக்குகிறது. இந்த சூரிய நமஸ்காரம் படிகளை சரியாக செய்து வர, உடலில் நோய்கள் உண்டாவதைத் தவிர்த்து, உடலுக்குத் தேவையான நன்மைகளை அளிக்கிறது.
இந்த 12 ஆசன நிலைகளும் உடலுக்கு பல்வேறு விதமான வகைகளில் வேலைகளைச் செய்கிறது. இது இரத்தத்தை சுத்திகரித்து, உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை சீராக செயல்பட உதவுகிறது. இது வயிறு, குடல், நரம்பு மையங்களின் செயல்பாட்டை உறுதி செய்கிறது.இந்த சூரிய நமஸ்காரம் மூலம், உடல் எடையைக் குறைக்க ஒவ்வொரு ஆசன நிலையிலும் குறைந்தது 5 வினாடிகள் இருக்க வேண்டும். இது வைட்டமின் டி3 அளவை அதிகரித்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
Image Source: Freepik