how to improve sleep quality : ஒவ்வொரு ஜீவராசிக்கும் தூக்கம் மிகவும் அவசியம். சரியாக தூங்கினால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நாள் முழுவதும் வேலை செய்யும் உடல் உறுப்புகளுக்கு ஓய்வு மிகவும் அவசியம். அதனால் தான் ஒருவர் ஒரு நாளைக்கு குறைந்தது 7 முதல் 8 மணிநேரம் கட்டாயம் தூங்க வேண்டும் என கூறப்படுகிறது.
தூக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டும் அல்ல மன ஆரோக்கியத்திற்கும் அவசியம். தூக்கத்தின் போது நமது உடல் தன்னைத் தானே சரி செய்து கொள்கிறது. உடலுக்கு சரியான ஓய்வு கிடைக்காவிட்டால், உடல் பருமன், தைராய்டு, நீரிழிவு, மன அழுத்தம் போன்ற பல நோய்களுக்கான வாய்ப்பு அதிகம். எனவே, ஒவ்வொருவரும் தனது தூக்கத்தின் தரத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உங்கள் தூக்கத்தின் தரத்தை கெடுக்கக்கூடிய சில கெட்ட பழக்கங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Things Do Before Going To Bed: தூங்கும் முன் நீங்க கட்டாயம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் இங்கே.!
அற்ப விஷயங்களுக்கு வருந்துவது

இன்றைய காலக்கட்டத்தில், ஒவ்வொரு நபரும் ஏதோ ஒரு காரணத்திற்காக மன அழுத்தத்திற்கு தள்ளப்படுகின்றனர். நம்மில் சிலர் சிறிய விஷயங்களுக்கு கூட அதிகமாக வருத்தப்படுவோம். இந்த பழக்கம் நமது தூக்கம் கெடுத்து நம்மை மன அழுத்தம் வரை கொண்டு செல்லும். எனவே, அற்ப விஷயங்களுக்கு வருந்துவதை தவிருங்கள்.
காஃபின் அல்லது ஆல்கஹால் பழக்கம்
படுக்கைக்குச் செல்வதற்கு முன் நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் மற்றும் குடிக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். சிலர் தூங்குவதற்கு முன் காபி, டீ, எனர்ஜி பானங்கள் அல்லது மது அருந்துவார்கள். இது உங்களுக்கு ஆரம்பத்தில் லேசான தூக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் உண்மையில், இது உங்கள் தூக்கத்தின் தரத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். இதனால் நிம்மதியாக தூங்க சிரமப்படுவீர்கள்.
இந்த பதிவும் உதவலாம் : செக்ஸ் வாழ்க்கை மன ஆரோக்கியத்தை பாதிக்குமா? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை இங்கே
மின்னணு சாதனங்களின் பயன்பாடு

இன்றைய காலக்கட்டத்தில் நாம் அனைவரும் பெரும்பாலான நேரத்தை திரைக்கு முன்னால்தான் செலவிடுகிறோம். தூங்குவதற்கு முன் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்கள், கம்ப்யூட்டர்கள் மற்றும் டிவிகளைப் பார்ப்பது உங்களின் தூக்கத்தை பாதிக்கும். அதாவது இன்னும் கொஞ்ச நேரம் பார்க்கலாம் என எண்ணத்தை அதிகரிக்கும். அதுமட்டும் அல்ல, ஸ்கிரீன்களில் இருந்து வெளிவரும் ஊதா கதிர்கள் உங்கள் கண்களை தொந்தரவு செய்யும். எனவே, இரவில் மின்னணு சாதனங்களிலிருந்து விலகி இருப்பது நல்லது.
தூங்குவதற்கான அட்டவணை
ஒரு சிறந்த தூக்கத்திற்கு, ஒரு நபர் எழுந்திருக்கவும் தூங்கவும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை வைத்திருப்பது மிகவும் முக்கியம். இருப்பினும், அவர்களின் வேலை அல்லது பிற காரணங்களுக்காக, தங்கள் தூக்க நேரத்தை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். இதன் காரணமாக உடலின் உள் கடிகாரம் தொந்தரவு அடைகிறது. இதனால் உங்கள் தூக்கம் முழுமையாக பாதிக்கப்படும். எனவே, உங்கள் தூக்கத்தின் தரத்தை பராமரிக்க, நேரத்தைக் கவனிப்பது மிகவும் முக்கியம்.
மற்ற காரணிகள்

ஒரு நபரின் தூக்கத்தின் தரத்தை சீர்குலைக்கும் பல சுற்றுச்சூழல் காரணிகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, அதிக சத்தம் அல்லது வெளிச்சம், அசௌகரியமான படுக்கை, படுக்கையறை குளிராக இருப்பது அல்லது சூடாக இருப்பது அல்லது கணவரின் குறட்டை சத்தம் போன்றவை உங்கள் தூக்கத்தின் தரத்தை பாதிக்கும் காரணிகள்.