ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கிய திருப்புமுனையாக அமைவது திருமணம் ஆகும். காதல் திருமணம் அல்லது பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என எதுவாக இருப்பினும், திருமணத்திற்கு முன் ஆண் மற்றும் பெண் இருவரும் சில முக்கிய விஷயங்களைக் கருத்தில் கொள்வது அவசியம். இவை திருமணத்திற்கு முன் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதாக அமையும்.
திருமணத்திற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
இதில், திருமணத்திற்கு முன் ஆண், பெண் இருவரும் கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் சிலவற்றை காண்போம்.
இணக்கம்
திருமண வாழ்வில் இணக்கம் என்பது முக்கியமான ஒன்று. இது அவர்களின் வாழ்க்கையை எந்த வித சிக்கல்கள் அல்லது பிரச்சனைகளுமின்றி மென்மையாக வழிநடத்தும். தம்பதிகள் தங்களுக்கு இடையே பொருந்தக்கூடிய தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். இணக்கத்தன்மை ஆனது தம்பதிகளின் நம்பிக்கைகள், குறிக்கோள்கள், ஆர்வங்கள் போன்றவற்றை உள்ளட்டக்கியதாகும். இருவரும் எதிரெதிரான பண்புகளைப் பெற்றிருக்கும் போது அது பிரச்சனைக்கு வழிவகுக்கிறது. எனவே, தம்பதிகளிடையே இணக்கத்தன்மை மிக முக்கியமான ஒன்றாக அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: திருமண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க 6 குறிப்புகள் இங்கே
இலக்குகள் பகிர்வு
தம்பதிகளுடைய எதிர்கால இலக்குகள் பொதுவான நோக்கங்கள் மற்றும் விருப்பங்களை ஒன்றாக கொண்டிருந்தால், அது இருவருக்கிடையே எந்த சிக்கல்களையும் கொண்டு வராது. இதில், இலக்குகள் என்பது வேலை, குடும்பம், தனிப்பட்ட வளர்ச்சி என அனைத்தையும் குறிப்பதாக அமையும். திருமணத்திற்கு முன்னதாக பகிரப்பட்ட இலக்குகள் பொதுவானதாக இருப்பின், அது நிம்மதியான வாழ்க்கை முறையை மேம்படுத்தும்.
தனிப்பட்ட வளர்ச்சி
திருமணமான தம்பதிகள் அவரவர்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக ஒருவருக்கொருவர் அர்ப்பணிப்பு செய்ய வேண்டும். வாழ்க்கையில் சிக்கல்கள் இன்றி கனவு மற்றும் லட்சியங்களை அடைவதற்கு ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பதை உறுதி செய்ய வேண்டும். இது அவர்களுக்கிடையேயான புரிதலையும் எடுத்துக் காட்டுவதாக உள்ளது. திருமணத்திற்குப் பின் சமூகத்தில் நல்ல நிலையில் இருக்க தம்பதிகளின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு இருவரும் ஆற்றிய முக்கிய பங்கே ஆகும்.
இந்த பதிவும் உதவலாம்: சண்டைக்குப் பிறகு கோபமாக இருக்கும் உங்கள் துணையை, இனி எளிதாகச் சமாதானம் செய்யலாம்
சிக்கல்களுக்குத் தீர்வு காணுதல்
தம்பதிகள் திருமணத்திற்கு முன் மற்றும் பின் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடலாம். இந்த நேரத்தில் சிக்கல்களை திறமையாகவும், சுமுகமாகவும் தீர்ப்பது அவசியம். தம்பதிகள் ஒவ்வொருவரும் மற்றவர்களின் கருத்திற்கேற்ப நடப்பது, சமரசம் செய்வதைக் குறிக்கிறது. இருவருக்கும் பயனளிக்கும் வகையிலான சமரசத்தைக் கொண்டு வருவதன் மூலம், சிக்கல்கள் அல்லது பிரச்சனைகளுக்குச் சுமுகமாகத் தீர்வு காணலாம்.
நிதி பொருந்துதல்
தற்சமய காலகட்டத்தில் தம்பதிகள் பலரும் சந்திக்கும் நெருக்கடியான பிரச்சனைகள் நிதி காரணமாகவே அமைகின்றன. திருமணத்திற்கு முன் ஒருவருக்கொருவர். நிதிப் பொருந்துதல் தன்மையை ஆய்வு செய்வதுடன், அதற்கு ஏற்றாற்போல செலவு முறைகளை மேற்கொள்வது சண்டை, சச்சரவை விலக்குகிறது. இது சேமிப்பு, செலவு, மற்றும் கடன் உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கியதாக அமைகிறது.
தொடர்பு
ஆரோக்கியமான தொடர்பு மகிழ்ச்சியான திருமணத்திற்கு வழிவகுக்கும். திருமண பந்தத்தில் இருக்கும் தம்பதிகள், எந்த இடத்தில் இருந்தாலும் அவர்களுக்கு இடையே அதாவது ஒருவருக்கொருவர் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும். இது அவர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளை முறியடிப்பதிலும், தவறான புரிதல்களைத் தடுப்பதற்கும் உதவுகிறது. இதன் மூலம், தம்பதிகளுக்கு இடையேயான தொடர்பை வலுப்படுத்த முடியும். உதாரணமாக, தம்பதிகளில் ஒருவர் கோபமாகவோ அல்லது பிரச்சனையுடன் இருந்தாலோ, மற்றவர் அவர்களை சமாதானம் செய்யும் வகையில் அல்லது புரிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: இந்த 8 விஷயங்களை உங்கள் மனைவியிடம் சொல்லாதீர்கள்
Image Source: Freepik