இயற்கையாகவே சுருள் முடி இருப்பது வரமாக இருந்தாலும், அதை சமாளிப்பதென்பது சாபமாக இருக்கிறது. ஒருபுறம் சுருட்டை முடி வைத்திருப்பது, பார்ப்பதற்கு அழகாகவும் கண்களை கவரும் வகையில் இருந்தாலும், மறுபுறம் அதனை பராமரிப்பது சவாலானதாக உள்ளது. இருப்பினும், சரியான தயாரிப்புகளைப் பயன்படுத்துவதன் மூலமும், முடியை சேதப்படுத்தும் ஸ்டைலிங் முறைகளைத் தவிர்ப்பதன் மூலமும், சுருட்டை முடியை எளிதாக சமாளித்து விட முடியும்.
சுருட்டை முடிக்கான குறிப்புகள்
சல்பேட் இல்லாத ஷாம்பு
பல ஷாம்பூகளில் சல்பேட் அதிகம் இருக்கும். இவை முடியின் இயற்கையான எண்ணெய்களை அகற்றி, வறட்சி மற்றும் உரித்தல் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும். சுருட்டை முடியைப் பொறுத்தவரை, அவை ஏற்கனவே வறட்சியாக தான் இருக்கும். எனவே முடியை மேலும் சேதப்படுத்தாத சல்பேட் இல்லாத ஷாம்பூவைப் பயன்படுத்துவது நல்லது. சுருட்டை முடிக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அல்லது சல்பேட் இல்லாத ஷாம்பூக்களைத் பயன்படுத்துவது நல்லது.
கண்டிஷனர் பயன்பாடு
NCBI அறிக்கைகளின்படி, சுருட்டை முடியானது நேரான முடியை விட உலர்ந்ததாக இருக்கும். இதனால் சுருட்டை முடி உடையவர்களுக்கு அதிக ஈரப்பதம் தேவை. ஒரு நல்ல தரமான கண்டிஷனரை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், முடியை நீரேற்றத்துடனும், உதிர்தல் தன்மை இல்லாமலும் வைத்திருக்க முடியும். சுருட்டை முடிக்கென வடிவமைக்கப்பட்ட கண்டிஷனரைப் பயன்படுத்துவது சிறந்தது.
அடிக்கடி முடியை அலச வேண்டாம்
சுருட்டை முடி உடையவர்கள் அடிக்கடி முடியை அலசுவது, முடியை மேலும் வறட்சியாக மாற்ற வழிவகுக்கும். மேலும் முடி உதிர்வை ஏற்படுத்தும். இதனால் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு ஒரு முறை முடியை அலசுவது நல்லது. உலர்ந்த ஷாம்பு அல்லது கண்டிஷனரைப் பயன்படுத்தி உங்கள் சுருட்டை முடிகளை பராமரிக்க முயற்சிக்கவும்.
அகலமான பல் கொண்ட சீப்பைப் பயன்படுத்தவும்
சுருட்டை முடியில் அதிக சிக்கு ஏற்படும். அப்போது நெறுங்கிய பல் கொண்ட சீப்பை பயன்படுத்துவது முடி உடைவதற்கு வழிவகுக்கும். அதனால் முடியை அலசிய பின், கை விரலால் முடியை மெதுவாக பிரிக்க வேண்டும். பின் அகலமான பல் கொண்ட சீப்பை பயன்படுத்தவும். வேர் முதல் முனை வரை நிதானமாக சிக்கை பிரித்து எடுக்க வேண்டும்.
டிஃபியூசரை பயன்படுத்தவும்
முடியை அலசிய பின் உலர்த்தும் போது சுருள் முடி உடையவர்களுக்கு முடி உதிர்வு ஏற்படும். ஆனால் டிஃப்பியூசரைப் பயன்படுத்துவது இந்த விளைவுகளை குறைக்க உதவும். டிஃப்பியூசர் என்பது உங்கள் ப்ளோ ட்ரையரில் பொருத்தக்கூடிய ஒரு சிறப்பு இணைப்பாகும். இது வெப்பத்தை சமமாக விநியோகிக்க உதவுகிறது. ஃபிரிஸைக் குறைத்து, உங்கள் சுருட்டைகளை சமாளிக்கிறது. டிஃப்பியூசரைப் உங்கள் ப்ளோ ட்ரையருடன் இணைத்து, உங்கள் தலைமுடியை காய வைக்கலாம்.
வெப்பம் சார்ந்த ஸ்டைலிங் முறையை தவிர்க்கவும்
தட்டையான மற்றும் முடியை சுருள் செய்ய பயன்படுத்தும் வெப்பம் சார்ந்த ஸ்டைலிங் கருவிகளை தவிர்க்க வேண்டும். இதனை பயன்படுத்தினால் முடி சேதமடையும். முடிந்தவரை இது போன்ற கருவிகளை தவிர்க்கவும். அதற்கு பதிலாக வெப்பம் இல்லாத ஸ்டைலிங் முறையை தேர்வு செய்யவும். சில சமயங்களில் வெப்பம் சார்ந்த ஸ்டைலிங் கருவிகளைப் பயன்படுத்த வேண்டும் என்றால், வெப்ப பாதுகாப்பு ஸ்ப்ரே பயன்படுத்தவும். மேலும் வெப்பநிலையை குறைவாக வைத்து பயன்படுத்தவும்.
டிரிம் செய்தல்
ஆரோக்கியமான முடியை பராமரிக்க 12 வாரங்களுக்கு ஒரு முறை முடியை டிரிம் செய்வது அவசியம். இவ்வாறு செய்தால் முனைகளில் உள்ள வெடிப்புகள் நீங்கி முடி உடைவது குறையும். மேலும் சுருட்டை முடியை பராமரிக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இது உதவுகிறது.
தூங்கும் போது செய்ய வேண்டியவை
தலைமுடியை தளர்வாக வைத்து உறங்குவது அதிகப்படியான சிக்குகளுக்கு வழிவகுக்கும். இதனால் முடி உதிர்வு ஏற்படும். எனவே நீங்கள் தூங்கும் போது உங்கள் தலைமுடியைப் பாதுகாப்பது அவசியம். இதைச் செய்வதற்கான ஒரு வழி, முடியை தூக்கி கட்டிவிட்டு உறங்குவது தான். இது சுருட்டை முடியை அப்படியே வைக்க உதவும். மேலும் மிருதுவான தலையணையை பயன்படுத்துவதன் மூலம் முடி உராய்வால் ஏற்படும் முடி உதிர்வை தடுக்க முடியும்.
இயற்கையான சுருட்டை முடியை கவனித்துக்கொள்வதற்கு கூடுதல் முயற்சி தேவைப்படுகிறது. சரியான தயாரிப்புகளைப் பயன்படுத்துவதன் மூலமும், சேதப்படுத்தும் ஸ்டைலிங் முறைகளைத் தவிர்ப்பதன் மூலமும், மேற்கூறிய குறிப்புகளை பின்பற்றுவதன் மூலமும், உங்கள் சுருட்டை முடியை ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைத்திருக்க முடியும். உங்கள் தலைமுடிக்கு எது சிறந்தது என்பதை நீங்கள் கண்டுபிடிக்கும் வரை பொறுமையாக இருக்க வேண்டும்.
images credit: freepik