குழந்தைகளுக்கு சுய பாதுகாப்பு திறன்களை கற்பிப்பது பெற்றோரின் பொறுப்பு. குழந்தை படிப்பில் முதலிடம் பெற வேண்டும் என்பது பெரும்பாலான பெற்றோரின் கனவு. ஒன்றாம் வகுப்பு முதலே அவர்கள் எதிர்கால படிப்பு குறித்த கனவு பெற்றோருக்கு பிறக்கிறது. படிப்பு, கூடுதல் வகுப்பு என இதையெல்லாம் தாண்டி ஒரு குழந்தைக்கு சுய பாதுகாப்பு என்பது மிக முக்கியம். குழந்தைகளுக்கு பாதுகாப்பு திறன் என்பது அவர்களது வாழ்க்கையை முறையை மேம்படுத்த உதவுகிறது.
குழந்தைகளுக்கு சுய பாதுகாப்பு திறன் முக்கியம்
சில சமயங்களில் கல்வி அல்லது வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டியுள்ளது. அத்தகைய நேரத்தில், குழந்தைக்கு நல்ல பழக்கம் இல்லையென்றால், அவர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். குழந்தைகளுக்கு நல்ல கல்வியை வழங்குவதோடு, 5 வயதிலேயே நல்ல சுய பாதுகாப்பு திறன்கள் பற்றிய தகவல்களை வழங்கத் தொடங்குங்கள்.
இதையும் படிங்க: பிறந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த 8 குறிப்புகள் இங்கே
குழந்தைகளுக்கு பாதுகாப்பு திறன்களை எவ்வாறு கற்றுக் கொடுப்பது?
பாதுகாப்பு திறன்களை கற்றுக் கொடுத்தால் குழந்தைகள் தன்னை கவனித்துக்கொள்வதோடு, தனது விஷயங்களையும் கவனித்துக்கொள்ள முடியும். சுய பாதுகாப்பு அவர்களது வாழ்க்கையை தன்னம்பிக்கையோடு மாற்றுவதோடு அவர்களை வலிமையானவர்களாக மாற்றும். குழந்தைகளுக்கு சுய பாதுகாப்பு திறன்களை எவ்வாறு கற்றுக்கொடுப்பது என அறிந்துக் கொள்வோம் வாங்க.
அவர்கள் வேலையை அவர்களே செய்யச் சொல்லுங்கள்
குழந்தைகளுக்கு சுய-கவனிப்புக் குறிப்புகளைக் கற்பிக்க, 2 வயதிற்குப் பிறகு குழந்தைக்கு கை கழுவுதல், துலக்குதல் உள்ளிட்ட தூய்மை குறிப்புகளை கற்பிக்க வேண்டும். 3 வயதிற்குள், குழந்தைகளுக்கு ஒரு கரண்டியால் உணவெடுக்க கற்றுக்கொடுக்கவும், ரொட்டியை சிறிய துண்டுகளாக்கி அவர்களையே எடுத்து சாப்பிடச் சொல்லுங்கள். இதன் மூலம் குழந்தை தானே சாப்பிட கற்றுக் கொள்ளும்.
குழந்தையுடன் தொடர்ந்து பேசுங்கள்
குழந்தைகள் தன்னம்பிக்கை மிக்கவர்களாக மாற, அவர்களிடம் வெளிப்படையாக பேசுங்கள். தைச் செய்வதன் மூலம், குழந்தை உணர்ச்சி ரீதியாக வலுவாக இருக்கும். மேலும் அவர் தனது கருத்தை பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தை கொள்வார்கள். குழந்தைகள் சொல்வதைக் கேட்கும்போது அவர்களின் நல்ல விஷயங்களைப் புகழ்ந்து அவர்கள் ஏதாவது தவறு செய்தால் உடனடியாக குறுக்கிட்டு குழந்தைக்கு விளக்க முயற்சிக்கவும்.
புத்தகங்களின் உதவி
குழந்தைகளுக்கு சுய பாதுகாப்பு திறன்களை கற்பிக்க நல்ல புத்தகங்களின் உதவியையும் பெறலாம். அத்தகைய புத்தகத்தை குழந்தைகளுக்கு பரிசளிக்கவும். இதில் சுய பாதுகாப்பு திறன்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. வாரத்திற்கு ஒருமுறை குழந்தைகளை புத்தகக் கடை அல்லது நூலகத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். அவருக்குப் பிடித்த புத்தகத்தை எங்கிருந்து வாங்கலாம் என கற்றுக்கொடுங்கள். இது குழந்தைகளிடம் படிக்கும் பழக்கத்தை வளர்க்கும். புத்தகம் படிப்பதை இப்போது இருந்தே கற்றுக் கொடுப்பது அவர்களை டிவி, மொபைல் போன்றவற்றில் இருந்து தள்ளி இருக்க உதவும்.
படுக்கை நேர பராமரிப்பு
உங்கள் குழந்தைகளுக்கு சுய கவனிப்பு உதவிக்குறிப்புகளை கற்பிக்க, உறக்க நேர வழக்கத்தையும் அமைக்கவும். படுக்கைக்கு வந்தவுடன் மொபைல், டிவி பார்க்காமல் இருப்பதை சிறுவயதில் இருந்தே பழக்கப்படுத்துங்கள். படுக்கைக்குச் செல்வதற்கு முன் துலக்குதல், உடை மாற்றுதல் போன்ற பழக்கவழக்கங்கள் பற்றிய தகவல்களையும் கொடுங்கள். தினசரி ஒரே நேரத்தில் தூங்கி ஒரே நேரத்தில் எழுந்திருக்க கற்றுக் கொடுங்கள்.
உடல் செயல்பாடு
எந்தவொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தை உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்கள். உடல் செயல்பாடுகள் உள்ளிட்ட ஆரோக்கிய நன்மைகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். குழந்தைகளை அவர்களுக்குப் பிடித்தமான செயல்களில் பங்கேற்கச் செய்து அவர்களை வகுப்புகளில் சேரச் செய்யுங்கள். இதைச் செய்வது சுய பாதுகாப்பு திறன்களைக் கற்பிக்க உதவும்.
இதையும் படிங்க: ஊட்டச்சத்துக்களின் பொக்கிஷம் ராகி - இதை எந்த மாதத்திலிருந்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்?
உங்கள் குழந்தைகள் முதலில் உங்களை முழுமையாக நம்ப வேண்டும். அதற்கான வழிகளை மேற்கொள்ளுங்கள். இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியா. நாளைய இந்தியா உங்கள் கையில் தான் உள்ளது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
image source: freepik