Vitamin A Deficiency: வைட்டமின் ஏ குறைபாடு பார்வை இழப்பு, குருட்டுத்தன்மை போன்றவற்றை ஏற்படுத்தும். உடலில் போதுமான அளவு வைட்டமின் ஏ கிடைக்காத போது இந்த குறைப்பாடு ஏற்படுகிறது. இது பார்வை இழப்பு தவிர தோல், இதயம், நுரையீரல், திசுக்கள் மற்றூம் நோயெதிர்ப்பு அமைப்பு ஆகியவற்றில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது.
கிளீவ்லேண்ட் கிளினிக்கின் கூற்றுப்படி, உலகெங்கிலும் உள்ள குழந்தைகளில் குருட்டுத்தன்மைக்கு வைட்டமின் ஏ குறைபாடு முக்கிய காரணம் வகிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வைட்டமின் ஏ குறைபாட்டால் உலகளவில் 2,50,000 முதல் 5,00,000 குழந்தைகள் குருட்டுத்தன்மையால் பாதிக்கப்படுகிறார்கள். ஆரோக்கியமான பார்வை, வளர்ச்சிதை மாற்றம், செல் வளர்ச்சி, நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தை பராமரிக்க இந்த ஊட்டச்சத்து அவசியமாக திகழ்கிறது. எனவே, வைட்டமின் ஏ குறைபாட்டில் இருந்து மீள சில உணவுகளை வழக்கமாக்கிக்கொள்வது அவசியம்.
இதையும் படிங்க: காய்ச்சல் விரைவில் குணமாக இந்த 5 உணவுகளை சாப்பிடுங்கள்!!!
இலை காய்கறிகள்:
இலை காய்கறிகள் பூமியில் உள்ள ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாகும். கீரை, முட்டைக்கோஸ் மற்றும் ப்ரோக்கோலி போன்ற இலைக் காய்கறிகள் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்துகின்றன. மேலும் அவற்றில் நல்ல அளவு கரோட்டினாய்டுகள் லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் ஆகியவை உள்ளன. அவை வைட்டமின் ஏ இன் தாவர வடிவங்கள். மேலும் நீண்ட கால கண் நோய்களின் அபாயத்தை குறைக்கின்றன.
தக்காளி:
தக்காளியில் லைகோபீன் என்ற பொருள் உள்ளது. இது தக்காளியின் சிவப்பு நிறத்திற்கு காரணமாக திகழ்கிறது. தக்காளியில் உள்ள லுடீன் மற்றும் ஜியாக்சாந்தின் எனப்படும் பொருட்கள் ஸ்மாட்போன் மற்றும் கணினி போன்ற டிஜிட்டல் சாதனங்கள் வெளிபடுத்தும் UV கதிர்களில் இருந்து உங்கள் கண்களை பாதுகாக்கிறது.
சிவப்பு குடை மிளகாய்:
நேஷ்னல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் படி, அரை கப் பச்சை மற்றும் சிவப்பு குடை மிளகாயில் 117 மைக்ரோகிராம் ரெட்டினோல் செயல்பாட்டை வைட்டமின் ஏ-க்கு சமமாக வழங்குகிறது. ஆரஞ்சு மற்றும் சிவப்பு குடை மிளகாயில் உள்ள வைட்டமின் ஏ வடிவமானது பீட்டா ச்ரோட்டின் என்று அழைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: குயினோவா ஏன் சாப்பிட வேண்டும்?
பால்:
பால் உடலின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது வைட்டமின் ஏ, துத்தநாகம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். இது பல ஆரோக்கிய நன்மைகளுடன் தொடர்புடையது.
முட்டை:
கண் அரோக்கியத்திற்கு வியக்கத்தக்க வகியில் முட்டை நன்மை பயக்கிறது. முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் ஏ, லுடீன், ஜியாக்சாண்டின் மற்றும் துத்தநாகம் ஆகியவை உள்ளன. அவை கண் பார்வைக்கு இன்றியமையாதவை.
Image Source: Freepik