Doctor Verified

குழந்தைகளுக்கு ஆமணக்கு எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

  • SHARE
  • FOLLOW
குழந்தைகளுக்கு ஆமணக்கு எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

குழந்தைகளுக்கு ஆமணக்கு எண்ணெய் மசாஜ்: சிறு குழந்தைகள் மிகவும் மென்மையானவர்கள். அவர்களின் சீரான உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு சரியான பராமரிப்பு அவசியம். இதை சரியாக செய்வதன் மூலம் அவர்கள் நோய்வாய்ப்படுவதை தவிர்க்கலாம். மேலும் குழந்தைகளின் மென்மையான சருமத்திற்கும் சிறப்பு கவனிப்பு தேவைப்படுகிறது. அவர்களின் சருமத்திற்கு ஏற்றச் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்க வேண்டியதும் அவசியம்.குறிப்பாக மசாஜ் செய்வதற்கு சரியான எண்ணெய்களைப் பயன்படுத்த வேண்டும்.இல்லையெனில் உடலில் தடிப்பு, எரிச்சல், தோல் வறட்சி மற்றும் உரிதல் ஏற்படலாம். குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய, கடுகு எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் உள்ளிட்ட பல எண்ணெய்களைப் பயன்படுத்துகின்றனர், ஆனால் ஆமணக்கு எண்ணெயைப் பயன்படுத்துவது சரியா அல்லது தவறா என்ற சந்தேகம் பல பெற்றோர்களுக்கு உள்ளது. உங்கள் சந்தேகத்தைத் தெளிவு படுத்த, உங்கள் கேள்விக்கான விடையறிய பதிவைத் தொடர்ந்து படியுங்கள் 

ஆமணக்கு எண்ணெயின் சத்துக்கள் - Castor Oil Nutrients

ஆமணக்கு எண்ணெயில், வைட்டமின் E, கனிமங்கள் மற்றும் புரதங்கள் ஏராளமாக உள்ளன. ஆமணக்கு எண்ணெயில் உள்ள ரிசினோலியிக் ஆசிட், அழற்சி எதிர்ப்புப் பண்புகள், பூஞ்சை எதிர்ப்புப் பண்புகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் போன்றவை ஏராளமான நன்மைகளைத் தருவதாகக் கருதப்படுகிறது.

what-are-the-benefits-of-massaging-babies-with-castor-oil

சிறு குழந்தைகளுக்கு ஆமணக்கு எண்ணெய் மசாஜ் சரியானதா?

ஆமணக்கு எண்ணெய் குழந்தைகளின் சருமத்திற்கு முற்றிலும் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது.இதன் சத்துக்கள் குழந்தையின் சருமத்தை அதிகமாக சென்றடையும்.இருப்பினும், பலருக்கும் இந்த ஆமணக்கு எண்ணெயின் வாசனை பிடிப்பதில்லை. குழந்தையின் சருமம் சென்சிட்டிவாக இருந்தால் அல்லது சருமத்தில் வெடிப்புகள் இருந்தால், ஆமணக்கு எண்ணெயை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கு ஆமணக்கு எண்ணெய் மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

  • சில நேரங்களில், சிறு குழந்தைகளின் சருமம் மிகவும் வறண்டு காணப்படும். வறண்ட சருமத்தில் ஆமணக்கு எண்ணெயைப் பயன்படுத்தினால், அது மென்மையாக மாறும். ஆமணக்கு எண்ணெயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இயற்கை மாய்ஸ்சரைசராக செயல்பட்டு, குழந்தையின் சருமத்தை மென்மையாக்குகிறது. 
    • சில நேரங்களில் குழந்தைகளின் சருமத்தில் சிறு புள்ளிகள் காணப்படலாம். இதை சரி செய்து தெளிவான சருமத்தை பெற ஆமணக்கு எண்ணையை பயன்படுத்தலாம். வெதுவெதுப்பான ஆமணக்கு எண்ணெயைப் பயன்படுத்துவது, குழந்தையின் சருமத்தில் இருக்கும் புள்ளிகள், தழும்புகள் ஆகியவற்றை நீக்க மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது.
      • குழந்தையின் சருமத்தில் ஆமணக்கு எண்ணெயைத் தடவுவதால் வெயிலின் தாக்கம் ஏற்படாது. குழந்தைகளுக்கு ஏற்படும் பொதுவான அழற்சிகளை குணப்படுத்தவும் இந்த எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.
        • சில சமயங்களில், குழந்தைகளுக்கு டயப்பர் பயன்படுத்துவதால் தடிப்புகள் ஏற்படலாம். டயப்பரால் ஏற்பட்ட தடிப்புகள் மற்றும் சிறு பருக்களைக் குணப்படுத்துவதில் ஆமணக்கு எண்ணெய் சிறப்பாகச் செயல்படுகிறது.
        • குழந்தைகளுக்கு ஆமணக்கு எண்ணெயைப் பயன்படுத்துவது எப்படி?

          குழந்தையின் சருமம் மற்றும் முடிக்கு ஆமணக்கு எண்ணெயைப் பயன்படுத்தும்போது அதிக கவனம் தேவை. ஒரு பாத்திரத்தில் 2 முதல் 4 டீஸ்பூன் எண்ணெயை எடுத்து, அதை லேசாக சூடு செய்யவும்.இந்த வெதுவெதுப்பான எண்ணெயில் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயைக் கலந்து குழந்தைக்கு மசாஜ் செய்யலாம். எண்ணெய் வெதுவெதுப்பான சூட்டில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

          Image Source: Freepik

அடுத்ததை படிக்கவும்

Overeating: அதிகமாக சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? இதை கைவிட சிம்பிள் டிப்ஸ்!

பொறுப்புத் துறப்பு