Expert

Weight Loss Stages: உடல் எடை இழப்பை விரும்புகிறவர்களா நீங்கள்? இதைக் கவனிங்க

Weight Loss Stages: உடல் எடை இழப்பை விரும்புகிறவர்களா நீங்கள்? இதைக் கவனிங்கWeight Loss Stages: உடல் எடை இழப்பை விரும்புகிறவர்களா நீங்கள்? இதைக் கவனிங்க

Different Stages Of Weight Loss: உடல் எடையைக் குறைக்க இன்று பலரும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர். அதன் படி உடற்பயிற்சி மேற்கொள்வது, உணவு முறையைக் கையாள்வது உள்ளிட்ட பல வழிகளை மேற்கொண்டு உடல் எடையைக் குறைக்கலாம். உண்மையாக, எடை இழப்பு என்பது பல்வேறு நிலைகளைக் கொண்ட சிக்கலான செயல்முறைகளைக் கொண்டதாகும். இந்த பதிவில், எடை இழப்பில் உள்ள பல்வேறு நிலைகளைக் காணலாம்.

எடை இழப்பின் பல்வேறு நிலைகள்

முதல் நிலை: தயாரிப்பு நிலை

எடை இழப்பின் முதல் நிலை தயாரிப்பு நிலையாகும். உதாரணமாக ஒருவர் 30 வயதுக்கு கீழ் உள்ள நபர்கள் எடை இழப்பு பயணத்தை மேற்கொள்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். தயாரிப்பு நிலை குறித்து டெல்லியைச் சேர்ந்த உணவியல் நிபுணர் ப்ரியா பன்சால் அவர்கள் விளக்கியுள்லார். இந்த நிலையில் எடை இழப்புக்கு ஒருவர் தற்போதையை வாழ்க்கை முறையை மதிப்பீடு செய்து இலக்குகளை நிர்ணயிப்பர். இதில் தீவிர நடவடிக்கைகளை நாடுவதற்குப் பதிலாக நிலையான மாற்றங்களைச் செய்ய வேண்டும். ஆரோக்கிய உணவு, சரியான தூக்கம் மற்றும் வழக்கமான உடற்பயிற்சி போன்றவற்றை தினசரி வழக்கமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Tips : இதை செய்தால் போதும் வெறும் 21 நாளில் உடல் எடையை ஈஸியா குறைக்கலாம்!

இரண்டாம் நிலை: ஆரம்ப கால எடை இழப்பு

உணவுத் திட்டத்தில் சில மற்றங்களைக் கண்ட பின், ஆரம்ப எடை இழப்பு நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். இந்த கட்டத்தில் உணவு மாற்றங்கள் மற்றும் அதிகரித்த உடல் செயல்பாடுகள் போன்றவற்றின் விளைவாக விரைவான உடல் இழப்பை உணாலாம். இதில் ஒரு நபர் தங்களது உடலில் ஏற்படும் மாற்றங்களைக் கவனிக்க முடியும்.

மூன்றாம் நிலை: பீடபூமி நிலை

ஒருவர் தனது எடையிழப்புப் பயணத்தில் முன்னேறும் போது அவர்கள் இந்த மூன்றாம் நிலையை அடைவர். உடல் சரியான மற்றும் ஒரே மாதிரியான உணவுகளை உண்பதற்குப் பழக்கமாவீர்கள். இந்த நிலையே பீடபூமி நிலை ஆகும். இந்த நிலை பொதுவாக இரண்டு மாதங்கள் தொடர்ந்து உணவுக் கட்டுப்பாட்டிற்குப் பிறகும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நிலையில், உடல் எடை குறைப்பவர்கள் புதிய பயிற்சிகளை அறிமுகப்படுத்துதல், கலோரி உட்கொள்வதை மாற்றுவது, ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனை பெறுவது போன்றவை இந்த நிலையில் செய்யக்கூடும்.

இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Tips : என்ன செய்தாலும் உடல் எடை குறையலையா? இதை ட்ரை பண்ணுங்க!

நான்காம் நிலை: மெதுவான மற்றும் நிலையான நிலை

இந்த நிலை பொறுமையை சோதிக்கக் கூடிய நிலையாகும். உதாரணமாக, பன்சாலின் கூற்றுப்படி, ஒரு கிலோவைக் குறைக்க இரண்டு வாரங்கள் தேவைப்படும் எனக் கூறினார். இந்த கட்டத்தில் முக்கிய குறிக்கோள்களில் கவனம் செலுத்தி தொடர்ந்து எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இந்த நிலையில் உடல் ஆற்றல் அதிகரிப்பு, சகிப்புத் தன்மை உள்ளிட்டவற்றைப் பெறலாம்.

ஐந்தாம் நிலை: பராமரிப்பு நிலை

நீண்ட காலத்திற்கு தொடர்ந்து பின்பற்றிய எடை மற்றும் ஆரோக்கியமான பழக்கங்களை நிலைநிறுத்துவதே இந்த நிலையின் நோக்கமாகும். இதில் உடல், உணவு மற்றும் உடற்பயிற்சிகளுக்கு ஏற்ப உடல் எடை எவ்வாறு குறைகிறது என்பதைச் சிந்திப்பர். இந்த காணக்கூடிய மாற்றங்கள் உணவு மற்றும் உடற்பயிற்சிகளில் தொடர்ச்சியான மாற்றங்களைச் செய்வதன் மூலம் உறுதிப்படுத்த முடியும். மேலும் இதனுடன் ஆரோக்கியமாக வாழ்க்கை முறையைப் பேணுவது அவசியம் என பன்சால் கூறியுள்ளார்.

எடை இழப்பை எவ்வாறு அதிகரிக்கலாம்?

எடை இழப்பை அதிகரிக்க விரும்புபவர்கள் பல்வேறு முக்கிய காரணங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

உடல் செயல்பாடு

உடல் எடை குறைப்பவர்கள் வழக்கமான உடல் செயல்பாடுகளை இணைத்துக் கொள்ள வேண்டும். எடைப்பயிற்சி, கார்டியோ போன்ற பலவிஹமான உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Exercise For Women: உடல் எடை சீக்கிரம் குறைய இந்த உடற்பயிற்சி செய்யுங்க!

கவனத்துடன் சாப்பிடுதல்

உடல் எடையைக் குறைக்க கவனமாக உணவை சாப்பிட வேண்டும். மேலும், சாப்பிடும் போது ஒவ்வொரு கடியையும் ருசிக்கவும், உடலின் பசி மற்றும் முழுமைக்கான குறிப்புகளைக் கேட்கவும் பரிந்துரைக்கிறார்.

தூக்கம் மற்றும் மன அழுத்தம் மேலாண்மை

உடல் எடை இழக்க விரும்புபவர்கள், தரமான தூக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பது அவசியம். மேலும் மன அழுத்தத்தை நிர்வகிப்பது அவசியமாகும். போதுமான உறக்கம் இல்லாதது ஹார்மோன் சமநிலையின்மைக்கு வழிவகுக்கலாம். இது உடல் எடை இழப்பு முயற்சிகளைப் பாதிக்கலாம்.

குறிப்பு

எடை இழப்பு என்பது தனித்துவமானதாகும். இதில் உங்கள் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும். இலக்குகளை அமைத்து அதனை அடைவதற்கு வழியை அமைப்பது ஒட்டு மொத்த நல்வாழ்க்கும் உரியதாக அமையும்.

இந்த பதிவும் உதவலாம்: Weightloss Without Exercise: உடற்பயிற்சியே செய்யாமல் உடல் எடையை குறைக்கலாம்!

Image Source: Freepik

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, காலக்கெடு மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்த அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன; இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இணையதளம் வழங்கும் எந்த தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பப்படி மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால், மேலே குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் பதில்கள்/கருத்துகள் வடிவில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் வழங்கப்படும் ஏதேனும் ஆலோசனை/உதவிக்குறிப்புகளைப் பயன்படுத்துவதற்கு முன், தகுதிவாய்ந்த மருத்துவப் பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்