உணவுப் பழக்க வழக்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் காலகட்டமாக கர்ப்ப காலம் உள்ளது. பெண்கள் இந்த சமயத்தில் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுப்பொருள்கள், பழங்கள் என பல வகைகள் உள்ளன. இந்த உணவுக் கட்டுப்பாடுகள் தாய் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில் அமையக்கூடியதாக இருக்கும். இதில் பெண்கள் கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய சில பழங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி இதில் காண்போம்.
கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
சில பழங்கள் உடலுக்கு வெப்பமூட்டுவதாக அமைகின்றன. இந்த வகையான பழங்களை கர்ப்பிணி பெண்கள் உண்ணும் போது, அது குழந்தையைப் பாதிக்கும் அபாயம் ஏற்படலாம். இது போன்ற பழங்களை பெண்கள் கர்ப்ப காலத்தில் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
அன்னாச்சிப்பழம்
அன்னாச்சிப்பழத்தில் அதிக அளவிலான புரதங்கள், வைட்டமின்கள் போன்றவை நிறைந்திருக்கிறது. இருப்பினும், இந்த பழங்களை கர்ப்ப காலத்தின் ஆரம்ப கட்டத்தில் உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. அன்னாச்சிப்பழத்தில் ப்ரோமிளின் என்ற என்சைம் காணப்படுகிறது. இது கர்ப்பப்பை வாயை பலவீனமாக்கி கருச்சிதைவு உண்டாக வழிவகுக்கிறது அல்லது முன்கூட்டியே குழந்தை பிறப்பை உண்டாக்குகிறது.

இந்த பதிவும் உதவலாம்: கர்ப்ப காலத்தில் எந்த மாதிரியான உடற்பயிற்சிகள் பாதுகாப்பானவை
பப்பாளி
கர்ப்ப காலத்தில் பழுக்காத பப்பாளி பழம் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாக அமைகிறது. பழுத்த பப்பாளி பழம் எடுத்துக் கொள்ளும் போதும் சரியான அளவில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். குறைவான அளவில் எடுத்துக் கொள்ளும் போது, தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் கேடு விளைவிப்பதில்லை. ஆனால், பழுக்காத பப்பாளிப்பழம் அதாவது பப்பாளி காயாக இருக்கும் போது அதில் ஸ்டெக்ஸ் என்ற கூறு உள்ளது. பெண்கள் கர்ப்ப காலத்தில் பப்பாளி காயை அதிகமாக உட்கொள்வதால் ஸ்டெக்ஸ் ஆனது பெண்களின் கருப்பையில் சுருக்கத்தை ஏற்படுத்தி குழந்தைகளைப் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.
திராட்சை
பெரும்பாலும் திராட்சை உண்பது உடலுக்கு நன்மை என்றே கருதப்படும். இதில் ஆர்கானிக் அமிலம், மினரல் சத்துக்கள், வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்ட்கள் போன்றவை அதிகம் காணப்படுகிறது. நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பிற்கும், இரத்த சோகை குணமாக்கவும் திராட்சை பெரிதும் உதவுகிறது. இருப்பினும், அளவுக்கு அதிகமான திராட்சையை உட்கொள்ளும் போது பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கர்ப்ப காலத்தில் அளவுக்கு அதிகமாக திராட்சை உட்கொள்ளும் போது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Pregnancy Test Kit: கர்ப்ப பரிசோதனை கருவியை பயன்படுத்துவது எப்படி?
Image Source: Freepik