ஒருவர் தங்களை அழகாக பராமரிப்பதற்கான முதல் படி ஹைஜீன் ஆகும். இதையடுத்து தான் மற்றவை. நீங்கள் உங்களை அழகுபடுத்த விரும்பினால் சில ஆரோக்கியமான பழக்கங்களைப் பின்பற்றுவது அவசியம். மேலும் உங்கள் தினசரி வழக்கத்தில் சில நேர்த்தியான நடைமுறைகளைச் சேர்ப்பது முக்கியம். ஆண்களை பொருத்தவரை ஹைஜீனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதனை அவர்கள் புறக்கணிக்கிறார்கள். இது ஆரோக்கியமற்ற வாழ்க்கைக்கு வழிவகுக்கும். ஆண், பெண் இருபாலரும் ஹைஜீன் குறித்து வெவ்வேறு அணுகுமுறைகளைக் கொண்டுள்ளனர். பெண்களை விட ஆண்களுக்கு சீர்ப்படுத்தல் மற்றும் தனிப்பட்ட ஹைஜூன் குறைவாக இருப்பதாக கருதப்படுகிறது என்பது தான் உண்மை.
அமெரிக்கன் க்ளீனிங் இன்ஸ்டிடியூட் மற்றும் அமெரிக்கன் மைக்ரோபயாலஜி சொசைட்டி ஆகியவற்றின் 2010 ஆம் ஆண்டு ஆய்வில், பெரும்பாலான ஆண்கள் உணவு உண்ட பிறகும், செல்லப்பிராணிகளை கொஞ்சிய பின்பும், சிறுநீர் கழித்தல், இருமல் அல்லது தும்மல் போன்றவற்றிர்க்கு பிறகும் கைகளை கழுவுவதில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆண்கள் தனிப்பட்ட ஹைஜீன் பழக்கங்களைச் சரிபார்க்க இதுவே சரியான நேரம். ஏனெனில் இவற்றைப் பின்பற்றாதது கற்பனை செய்ய முடியாத தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கும். ஒவ்வொரு ஆண்களும் தெரிந்து கொள்ள வேண்டிய மற்றும் பின்பற்ற வேண்டிய ஹைஜீன் பழக்கங்களைப் பற்றி அறிய இந்த பதிவை மேலும் படிக்கவும்.
ஆண்கள் பின்பற்ற வேண்டிய ஹைஜீன் பழக்கங்கள்
உடல் துர்நாற்றத்தை எதிர்த்துப் போராடுவது முதல் வாய் துர்நாற்றம் வரை, ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய பல தனிப்பட்ட ஹைஜீன் பழக்கங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மனிதனும் தனிப்பட்ட ஹைஜீன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அதற்குப் பின்பற்ற வேண்டிய சில விதிகள் பின்வருமாறு:
1. குளியல்:
உடற்பயிற்சி அல்லது வொர்க்அவுட்டானது அதிக வியர்வையை ஏற்படுத்தும். இது துர்நாற்றத்திற்கு வழிவகுக்கும். குளித்தால் உடல் நாற்றத்தை போக்கலாம். எல்லா ஆண்களும் குளிப்பதைத் தாமதப்படுத்தாமல் தினமும் நன்றாகக் குளிப்பது அவசியம். குளிப்பதுடன், வாய் துர்நாற்றம் வராமல் இருக்க ஹைஜீன் கடைபிடிப்பதும் அவசியம்.
2. சுத்தமான தலைமுடி:
உங்கள் தலைமுடியை சுத்தமாக வைத்திருப்பது, தனிப்பட்ட ஹைஜீன் பழக்கங்களைப் பின்பற்றுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். உங்கள் தலைமுடியை இயற்கையான பொருட்களால் அலச வேண்டும். மேலும் ரசாயன ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் தலைமுடியை தினமும் அலச வேண்டாம். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டும் அலசினால் போதும். கூடுதலாக, முடிதிருத்தும் வேலையை தவறாமல் சென்று உங்கள் முகத்திற்கு ஏற்ற சிகை அலங்காரத்தைப் பெறுங்கள்.
3. தாடியை கத்திரிக்கவும்:
உங்கள் தலைமுடியுடன், தாடியை வெட்டுவதும் முக்கியம். உங்கள் தாடி நரைக்க ஆரம்பித்தவுடன் ஷேவ் செய்யுங்கள். சரியான நேரத்தில் ஷேவிங் செய்வது சொறி ஏற்படுவதைத் தடுக்கும். நீங்கள் பொதுவாக தாடி வைத்திருந்தாலும், வேர்களில் படியும் அழுக்குகளிலிருந்து பாதுகாக்க, அதை ஒழுங்காக சுத்தம் செய்ய வேண்டும்.
4. நகம் வெட்டுதல்:
பெண்கள் எப்படி நகங்களை பராமரிப்பார்களோ, அதே போல ஆண்களும் நகங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கால் நகங்கள் அழுக்காகவும் ஆரோக்கியமற்றதாகவும் இருக்கும். பாதங்களில் துர்நாற்றம் வீசுவதற்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று. உங்கள் நகங்களின் விளிம்புகளில் உங்கள் தோலின் மடிப்புகளை ஒழுங்கமைப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவற்றை ஈரப்பதமாகவும் மென்மையாகவும் வைத்திருக்க பாடி லோஷனைப் பயன்படுத்தவும்.
5. துவைக்கப்படாத ஆடைகள் அல்லது காலுறைகளை அணிய வேண்டாம்:
சில ஆண்களுக்கு தினமும் உள்ளாடைகள் மற்றும் காலுறைகளை துவைக்கும் பழக்கம் இருப்பதில்லை. இருப்பினும், பல்வேறு நோய்த்தொற்றுகள் உங்கள் உடலைத் தாக்குவதைத் தடுப்பது முக்கியம். உங்கள் ஆடைகள் மற்றும் உள்ளாடைகளை துவைக்க நீங்கள் ஒரு நல்ல துணி சோப்பை பயன்படுத்த வேண்டும். இதனால் நீங்கள் தினசரி வாசனையுடன் ஆடைகளை அணியலாம். நீங்கள் ஒரு ஜோடி காலுறைகளை அதிக நேரம் அணிந்தால், ஈரப்பதம் மோசமான துர்நாற்றத்தை ஏற்படுத்தும். ஆகையால் கூடுதலாக காலுறைகளை பராமரிப்பது நல்லது. மேலும் அவற்றை சுற்றமாக வைத்திருப்பது முக்கியம்.
6. ஆணுறுப்பை சுத்தமாக பராமரிக்க வேண்டும்:
பெண்களைப் போலவே ஆண்களுக்கும் அந்தரங்க உறுப்பை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். முதலில், ஒவ்வொரு ஆணும் அந்தரங்க உறுப்பில் உள்ள முடியை ஒழுங்காக வெட்டி, சுத்தம் செய்து கையாள வேண்டும். அந்த இடத்தில் நீளமான முடி இருப்பது உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். நீண்ட முடி அதிக வியர்வையை ஏற்படுத்தும், இது ஆரோக்கியமற்றது மற்றும் தொற்றுநோய்க்கு வழிவகுக்கும். அதிக இரசாயனங்கள் இல்லாமல் அந்த பகுதியை சுத்தம் செய்யுங்கள்.
இவை எல்லா ஆண்களும் பின்பற்ற வேண்டிய சில ஹைஜீன் பழக்கங்கள். இதனை பின்பற்றுவது அவசியம். இருப்பினும், எதை தொடங்கும் முன்பும், மருத்துவரை அணுகுவது நல்லது. ஆண்களின் ஹைஜீன் குறிப்புகள் அவர்களின் உடலைப் பற்றிய தனிப்பட்ட புரிதலைப் பொறுத்தது. உங்கள் சொந்த தேவைகளின் அடிப்படையில் மேலே பட்டியலிடப்பட்ட உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவது பற்றி நீங்கள் சிந்திக்கலாம். ஹைஜீன் பழக்கவழக்கங்களைப் பயிற்சி செய்வதில் உங்களுக்கு வழிகாட்டவும் அறிவுறுத்தவும் பல ஆண் நிபுணர்கள் உள்ளனர்.
Image Source: Freepik