Rapid Weight Loss: உடல் எடை அதிகரிப்பால் பல உடல்நல பிரச்னைகள் ஏற்படும் அபாயம் இருக்கிறது. உடல் எடையை குறைக்க நினைக்கும் பலரும் அதை சரியாக செய்வதில்லை.
விரைவாக உடல் எடையை எப்படி குறைப்பது?
விரைவாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதே பலரின் ஆசையாக இருக்கிறது. அதேநேரத்தில் எடை இழப்பை ஆரோக்கியமாகவும், நிலையானதாகவும் அணுகுவது மிக அவசியம் என்பதை நினைவில் கொள்வது இல்லை. வேகமான உடல் எடை இழப்பு என்பது கவர்ச்சிகரமாக இருக்கலாம் ஆனால் அதில் இருக்கும் ஆபத்துகள் மற்றும் குறைபாடுகள் குறித்து அறிவதில்லை. வேகமான உடல் எடை இழப்பால் ஏற்படும் அபாயங்கள் குறித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: உடல் எடையை குறைக்க கேரட் ஜூஸ் எப்படி குடிக்கணும்? எவ்வளவு குடிக்கணும்?
பயோடெக்னாலஜி தகவல்களுக்கான தேசிய மையத்தின் (NCBI) ஆய்வின் படி, நேரம் பின்பற்றாமல் உணவை உண்பது, கொழுப்பு மற்றும் கலோரிகள் நிறைந்த உணவை உண்பது, அதிக அளவிலான உணவுகளை கட்டுபாடின்றி உண்பது என பலவகையில் உடல் எடை வேகமாக அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

விரைவான எடை இழப்பு சிக்கல்கள்
எடை இழப்பு என்று வரும்போது குறைந்த அளவிலான கலோரிகள் கொண்ட உணவுகள் என்பதில் கவனம் செலுத்துவது மிக அவசியம். இந்த வகையான உணவுகளை சாப்பிடும் பட்சத்தில் வேகமான தீர்வு கிடைக்கக் கூடும். வேகமாக உடல் எடையை குறைக்க ஆசைப்பட்டு, திடீரென தொடர்ச்சியாக குறைந்த அளவிலான கலோரி உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது உடல் பலவீனம் அடையும், தலைச்சுற்றல் போன்ற விளைவுகளை சந்திக்கக் கூடும். இந்த விளைவுகள் தசை பலவீனம், வலிகள் மற்றும் தசைப்பிடிப்புக்கு வழிவகுக்கும்.
க்ராஷ் டயட்டின் ஆபத்துகள்
க்ராஷ் டயட் மூலம் ஏற்படும் விளைவுகள் முகத்தில் தெரியும். சுருக்கமான தோல்கள், வெளிறிய நிறம் என முகம் மாற்றம் அடையும். விரைவான எடை இழப்பு ஒரு நபரை மந்தமாக உணர வைப்பதோடு அவர்களின் ஒட்டுமொத்த தோற்றத்தை பாதிக்கும்.
எடை இழப்புக்கான சிறந்த அணுகுமுறை என்ன?
இதுகுறித்து நிபுணர் சர்மா கூறுகையில், சிறந்த எடை இழப்பு என்பது உடல் எடையை படிப்படியாக குறைக்க வேண்டும். வாரத்திற்கு தோராயமாக 600 முதல் 800-900 கிராம் வரை எடை குறைய வேண்டும். இதை அடைய, ஆரோக்கியமான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சி ஆகியவை சமமாக இருக்க வேண்டும்.
இதையெல்லாம் தவிர்க்க வேண்டும்
தொகுக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைப்பது, சர்க்கரை மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்களை உட்கொள்வதை கட்டுப்படுத்துவது மற்றும் நீர் உட்கொள்ளலை அதிகரிப்பது ஆகியவை உடல் எடையை குறைக்க உதவும் பயனுள்ள நடைமுறைகளாகும்.
நொறுக்குத் தீனிகள் கூடவே கூடாது
வேகவைத்தல், வதக்குதல் மற்றும் நன்றாக வறுத்தல் போன்ற ஆரோக்கியமான சமையல் முறைகளை தேர்ந்தெடுப்பது மிக நல்லது. நொறுக்குத் தீனிகள் மற்றும் வறுத்த உணவுகளைத் தவிர்ப்பதும் மிக நல்லதாகும்.
அதேபோல் சர்க்கரை மற்றும் உப்பு நிறைந்த உணவுகள் உட்கொள்வதை கட்டுப்படுத்துவதும் மிக அவசியம்.

ஊட்டச்சத்து நிறைந்த உணவு
சீரான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவைப் பின்பற்றுங்கள். இந்த உணவில் புரதங்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் குறைந்த அளவு கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதை உறுதி செய்துக் கொள்ளுங்கள்.
உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பெறுவதை உறுதிசெய்வது மிக அவசியம். ஊட்டச்சத்து குறைபாடுகள் ஆரோக்கியத்தில் பல்வேறு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என சர்மா கூறி உள்ளார். மேலும் இதுகுறித்து கூறுகையில்,
எடை பராமரிப்பின் முக்கியத்துவம்
சர்மா கூறுகையில், இரும்புச் சத்து, ப்ரோடின் போன்றவை உங்கள் உணவில் இருப்பதை உருதி செய்து கொள்ளுங்கள். உங்கள் உணவிற்கு ஏற்ப உடற்பயிற்சி செய்யுங்கள். குறைந்த உணவை உட்கொண்டு அதிகளவு உடற்பயிற்சி செய்வது நல்லதல்ல. தினசரி முறையான உடற்பயிற்சி என்பது தங்கள் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
இதையும் படிங்க: வார இறுதியில் எடை அதிகரிப்பு? இதை தவிர்க்க 7 குறிப்புகள் இங்கே
அதேபோல், உங்கள் உடல் வகைக்கு ஏற்ப எடை இழப்பு திட்டத்திற்கு உங்கள் உணவியல் முறையை வகுக்க நிபுணரை அணுகுவது என்பது சிறந்த முடிவாக இருக்கும்.
image source: freepik