மன அழுத்தம் என்பது உலகளவில் கோடி கணக்கான மக்களை பாதிக்கும் ஒரு தீவிரமான மனநல நிலை ஆகும். இது நம்பிக்கையின்மை, சோகம் மற்றும் உந்துதல் இல்லாமை போன்ற உணர்வுகளை ஏற்படுத்தும். ஆனால் சரியான சிகிச்சையுடன், மன அழுத்தத்தை குணப்படுத்த முடியும். அப்படி நீங்கள் மன அழுத்தத்தில் இருந்து குணமடைந்து வருகிறீர்கள் ஆனால், நீங்கள் சில அறிகுறிகளை உணர்வீர்கள். இந்த அறிகுறிகள் குறித்து விரிவாக காண்போம்.
மன அழுத்தத்திலிருந்து குணமடைவதற்கான அறிகுறிகள்:
நீங்கள் மன அழுத்தத்தில் இருந்து குணமடைவதற்கான சில அறிகுறிகள் இங்கே:
1. நல்ல தூக்கம்:
மன அழுத்தம் உள்ளவர்கள் தூக்கம் இன்மையால் அவதியுற நேரிடும். இந்நிலையில் அவர்கள் நன்றாக தூங்கத் தொடங்கினால், மன அழுத்தத்தில் இருந்து அவர்கள் மீண்டு வருகிறார்கள் என்று அர்த்தம்.
2. அதிக ஆற்றல்:
மன அழுத்தம் உள்ளவர்கள் எப்போதும் சோர்வுடனும், மந்தமாகவும் காணப்படுவார்கள். இந்நிலையில் அதிக ஆற்றலுடனும், ஊக்கத்துடனும் காணப்பட்டால், அவர்கள் மன அழுத்தத்தில் இருந்து குணமடைந்து வருகிறார்கள் என அறியலாம்.
3. மனம் விட்டு சிரித்தல்:
மன அழுத்தம் உள்ளவர்களிடம் மகிழ்ச்சியை காண்பது என்பது அரிதாகும். ஆனால் அதிகமாக மனம் விட்டு சிரிக்க ஆரம்பித்து, மகிழ்ச்சியின் தருணங்களை அனுபவிக்க ஆரம்பித்தால், அது மன அழுத்தத்தில் இருந்து குணமடைந்ததர்கான அறிகுறியாக இருக்கலாம்.
4. கவனம் செலுத்துதல்:
மன அழுத்தம் உள்ளவர்களுக்கு பணிகளில் கவனம் செலுத்துவது என்பது கடினமாக இருக்கும். இந்நிலையில், அதிக கவனம் செலுத்தி பணிகளை திறமையாக முடிக்க ஆரம்பித்தால், அது மன அழுத்தத்தில் இருந்து அவர்கள் குணமரைகிறார்கள் என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
5. பழகுவதில் ஆர்வம்:
மன அழுத்தம், ஒருவரை சமூக சூழலில் இருந்து விலகச் செய்யும். இப்படி இருக்கும்போது, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பழகுவதற்கும், மீண்டும் இணைவதற்கும் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கினால், அது அவர்கள் மன அழுத்தத்தில் இருந்து வெளிவருகிறார்கள் என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
6. தங்கள் மீது கவனம்:
மன அழுத்தம், தங்களை கவனித்துக்கொள்வதை கடினமாக்கும். இந்த வேலையில் நன்றாக சாப்பிடுதல், உடற்பயிற்சி செய்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு, தங்களை கவனித்துக்கொள்ள தொடங்கினால், அது மன அழுத்தத்திலிருந்து குணமாவதற்கான அறிகுறியாகும்.
7. குறைந்த உணர்வு:
மன அழுத்தத்தின் அறிகுறிகள் கடுமையானதாக இருக்கும். அதாவது சோகம், நம்பிக்கையின்மை மற்றும் பதட்டம் போன்ற அறிகுறிகள் அதிகரிக்கும். இருப்பினும் இந்த அறிகுறிகளை சற்று குறைவாக உணர்வது என்பது மன அழுத்தத்தில் இருந்து குணமடைந்து வருவதாக பொருள்.
மன அழுத்தத்தில் இருந்து குணமடைய நேரம் எடுக்கும் என்பதை நினைவில் கொள்வது அவசியம். ஒவ்வொருவரின் பயணமும் தனித்துவமானது. நீங்கள் மன அழுத்தத்துடன் போராடினால், தொழில்முறை உதவி மற்றும் ஆதரவைப் பெறுவது முக்கியம். சிகிச்சை, மருந்துகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவை மன அழுத்தத்தை குறைக்க உதவும். ஏற்ற தாழ்வுகள் நிறைந்த வாழ்க்கைமுறையில், பொருமையுடன் இருப்பது முக்கியம்.
மேலே கூறப்படுள்ள அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் சந்தித்தால், நீங்கள் மன அழுத்தத்தில் இருந்து குணமாகிவருகிறீர்கள் என்று அர்த்தம். உங்களுக்கு தேவைப்பட்டால் நிபுணர்களின் உதவியை நாடலாம்.
Image Source: Freepik