புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க செய்யவேண்டிய மாற்றங்களைப் படித்தறிந்து பின்பற்றுவோம்.
இன்றைய காலக்கட்டத்தில், ஒவ்வொருவரும் தங்களின் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க பல வழிகளைக் கடைபிடித்து வருகின்றனர். உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள எளிதான வழி உடற்பயிற்சி செய்வது. உடற்பயிற்சி உங்கள் உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், உங்களுக்குப் பல ஆரோக்கிய நன்மைகளையும் தருகிறது. தினமும் அரை மணி நேரம் அல்லது மிதமான வேகத்தில் 1 மணி நேரம் உடற்பயிற்சி செய்தால், புற்றுநோய், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பல நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம். உடற்பயிற்சி செய்வதால் உடல் பருமனையும் குறைக்கலாம். தினமும் உடற்பயிற்சி செய்து, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதன் மூலம், குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கலாம். மேலும், உடற்பயிற்சி செய்வது உடலில் ஈஸ்ட்ரோஜனின் அளவைக் குறைக்க உதவுகிறது, இது மார்பக புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்கும். புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவும் பயிற்சிகள் மற்றும் செயல்பாடுகளைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
மிதமான உடற்பயிற்சி
தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது மிதமான உடற்பயிற்சி செய்யலாம். இது புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. எளிதான செய்யக்கூடிய சில மிதமான உடற்பயிற்சிகள்-
- சுறுசுறுப்பான நடை
- யோகா
- மெதுவாக சைக்கிள் ஓட்டுதல்
- மெதுவாக நீச்சலடித்தல்
- ஏரோபிக்ஸ்
- கூடைப்பந்து
- கால்பந்து
- வலைப்பந்து
- மெதுவாக ஓடுதல்(ஜாகிங்)
- ஓடுதல்
- ஸ்குவாஷ்
- கார் கழுவுதல்
- வீட்டை சுத்தம் செய்தல்
- குழந்தைகளுடன் விளையாடுதல்
- நடை
- படிக்கட்டுகளில் ஏறுதல்
மிதமான உடற்பயிற்சிகளை மிக எளிதாகச் செய்யலாம், எனவே நீங்கள் அவற்றை வாரத்திற்கு மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை செய்ய முயற்சிக்கலாம்.
வேகமான உடற்பயிற்சி
வேகமான உடற்பயிற்சி உங்கள் மூச்சு இயக்கத்தையும், இதயத் துடிப்பையும் அதிகரிக்கிறது. இதனால் நிறைய கலோரிகள் எரிக்கப்படும். உங்களுக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்சனை இருந்தால், இந்தப் பயிற்சிகளைச் செய்வதற்கு முன் உங்கள் மருத்துவரை ஒரு முறை ஆலோசனை செய்வது நல்லது.உதாரணமாக -
இந்த வகை உடற்பயிற்சிகள் செய்வதற்கு முன், 5 முதல் 10 நிமிடங்கள்வரை வார்ம் அப் செய்யவும். ஒரு நாளைக்கு 20 முதல் 60 நிமிடங்கள் வரை ஏரோபிக் உடற்பயிற்சி செய்யலாம்.
அடிப்படை செயல்பாடுகள்
தினமும் உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியம். ஆனால் சில காரணங்களால் உங்களால் தினமும் உடற்பயிற்சி செய்ய முடியாவிட்டால், நீங்கள் சில அடிப்படை செயல்பாடுகளைச் செய்யலாம் -
மற்ற முக்கியமான செயல்பாடுகள்
நீண்ட நேரம் உட்காருவது பல பிரச்சனைகளை ஏற்படுத்துவதுடன், புற்றுநோயின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. உங்களால் உடற்பயிற்சி செய்ய முடியாவிட்டாலும், இந்த செயல்பாடுகளின் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் கவனித்து கொள்ள முடியும்.
செயலிகள்மூலம் 10,000 படிகளை இலக்காகக் கொள்ளுங்கள்.
லிஃப்ட்டைத் தவிர்த்துவிட்டு படிக்கட்டுகளில் ஏறுங்கள்.
முடிந்தவரை நடக்க முயற்சி செய்யுங்கள்.
நீண்ட நேரம் உட்கார வேண்டாம், மணிநேரங்களுக்கு இடையில் சில நிமிடங்கள் நடக்க முயற்சிக்கவும்.
அருகில் உள்ள இடங்களுக்கு வண்டிகளைப் பயன்படுத்துவதற்கு பதிலாக நடந்து செல்லலாம்.
உடல் ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் இருக்க உடற்பயிற்சி மிகவும் அவசியம். இது பல ஆபத்தான நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. செயலிகள் பயன்படுத்தி தினமும் உடற்பயிற்சிகள் செய்வதன் மூலம் நுரையீரல், சிறுநீரகம், மார்பகம், குடல் மற்றும் பல வகையான புற்றுநோய்கள் உருவாகும் அபாயத்தைக் குறைக்கலாம்.
images source: freepik