உணவுகள் மூலம் வயிற்று புழுக்களிலிருந்து விடுபட வேண்டுமா? இதற்கான தீர்வை பதிவில் பதித்தறிவோம் வாருங்கள்.
பிள்ளையின் வயிற்றுப் புழுக்களுக்களை நீக்குவதற்கான உணவுகள்: பிள்ளைகளின் வயிற்றில் புழுக்கள் இருப்பது ஒரு பொதுவான பிரச்சனை. வயிற்றில் புழுக்கள் இருப்பதால் திடீர் வயிற்று வலி மற்றும் எரிச்சல் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இந்த சூழ்நிலையில், பிள்ளைக்குப் பசியின்மை, குமட்டல், வாந்தி போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இதனால் வயிற்றில் புண் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமும் எழுகிறது. பொதுவாகத் தவறான உணவுப் பழக்கம், மண் உண்ணுதல், தூய்மையற்ற உணவு மற்றும் அசுத்தமான நீரைக் குடித்தல் போன்ற காரணங்களால் அவர்கள் வயிற்று புழுக்களைப் பெற்றிருக்கலாம். இது தவிர, உங்கள் பிள்ளை அசுத்தமான நீரில் கைகளைக் கழுவினாலோ அல்லது குளித்தாலோ, அதன் காரணமாகவும் அவர்களுக்கு வயிற்று புழுக்கல் இருக்கலாம். வயிற்றுப் புழுக்களின் பிரச்சனையிலிருந்து விடுபட, நீங்கள் அவர்களுக்குச் சில உணவுகளை உண்ண கொடுக்கலாம். இதனால் வயிற்றுப் புழுக்களை எளிதில் குறைக்க முடியும்.
வயிற்றுப் புழுக்களை நீக்க இந்த உணவுகளைக் பிள்ளைகளுக்குக் கொடுக்கவும்
1. துளசி
பிள்ளையின் வயிற்றில் புழுக்கள் இருந்தால், துளசியால் செய்யப்பட்ட டீ கொடுக்கலாம். இதைச் செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் நான்கைந்து துளசி இலைகள், இலவங்கப்பட்டை, வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். வடிகட்டி, சூடு தணிந்த பிறகு பிள்ளைக்குக் குடிக்க கொடுங்கள். துளசியில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் வயிற்றுப் புழுக்களை நீக்குவதற்கு ஏற்றது.
2. பப்பாளி
பப்பாளி சாப்பிடுவது உடல் நலத்திற்கு நன்மை பயக்கும். பப்பாளியில் வைட்டமின் C மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது பிள்ளையின் வயிற்றுக்கு மிகவும் நல்லது. காலை உணவில் அவர்களுக்குப் பப்பாளி கொடுக்கும்போது உடல் நலமாக இருப்பதுடன், வயிறும் சுத்தமாக இருக்கும். பப்பாளி பழத்தை உண்பதால், அதிகப்படியான வயிற்றுப் புழுக்கள் மலம் வழியாக வெளியேறும்.
3. மாதுளை பழம்
மாதுளை பழத்தை உட்கொளவதாலும் பிள்ளையின் வயிறு சுத்தமாகும். மாதுளை பழத்தில் நார்ச்சத்து, கனிமங்கள், வைட்டமின்கள், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, ஃபோலேட்ஸ் மற்றும் ரிபோஃப்ளேவின் நிறைந்துள்ளன, இது பிள்ளையின் வயிற்றை சுத்தம் செய்ய உதவுகிறது. இது தவிர மாதுளை பழத்தின் தோலை காயவைத்து அரைத்த பொடியைத் தண்ணீரில் கலந்தும் பிள்ளைக்குக் குடிக்க கொடுக்கலாம். இது வயிற்றுப் புழுக்களை அகற்றும்.
4. ஓமம்
ஓமத்தில் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் காணப்படுகின்றன. இது பூச்சிகளை அழிக்க உதவியாக இருக்கும். இதற்குப் பொடி செய்த ஓமத்துடன் அரை டீஸ்பூன் வெல்லம் கலந்து சாப்பிட கொடுக்கலாம். இந்த முறையில் ஓமம் சாப்பிடுவது அவர்களுக்குச் சிரமமாக இருந்தால், ஓமத்தால் செய்யப்பட்ட கஷாயத்தை பிள்ளைக்குக் குடிக்க கொடுக்கலாம். மேலும், காய்கறிகள் அல்லது மற்ற உணவுகளுடன் ஓமத்தை கலந்து சாப்பிட கொடுக்கலாம். இதனால் செரிமான அமைப்பு சீராக இருக்கும்.
5. கிராம்பு
கிராம்பு நீரை குடிப்பதால் வயிற்றுப் புழுக்கள் பிரச்சனையிலிருந்து விடுபடலாம். கிராம்பில் வைட்டமின்கள், ஜின்க், தாமிரம், செலீனியம், தையமின், உவர்மம், மங்கனீசு மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன, இது பிள்ளையின் வயிற்றுப் புழுக்கள் மற்றும் இதர உடல்நலப் பிரச்சினைகளை நீக்குவதில் நன்மை பயக்கிறது.
Images Credit: freepik