நவீன உலகத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், மக்களுக்கு நன்மை தருபவையாக அமைகின்றன. அதே நேரத்தில் உடல் ரீதியாக மற்றும் மன ரீதியாக, மன அழுத்தம், சோர்வு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுகின்றனர். இந்த சூழ்நிலைகளைச் சமாளிப்பதற்குப் பல வழிகள் உள்ளன. அதில் மிகச்சிறந்த வழியாக அமைவது உடற்பயிற்சி செய்வதாகும். இது உடலளவில் மட்டுமின்றி, மனதளவிலும் பெரிதும் உதவுகிறது.
மன அழுத்தத்திலிருந்து வெளியே வருவதற்கான உடற்பயிற்சி
நடைபயிற்சி
தற்போது ஒவ்வொருவரும் தங்களது வழக்கமான நடைமுறைகளை விட அதிகமாக செய்கிறார்கள். இதனால் அதிகப்படியான மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் இன்னும் பிற பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். உடற்பயிற்சியில் மிகவும் இன்றியமையாத ஒன்றாக விளங்குவதில் ஒன்று நடைபயிற்சி. தினந்தோறும் நடைபயிற்சி செய்வதன் மூலம் தசைகள் வலுப்படுவதுடன் மன அழுத்தம் குறையும். மனச்சோர்வு நீங்குவதுடன் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் காணப்படுவர்.

இந்த பதிவும் உதவலாம்: உடல் எடையை குறைக்க உதவும் 5 ஓட்டப் பயிற்சிகள்
சைக்கிள் ஓட்டுதல்
கற்றறிந்த பின்னர் செய்யும் செயல்கள் அனைத்தும் நம் மனதிற்கு உற்சாகத்தைத் தரக்கூடியதாக அமைகிறது. அந்த வகையில், சைக்கிள் ஓட்டுதலும் அமையும். இது பொழுதுபோக்கான ஒன்றாக கருதினாலும், மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் ஒன்றாக சைக்கிள் ஓட்டுதல் உள்ளது. இதன் மூலம், மனச்சோர்வு, மன அழுத்தம் போன்றவை நீங்கும். எடை குறைப்பிற்கும் சைக்கிள் ஓட்டுதல் முக்கிய பயிற்சியாக உள்ளது. நீச்சல் செய்வதும் மன அழுத்தத்தைக் குறைக்கும் ஒன்றாகும்.
யோகா பயிற்சி
மனக் கட்டுப்பாட்டுகளில் முக்கிய பங்கு வகிப்பது யோகா. பொதுவாக, அதிக வேலைப்பழு காரணமாக மக்கள் சமநிலையற்ற நிலையை அடைகின்றனர். இதனால், அவர்கள் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர். சரியான முடிவு எடுக்காமல் போவது, சாதாரண விஷயத்திற்கும் கோபப்படுவது உள்ளிட்ட பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதனைத் தவிர்க்க யோகா முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது, யோகா செய்வதுடன் மன ஒருமைப்பாடு அடைவதுடன் நிலைப்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: கர்பகால உடற்பயிற்சியின் நன்மைகள்; கர்பகாலத்தில் உடற்பயிற்சி செய்தால் நார்மல் டெலிவரி ஆகுமா?
யோகா நித்ரா
மற்ற யோகா நிலைகளை விட, இந்த யோகா நித்ரா அனைவருக்கும் மிகப்பிடித்ததும், எளிமையானதும் ஆகும். யோக நித்ரா என்பது மன உறக்கமாகும். அதாவது விழித்திருத்தல் மற்றும் தூங்குதல் நிலைகளுக்கு இடையே உள்ள இடைநிலை உணர்வு ஆகும். இந்த யோகா செய்யும் போது, தூங்குவது போல் தோன்றலாம். ஆனால், மன அமைதியுடன் சில குறித்த வழிமுறைகளைப் பின்பற்றி விழிப்புணர்வுடன் செயல்படுவர். யோகா நித்ராவின் ஒரு மணி நேர பயிற்சியானது, நான்கு மணி நேர அமைதியான தூக்கத்துடன் ஒப்பிடத்தக்கதாக அமைகிறது.
பிராணாயாமம்
பிராணாயாமம் என்பது பயனுள்ள சுவாசப் பயிற்சியாகும். இது சுவாச அமைப்பு செயல்முறையை நன்கு திறம்பட செயல்படச் செய்கிறது. பிராணாயாமம் செய்வதால், நம் உடலில் நுரையீரல் செயல்பாடு சிறப்பான முறையில் இயங்குகிறது. மேலும், இது ஆஸ்துமா அல்லது சுவாசக் கோளாறு உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக அமைகிறது. எடை குறைப்பிலும், பிராணாயாமம் முக்கிய பங்காற்றுகிறது.
இது போன்ற பல்வேறு பயிற்சிகள் மூலம், மன அழுத்தத்திலிருந்தும், மனச்சோர்விலிருந்தும் விடுபடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: தினமும் உடற்பயிற்சி செய்வது சலிப்பாக இருக்கிறது? ஜாலியாக உடற்பயிற்சி செய்வது எப்படி?
Image Source: Freepik