Pregnancy Foods: ​கர்ப்ப காலத்தில் மீன் சாப்பிடலாமா?

  • SHARE
  • FOLLOW
Pregnancy Foods: ​கர்ப்ப காலத்தில் மீன் சாப்பிடலாமா?

கர்ப்பமாக உள்ள பெண்கள் மீன் சாப்பிடலாம என்ற குழப்பத்தில் உள்ளனர். மீன்களில் உள்ள பாதரசம் குழந்தைகளை பாதிக்கும் அபாயம் உள்ளதால் இதனை சாப்பிடலாமா வேண்டாமா என்ற குழப்பம் கர்ப்பிணி பெண்கள் இடையே நிலவி வருகிறது. இந்நிலையில் கர்ப்பிணி பெண்களுக்கு மீன் உகந்தது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் சில மீன்களை தவிர்ப்பது நல்லது என்றும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர். அவை பின்வருமாறு, 

​Fish to avoid while Pregnancy: கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய மீன்கள் 

பெரிய மற்றும் பழைய மீன், அதிக பாதரசம் கொண்டிருக்கும். அதிகப்படியான பாதரசம் உங்கள் குழந்தையின் வளரும் நரம்பு மண்டலத்திற்கு தீங்கு விளைவிக்கும். இதனை தவிர்க்க சில மீன் வகைகளை தவிர்க்க வேண்டும். அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

* பிஜியே டுனா

* கிங் மெக்கேரல்

* சுறா மீன்

* டைல்பிஷ்

* வாள் மீன்

* மர்லின்

* ஆரஞ்சு ரபி

இதையும் படிங்க: கர்ப்பகாலத்தில் ஆரஞ்சு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? அட இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

கர்ப்ப காலத்தில் சுஷி சாப்பிடலாமா?

சுஷி எனப்படுவது ஜப்பானிய முறையில் தயாரிக்கப்படும் உணவு ஆகும். இதில் கடல் உணவுகள், காய்கறிகள், பெரிய மீன்கள் ஆகியவை இருக்கும். மேலும் வெப்ப மண்டலங்களில் விளையும் பழங்களும் இத்துடன் அடங்கும். பெரிய மீன் வகைகளில் பாதரசம் அதிகம் உள்ளதால் கர்ப்பிணி பெண்கள் சுஷியை தவிர்ப்பது நல்லது. 

​Fish to eat while Pregnancy: கர்ப்ப காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய மீன்கள்

மெர்குரி குறைந்த அளவு உள்ள மீன்களை கர்ப்ப காலத்தில் பெண்கள் அடிக்கடி உட்கொள்ள வேண்டும். எடுத்துக்கொள்ள வேண்டிய மீன் வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.  

* சாலமன்

* போலக்

* சார்டைன்ஸ்

* டுனா மீன்கள் 

* ஸ்னாப்பர்

* டைல் பிஷ்

* ஹெர்ரிங்

* நன்னீர் மீன்கள்

* ஆன்கோவிஸ்

* மெக்கெரல்

* கேட் பிஷ்

* ஷ்ரிம்ப்

* டிலாபியா

* மஹி -மஹி

* ஹாலிபேட்ஸ்பானிஷ் மெக்கேரல்

* புளுபிஷ்

* கெண்டை மீன்கள்

* பப்பல்லோ பிஷ்

* பிளெண்டர்

* நண்டு

* சிலியன் ஷீ பேஸ்

* கிளாம்கள்

* லோப்ஸ்டர்

* டிரவுட்

* சோல் மீன்

* பிளாக் ஷீ பேஸ்

* கிராவ்பிஷ்

இதையும் படிங்க: கர்ப்ப காலத்தில் காரணமே இல்லாமல் கோபப்படுகிறீர்களா? உங்கள் கோபத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிகள் இதோ!

குறிப்பு: 

பால் கொடுக்கும் பெண்கள் கண்டிப்பாக மீன்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் அதிக சத்துக்கள் உள்ளன. இருப்பினும் உணவு ஒவ்வாமை உள்ளவர்கள், புதிதாக சில உணவுகளை தேர்வு செய்வதற்கு முன் மருத்துவரை அணுகுவது நல்லது. 

அடுத்ததை படிக்கவும்

Overeating: அதிகமாக சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? இதை கைவிட சிம்பிள் டிப்ஸ்!

பொறுப்புத் துறப்பு