Things that will happen to your skin if you will leave dairy foods: நம்மில் பலருக்கு பால் பொருட்கள் பிடித்த உணவு பொருளாக இருக்கும். ஏனென்றால், இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஆனால், லாக்டோஸ் சகிப்புத்தன்மையால் பாதிக்கப்பட்டவர்கள் பால் பொருட்களை உட்கொள்வதில்லை. பால் பொருட்கள் உடலுக்கு நன்மை செய்வதோடு, எலும்புகளையும் பலப்படுத்துகின்றன. இதனை உட்கொள்வதன் மூலம் பற்களும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
ஆனால் பால் பொருட்களை உட்கொள்ளாமல் இருந்தால் சருமத்தில் என்ன பாதிப்பு ஏற்படும் என உங்களுக்கு தெரியுமா? பால் பொருட்கள் சில நேரங்களில் சருமத்தை எண்ணெய் பசையாக மாற்றும். இதனால், முகப்பரு பிரச்சனைகள் ஏற்படலாம். ஒரு வேலை, நீங்கள் பால் பொருட்கள் உட்கொள்வதை மொத்தமாக தவிர்த்தால், அது உங்கள் சருமத்தில் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பது குறித்து சாரதா கிளினிக்கின் டாக்டர் கே.பி. சர்தானா கூறியதை பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : வெறும் வயிற்றில் வெண்டைக்காய் தண்ணீரை குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
முகப்பரு பிரச்சனை குறையும்
பால் பொருட்களை உட்கொள்ளாமல் இருப்பது முகப்பரு பிரச்சனையை குறைக்கும். சில சமயங்களில் பால் பொருட்கள் முகப்பரு பிரச்சனையை அதிகரிக்கும் என்பதால் இது ஹார்மோன் மாற்றங்களாலும் நிகழலாம். பால் பொருட்களை அதிகமாக உட்கொள்வது முகப்பரு பிரச்சனையை அதிகரிக்கும்.
வீக்கம் குறையும்
பால் பொருட்களை குறைவாக உட்கொள்வது முக வீக்கத்தைக் குறைக்கும். பால் பொருட்கள் உடலில் வீக்கத்தை அதிகரிப்பதோடு, சருமத்தை சிறிது வீங்கச் செய்யும் என்று நம்பப்படுகிறது. பால் பொருட்களை உட்கொள்வதால் உடலில் செபம் உற்பத்தி அதிகரிக்கிறது. இதனால் சரும வீக்கம் ஏற்படலாம்.
இந்த பதிவும் உதவலாம் : தினையின் வகை மற்றும் ஆரோக்கிய நன்மைகளை ஆராய்வோம்?
சரும நிறம் மேம்படும்
பால் பொருட்கள் உட்கொள்வதை தவிர்த்தால் சரும நிறம் மேம்படுத்துவது மட்டுமல்லாமல் சருமத்தை மென்மையாக்குகிறது. பால் பொருட்கள் சருமத்தை எண்ணெய் மிக்கதாக மாற்றுவதுடன், சில சமயங்களில் சருமத்தை கருமையாக்கும். ஆனால், இது நிறத்தை மேம்படுத்த ஒரே காரணமாக இருக்க முடியாது.
இந்த பதிவும் உதவலாம் : காய்கறிகளை சமைக்காமல் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்!!!
ஆயில் ஸ்கின் பிரச்சினை
பால் பொருட்களை உட்கொள்வதால் உடலில் எண்ணெய்யின் அளவு அதிகரிக்கிறது. இதன் காரணமாக சருமம் எண்ணெய் பசையாக மாறக்கூடும். பால் பொருட்களில் அதிக கொழுப்பு உள்ளடக்கம் இருப்பதால், இது உடலில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும். இதனால், சில நேரங்களில் தோல் சிவத்தல் பிரச்சினை அதிகரிக்கிறது.
Pic Courtesy: Freepik