பச்சிளம் குழந்தைக்கு செலுத்தவேண்டிய தடுப்பூசியை தவறவிட்டால் என்ன செய்யலாம்?

  • SHARE
  • FOLLOW
பச்சிளம் குழந்தைக்கு செலுத்தவேண்டிய தடுப்பூசியை தவறவிட்டால் என்ன செய்யலாம்?

குழந்தைக்கு செலுத்தவேண்டிய தடுப்பூசியைத் தவற விட்டால் என்ன செய்யலாம்? என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் தடுப்பூசி போடுவது நல்லது. சில தடுப்பூசிகள் குழந்தை பிறந்த 24 மணி நேரத்திற்குள் செலுத்தப்பட வேண்டும். இந்தத் தடுப்பூசிகளைத் தவறவிடக் கூடாது. தடுப்பூசி செலுத்துவதில் பெரிய இடைவெளி இருக்கும்போது, ​​தடுப்பூசி சுழற்சியை மீண்டும் தொடங்க வேண்டும். நீங்கள் தடுப்பூசி அட்டவணையைப் பாதுகாப்பாகக் கையில் வைத்திருக்க வேண்டியது அவசியம். உங்கள் குழந்தைக்குப் போடவேண்டிய தடுப்பூசியைத் தவறவிட்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய தகவலுக்கு, லக்னோவில் உள்ள கேர் இன்ஸ்டிடியூட் ஆஃப் லைஃப் சயின்ஸின் M.D மருத்துவர் டாக்டர் சீமா யாதவ் அவர்களிடம் பேசினோம்.

ஆறு மாதங்களாக ஒரு தடுப்பூசி கூடப் போடவில்லையா?

குழந்தைக்கு ஆறு மாதங்களாக ஒரு தடுப்பூசி கூடப் போடாமல் இருந்தாலோ அல்லது தடுப்பூசியைத் தவறவிட்டாலோ மருத்துவரின் ஆலோசனையுடன் பின்பு போட்டுக்கொள்ளலாம். குழந்தை பிறந்தபிறகு தடுப்பூசி போடுவது அவசியம். தடுப்பூசி போடுவதன் மூலம் குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகிறது. தடுப்பூசி போடுவது குழந்தைகளுக்குத் தொற்று ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.

ரோட்டா வைரஸ் தடுப்பூசி

ஏழு மாதங்களுக்கு மூன்று டோஸ் ரோட்டா வைரஸ் தடுப்பூசி தேவைப்படுகிறது. முதல் டோஸ் 6 வாரங்களிலும், இரண்டாவது டோஸ் 10 வாரங்களிலும், மூன்றாவது டோஸ் 14 வாரங்களிலும் வழங்கப்படும். ஏழு மாதங்களுக்குப் பிறகு ரோட்டா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டால், அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். ரோட்டா வைரஸ் தடுப்பூசியைச் செலுத்த தவறிவிட்டால், மருத்துவரை அணுகவும்.

குழந்தை தடுப்பூசிகள்

சில தடுப்பூசிகள் உங்கள் குழந்தைக்குக் கட்டாயமாகச் செலுத்தப்பட வேண்டும். இதனுடன் நீங்கள் விருப்பப்பட்டால் மட்டுமே தேர்வு செய்யக்கூடிய சில தடுப்பூசிகளையும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.இந்தத் தடுப்பூசிகள்பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்-

கட்டாய தடுப்பூசிகள்

  • வாய்வழி போலியோ தடுப்பு மருந்து (OPV)
    • டெட்டானஸ் டிஃப்தீரியா பெர்டுசிஸ் தடுப்பூசி(DTP)
      • எம்.எம்.ஆர் தடுப்பூசி(MMR)
        • ஹெபடைடிஸ் A தடுப்பூசி
          • ஹெபடைடிஸ் B தடுப்பூசி
            • பி.சி.ஜி தடுப்பூசி(BCG)
            • மாற்று தடுப்பூசிகள்

              • குளிர் காய்ச்சல் தடுப்பூசி(INFLUENZA)
                • சின்னம்மை தடுப்பூசி(CHICKEN POX)
                  • மெனிங்கோகோகல் தடுப்பூசி
                    • நிமோகாக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி
                    • 3 வகையான தடுப்பூசிகள்

                      • முதல் வகை முதன்மை தடுப்பூசி. இதில் 1 முதல் 5 டோஸ்கள் வரை தடுப்பூசிகள் அடங்கி இருக்கலாம். இந்தத் தடுப்பூசிகளின் அனைத்து டோஸ்களையும் எடுத்துக்கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.
                        • பூஸ்டர் தடுப்பூசிகள் முதன்மை தடுப்பூசியின் விளைவை அதிகரிக்க கொடுக்கப்படுகிறது. குறிப்பிட்ட காலத்திற்கு பின் ஆன்டிபாடி அளவுகள் குறைய ஆரம்பிக்கும். ஆன்டிபாடி அளவு குறைவது நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே ஆன்ட்டி பாடியை அதிகரித்து நோய் அபாயத்தைக் குறைப்பதற்கு பூஸ்டர் டோஸ் தேவைப்படுகிறது.
                          • ஒரு நோயை அகற்றுவதற்காகப் பொது தடுப்பூசிகள் அனைவருக்கும் வழங்கப்படுகின்றன. கோவிட் 19 தடுப்பூசியைப் போல இதற்காகவும் தடுப்பூசி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
                          • குழந்தையின் வயதுக்கு ஏற்பத் தடுப்பூசிகள் போடப்பட வேண்டும், ஆனால் ஏதேனும் தடுப்பூசியைச் செலுத்த தவறிவிட்டால் மருத்துவரை ஆலோசனை செய்து பின்பு போட்டுக்கொள்ளலாம்.

                            Images Credit: freepik

அடுத்ததை படிக்கவும்

Overeating: அதிகமாக சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? இதை கைவிட சிம்பிள் டிப்ஸ்!

பொறுப்புத் துறப்பு

குறிச்சொற்கள்