இனி மேக்கப்பை அகற்ற, கடைகளில் விற்கும் மேக்கப் ரிமூவர்களை வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இயற்கையான முறையில் மேக்கப்பை அகற்றும் வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை படிக்கவும்.
மேக்கப் போடுவது எவ்வளவு கடினமோ, அதே அளவுக்கு அதனை அகற்றுவதும் கடினம். நாம் ஒரு விழாவிலோ, நிகழ்ச்சியிலோ கலந்துகொள்ளும் போது, ஐலைனர், லிப்ஸ்டிக், ஃபவுண்டேஷன், ப்ளஷ் உள்ளடங்கிய சிறந்த மேக்கப்பை போடுகிறோம். மேற்கூறிய தயாரிப்புகளை நாம் சரியாக பயன்படுத்தினால், நமது சருமத்திற்கு எந்த ஒரு தீங்கும் வராது. மேக்கப் போடுவதில் நாம் எப்படி சரியான தயாரிப்புகளை பின்பற்றுவது முக்கியமோ, அதே போல் அதனை அகற்றுவதற்கு நாம் பயன்படுத்துவதும் மிக முக்கியமானது. இல்லை என்றால் அதுவே நமது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதாவது, தோல் உடைதல், முகப்பரு போன்ற பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். ஆகையால் கடைகளில் வாங்கும் மேக்கப் ரிமூவர்களுக்கு பதிலாக, இயற்கையான முறையில் எப்படி மேக்கப்பை அகற்றுவது என்பது குறித்த சில முக்கியமான வழிகளை இங்கு காண்போம்.
வழிகள்
மேக்கப் பொருள்களில் இருக்கும் ப்ரிசர்வேட்டிவ்கள் மற்றும் ரசாயனங்கள் சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, மேக்கப்பை இயற்கையான பொருள்களை கொண்டு அகற்றுவது சிறந்ததாக இருக்கும். இயற்கையான முறையில் மேக்கப்பை அகற்ற சில பயனுள்ள வழிகள் கீழே உள்ளது.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு நல்ல மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. இது மேக்கப் பொருள்களால் ஏற்படும் சரும பாதிப்பை தடுக்க உதவுகிறது. இது தோல் மற்றும் முடி பராமரிப்பில் பயன்படும் ஒரு அற்புதமான மூலப்பொருள் ஆகும். தேங்காய் எண்ணெயில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் உள்ளன. மேலும் இது மெல்லிய தன்மை கொண்டது. எனவே, அது உங்கள் சருமத்தில் எளிதில் ஊடுருவ உதவும். இதில், சக்திவாய்ந்த ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் நிறைந்துள்ளது. இது சரியான ஈரப்பதம் மற்றும் நீரேற்றத்துடன் எளிதாக மேக்கப்பை அகற்ற உதவுகிறது.
பால்
இயற்கையான முறையில் மேக்கப்பை அகற்ற பால் ஒரு சிறந்த பொருளாகும். இது தோல் மற்றும் முடி இரண்டுக்கும் பல நன்மைகளை வழங்குகிறது. பாலில் உள்ள ப்ளீச்சிங் பண்புகள், சருமத்தை ஒளிரச் செய்யவும், எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் மேக்கப்பை அகற்றவும் உதவுகிறது. பாலில் உள்ள அத்தியாவசிய கொழுப்புகள் மற்றும் புரதங்கள், சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைத்து, சேதமடைந்த செல்களை சரிசெய்யும்.
கற்றாழை
அழுகு சார்ந்த விஷயங்களில் கற்றாழை ஒரு மேஜிக்கல் மூலப்பொருளாகும். தோல் மற்றும் முடி இரண்டுக்கும் பல அழகிய நன்மைகளை கற்றாழை கொடுக்கும். இது வெயிலினால் சருமத்தில் ஏற்படும் தோல் வறட்சி மற்றும் முகப்பரு போன்ற பிரச்னைகளை நீக்கும். மேக்கப்பை இயற்கையான முறையில் அகற்ற கற்றாலை ஜெல் ஒரு சிறந்த வழியாகும். எந்த வகையான மேக்கப்பையும் அகற்ற கற்றாழையை பயன்படுத்தலாம்.
வெள்ளரி சாறு
வெள்ளரி சாறு, ஒரு இயற்கையான மேக்கப் ரிமூவராக பயன்படுகிறது. இதில் அலெர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. எரிச்சல் அல்லது முகப்பரு பாதிப்புக்குள்ளான சருமத்திற்கு சிகிச்சையளிக்க, வெள்ளரி உதவுகிறது. வெள்ளரி சாறு பல மேக்கப் ரிமூவர்களில் பயன்படுத்தப்படும் முதன்மையான பொருட்களில் ஒன்றாகும். இதனை பயன்படுத்தி மேக்கப்பை அகற்றலாம்.
சமையல் சோடா மாற்றும் தேன்
சமையல் சோடா மாற்றும் தேன் கலவையை பயன்படுத்தி இயற்கையான முறையில் மேக்கப்பை அகற்ற முடியும். சமையல் சோடா ஒரு எக்ஸ்ஃபோலியேட்டராக செயல்படுகிறது. மேலும் தேன் உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது. ஆர்கானிக் தேனைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சமையல் சோடா மற்றும் தேன் கலவையை பயன்படுத்தி, மேக்கப்பை அகற்றினால், சருமம் சுத்தமாகும். இதனை தடவுவதற்கு நீங்கள் மென்மையான துணி அல்லது காட்டன் பஞ்சுகளை பயன்படுத்தவும்.
பாதாம் எண்ணெய்
தேங்காய் எண்ணெயை போலவே, பாதாம் எண்ணெய்யும் இயற்கையான முறையில் மேக்கப்பை அகற்ற உதவுகிறது. இரண்டு எண்ணெய்களும், ஹெவி மற்றும் வாட்டர் புருஃப் மேக்கப் ஆகிய இரண்டையும் அகற்ற உதவுகிறது. பாதாம் எண்ணெயில் வைட்டமின் A மற்றும் E உள்ளன. இது இயற்கையான மேக்கப் ரிமூவராக திகழ்கிறது. உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்களுக்கும் பாதாம் எண்ணெய் சிறந்த ஒன்றாகும்.
Image Source: freepik