Causes of Pimples: தோல் பராமரிப்பு என்பதில் யாரும் எவ்வித சமரசமும் செய்து கொள்ள மாட்டோம். ஒருசிலர் சோப்பு போட்டு முகத்தை கழுவவதோடு விட்டுவிடுவார்கள். ஒருசிலர் முகத்திற்கு அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள். இருப்பினும் அதையும் மீறி முகத்தில் விரும்பிய பலன் கிடைக்காமல் போகலாம். அதற்கு சில காரணங்கள் உள்ளன.
ஹார்மோன் சமநிலை மாற்றம்
ஹார்மோன் சமநிலை மாற்றமும் தோல் பராமரிப்பில் சிக்கலை ஏற்படுத்தும். வானிலை மாற்றம், மன அழுத்தம், உணவுகள் போன்றவை தற்காலிக ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தும். இந்த விளைவை முகத்தில் காணலாம். எனவே மனதையும் உங்கள் சுற்றுச்சூழலையும் எப்போதும் புத்துணர்ச்சியோடு வைத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: சருமப் பொலிவு அதிகரிக்க வீட்டிலேயே ஸ்கின் பாலிஷிங் செய்வது எப்படி?
முகத்தின் சருமத்திற்கு ஸ்பெஷல் கவனம் தேவை
வருடக்கணக்கில் ஒரு வழக்கத்தை பின்பற்றும் போது, உங்கள் சருமம் அதற்கு பழகி விடும். பிற கவனிப்பு இல்லாததால் வெடிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தோலுக்கு தேவையான அனைத்து பராமரிப்பையும் பின்பற்றுவது நல்லது.
முகத்தில் படியும் தூசிகள்
கை, கால், உடல் என பெரும்பாலான பகுதிகள் சட்டை, பேண்ட் என மூடிய நிலையில் தான் இருக்கும். ஆனால் முகம் மட்டும் எப்போதும் திறந்த நிலையில் இருக்கும். இதனால் தூசி, வெப்பநிலை என அனைத்தையும் முகம் நேரடியாக சந்திக்கும். உங்கள் முகம் உங்கள் அக்கறை என்பதை நினைவில் கொள்ளுங்கள். முகத்தில் மாஸ்க் அப்ளை செய்வது, ஊட்டப் பொருட்கள் அப்ளை செய்வது சரியான செயல்தான். இதை பார்த்து யாரும் தவறாக நினைப்பார்கள் என எண்ணிவிட வேண்டும். உங்கள் காலத்திற்கும் உங்கள் வழிமுறைகள் பலன் தரும். எனவே நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் முகத்திற்கு தேவையானதை அப்ளை செய்து பராமரிப்பது நல்லது.
குறுகிய காலத்திற்கு பயன்படுத்திவிட்டு கைவிடுவது
திடீரென ஒரே நேரத்தில் அடுத்தடுத்து முகத்திற்கு தேவையானதை அப்ளை செய்துவிட்டு உடனே அதை கைவிடுவது என்பதும் தவறான முடிவு. குறைந்தது வாரத்திற்கு ஒருமுறையோ அல்லது இரண்டு முறையோ தொடர்ச்சியாக அப்ளை செய்ய வேண்டும். ஆரம்பித்துவிட்டு திடீரென விட்டால் இதன் விளைவும் முகத்தில் பருவாக வரும்.
காற்றோட்டமான இடம் முக்கியம்
முகத்திற்கு அப்ளை செய்ய என வாங்கி வைக்கும் பொருட்களை சூரிய ஒளியில் வைக்கக் கூடாது. தோல் பராமரிப்பு பொருட்களை எப்போதும் நன்கு காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும்.
எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் விளைவுகள்
வானிலை மாறும் போதெல்லாம், தோல் பராமரிப்பு பொருட்களும் மாற வேண்டும். கோடையில் அதிக வியர்வை இருக்கும் போது பயன்படுத்தப்படும் பொருட்களை சருமம் வறண்டு போகும் போது குளிர்காலத்தில் பயன்படுத்தக்கூடாது. உடல்நலப் பிரச்சனை தொடர்பாக நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் தாக்கம் முகத்தின் வெளிப்படும். சில மருந்துகள் முகப்பருவை ஏற்படுத்தினாலும், சில மருந்துகள் சருமத்தை உலர வைக்கும். ஒரு மருந்தை எடுத்துக் கொள்ளும் போது அதன் பரிந்துரையை மருத்துவரிடம் கேளுங்கள்.
இதையும் படிங்க: PCOS உள்ளவரா நீங்கள்? தோல் மருத்துவர் பரிந்துரை செய்த சிறந்த தோல் பராமரிப்பு முறைகள்…
தொடர்ச்சியாக அப்ளை செய்ய வேண்டும்
முகத்திற்கான பொருட்களை சரியான நேரத்தில் பயன்படுத்துவதும் முக்கியம். உதாரணமாக, வெளிப்புற நேரத்தில் ஒவ்வொரு மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்கும் சன்ஸ்கிரீன் பயன்படுத்தப்பட வேண்டும். நீங்கள் காலையில் ஒரு முறை மட்டுமே சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தினால், அது நாள் முழுவதும் உங்களைப் பாதுகாக்காது.
முகப்பருவை உடைத்தால் என்ன ஆகும்?
உங்கள் தோல் வகை மாறுபடும். காலநிலை ஒரு காரணி என்றால், வயது மற்றும் மாதவிடாய் கூட காரணிகள். இறந்த சரும செல்கள் உங்கள் தயாரிப்புகளை ஊடுருவுவதைத் தடுக்கின்றன. எனவே முறையாக பேஸ்வாஸ் செய்து சுத்தமாக வைப்பது அவசியம். பருவை உடைக்கக் கூடாது இது பல இடங்களுக்கும் பரவும். அது தழும்பாக மாறும். முகத்தை சுத்தமாக கழுவி சுத்தமான துணியில் துடைத்து எடுங்கள்.
உங்களுக்கு தோல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரை அணுகுவது என்பது சிறந்த முடிவாகும்.
image source: freepik