கர்ப்ப காலத்தில் எந்த மாதிரியான உடற்பயிற்சிகள் பாதுகாப்பானவை

  • SHARE
  • FOLLOW
கர்ப்ப காலத்தில் எந்த மாதிரியான உடற்பயிற்சிகள் பாதுகாப்பானவை

கர்ப்ப காலத்தில் உங்களுக்குச் சிக்கல்கள் இல்லாத நிலையில் உடற்பயிற்சி செய்வது பாதுகாப்பானதே. இருப்பினும் உங்கள் மாதத்திற்கு ஏற்றச் சரியான உடற்பயிற்சியை செய்யுங்கள்.

தன் குழந்தை பிறக்கப் போகும் நாளுக்காக, தினமும் நாட்களை எண்ணிகொண்டு காத்திருப்பதும் ஒரு சுகம் தானே. இந்தக் காலங்களில், பெரும்பாலான கர்பிணிகளுக்கு நிறைய சந்தேகங்கள் மற்றும் குழப்பங்கள் ஏற்படுவது இயல்பானதே. உங்கள் உடலில் ஏற்படும் பல ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக, உங்கள் உடல் தோற்றத்திலும் மாற்றங்கள் காணப்படும்.பெண்களுக்குக் கால்களில் வீக்கம், முதுகு வலி, எடை அதிகரிப்பு, மலச்சிக்கல் மற்றும் வாயுத்தொல்லை போன்ற பொதுவான சில பிரச்சனைகள் கர்ப்பகாலத்தில் ஏற்படலாம். ஒரு சிலருக்கு கர்ப்பம் முழுவதும் கூட இந்தப் பிரச்சனைகள் நீடிக்கலாம். இந்தப் பிரச்சனைகளை முற்றிலும் அகற்ற முடியாவிட்டாலும், உடற்பயிற்சி மற்றும் யோகாவின் உதவியுடன் இதன் தாக்கத்தைக் குறைக்க முடியும். கர்ப்பத்தின் ஒன்பது மாதங்களிலும், வழக்கமாக உடற்பயிற்சி முறையைக் கடைப்பிடிப்பதன் மூலம் பல நன்மைகளைப் பெறலாம்.ஆனால் கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்யலாமா, செய்யக்கூடாதா என்ற குழப்பம் பல கர்பிணிகளுக்கு இருக்கிறது. இதைப் பற்றிய சரியான வழிகாட்டுதலுக்கு குருகிராமில் உள்ள பிசியோவேயில் உள்ள பிசியோதெரபிஸ்ட் ஆலோசகர் டாக்டர் சாந்தினி சுப்பாவிடம் பேசினோம்.

கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்ய வேண்டுமா?

கர்ப்ப கால சிக்கல்கள் இல்லாதவர்கள் தாராளமாக உடற்பயிற்சி செய்யலாம். உடற்பயிற்சி செய்யும்போது உடல் செயல்பாடுகளுடன் ஆரோக்கியமாக இருக்கும்.இதன் மூலம் மலச்சிக்கல், அஜீரணம், வயிற்று வலி, முழங்கால் வலி போன்ற பல பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் பெறலாம். மேலும் கர்ப்ப காலத்தில் செய்யப்படும் உடற்பயிற்சி, உங்கள் கருவில் இருக்கும் குழந்தைக்கும் மிகவும் நல்லது. நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால், உங்கள் கர்ப்பத்தில் எந்தச் சிக்கல்களும் இல்லை என்றால், உங்கள் தினசரி வழக்கத்தில் உடற்பயிற்சியை சேர்த்துக்கொள்ளலாம். இது குறைப்பிரசவம் மற்றும் கருச்சிதைவு அபாயத்தையும் குறைக்கும். ஆனால் இதய நோய், ஆஸ்துமா, சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகள் இருந்தால் உடற்பயிற்சி செய்யக் கூடாது. மேலும், நீங்கள் எந்தவொரு உடற்பயிற்சியையும் செய்வதற்கு முன், உங்கள் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.

உடற்பயிற்சி செய்வதன் மூலம் இந்தப் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்

  1. மலச்சிக்கல் பிரச்சனை
  2. முதுகு வலி
  3. உடல்எடை அதிகரித்தல்
    1. இதய பிரச்சனைகள் மற்றும் இரத்த ஓட்டம்
    2. சர்க்கரை நோய் மற்றும் சிசேரியன் பிரசவம்
    3. பிரசவத்தின்போது ஏற்படும் ஆபத்தைக் குறைக்கவும்
    4. கர்ப்பத்தின் முதல் மூன்று (First Trimester) மாதங்களில் இந்த உடற்பயிற்சிகளை செய்யுங்கள்

      1. கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில், நீங்கள் 15 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.
      2. இது தவிர முதுகு எலும்புகளுக்கு வலுவளித்து முதுகு வலிகளைக் குறைக்கும் பயிற்சிகளையும் செய்யலாம்.இதனுடன் சில நீட்டிப்பு பயிற்சிகளையும் நீங்கள் செய்யலாம்.
      3. கர்ப்ப காலத்தில் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த உடற்பயிற்சியும் செய்யக் கூடாது.
      4. கர்ப்பத்தின் இரண்டாவது மூன்று (Second Trimester) மாதங்களுக்கான உடற்பயிற்சி

        1. கர்ப்பத்தின் இரண்டாவது மூன்று மாதங்களில், நடைப்பயிற்சியுடன் சேர்த்து மென்மையான மேல் உறுப்புகள் சார்ந்த உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.
        2. கால்கள் தொடர்பான பயிற்சிகள் செய்யலாம் மற்றும் கெகல்(Kegel) உடற்பயிற்சிகள் செய்யலாம்.
        3. கர்ப்பத்தின் மூன்றாவது மூன்று மாதங்களுக்கான உடற்பயிற்சி

          1. இந்த நேரத்தில் அதிக சிரமம் ஏற்படாதவாறு எளிமையான நடைப்பயிற்சியை சிறிது நேரம் மேற்கொள்ளலாம்.
          2. இது தவிர கை, கால்கள், இடுப்பு சம்பந்தமான சில பயிற்சிகளைச் செய்யலாம்.இதனால் பிரசவத்தின்போது ஏற்படும் சிரமங்களைக் குறைக்கலாம்.
          3. கர்ப்ப காலத்தில் பயமின்றி உடற்பயிற்சிகள் செய்யலாம், அதே சமயம் மருத்துவர் அல்லது நிபுணரின் ஆலோசனையின்றி எந்த உடற்பயிற்சியும் செய்யக் கூடாது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். இல்லையெனில் அது உங்களுக்கும், கருவில் இருக்கும் குழந்தைக்கும் தீங்கு விளைவிக்கும்.

            Images source: freepik

அடுத்ததை படிக்கவும்

Overeating: அதிகமாக சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? இதை கைவிட சிம்பிள் டிப்ஸ்!

பொறுப்புத் துறப்பு

குறிச்சொற்கள்