தலைக்கு எண்ணெய் தடவிய பின் நீங்கள் செய்யக்கூடாத 5 தவறுகள்பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
நீளமான, அடர்த்தியான மற்றும் வலுவான கூந்தலை பெறுவதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது. தலைமுடிக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்காதபோது, தலை முடி தொடர்பான பல பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கின்றன. தற்போது அதிகரித்து வரும் மாசுபாடு மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக, பலர் முடி உதிர்தல், பொடுகு மற்றும் வறண்ட முடி போன்ற பல பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர். ஆரோக்கியமான தலைமுடிக்கு சமச்சீரான உணவு உட்கொள்ள வேண்டியது அவசியம். இதனுடன் உங்கள் தலைமுடி சரியான முறையில் பராமரிக்கப்படவும் வேண்டும்.
தலை முடிக்கு எண்ணெய் தடவுவது,
கூந்தலுக்கு ஊட்டமளித்து ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. ஆனால் முடிக்கு எண்ணெய் தடவிய பின், நாம் செய்யும் சில தவறுகளால் தலைமுடி பெரிதும் பாதிக்கப்படலாம். எனவே, முடிக்கு எண்ணெய் தடவிய பின் எந்தெந்த தவறுகளை செய்யக்கூடாது என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
முடியை இறுக்கமாகக் கட்ட வேண்டாம்
தலைக்கு எண்ணெய் தடவிய பிறகு, பலர் தங்களின் முடியை ஒன்றுசேர்த்து இருக்கமான கொண்டை அல்லது போனிடெயில் போட்டுக் கொள்கின்றனர். இந்த இருக்கத்தால் தலைமுடி வலுவிழந்து, உடைந்து விடுகின்றன. முடிக்கு எண்ணெய் தடவிய பிறகு, முடியில் இருக்கும் ஈரப்பதம் காரணமாக அவை மிகவும் மென்மையாக இருக்கும். இந்த சூழலில், முடியை இறுக்கமாகக் கட்டுவதால், முடி உடைந்து விழத் தொடங்குகின்றன. இதைத் தவிர்க்க, முடிக்கு எண்ணெய் தடவிய பிறகு, தளர்வான போனிடெயில் போட்டுக் கொள்ளுங்கள்.
நிறைய எண்ணெய் தடவ வேண்டாம்
வேலைப்பளு காரணமாக முடிக்குத் தினமும் எண்ணெய் தடவ பலரும் மறந்து விடுகிறார்கள். இதை ஈடு செய்ய, தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது, ஒரே தடவையில் நிறைய எண்ணெய் தடவி விடுவார்கள். இவ்வாறு செய்வது உங்கள் தலைமுடிக்கு தீங்கு விளைவிக்கும். முடியில் அதிகமாகத் தடவப்பட்ட எண்ணெயை நீக்க, நீங்கள் அதிக ஷாம்பு பயன்படுத்த வேண்டும். அதிக ஷாம்புவின் பயன்பாடு, கூந்தலை உலர செய்து உயிரற்றதாக மாற்றுகிறது. இதைத் தவிர்க்க, ஒரே நேரத்தில் தலைமுடிக்கு அதிக எண்ணெயைத் தடவ வேண்டாம்.
எண்ணெய் தடவிய உடனேயே சீப்பு பயன்படுத்தாதீர்கள்
பலருக்கு, தலைமுடிக்கு எண்ணெய் தடவிய உடனேயே சீவும் பழக்கம் உண்டு. ஆனால், அவ்வாறு செய்வது முற்றிலும் தவறானது. கூந்தலுக்கு எண்ணெய் தடவிய பின், முடி மென்மையாக மாறும். இந்த சூழலில், சீப்பை பயன்படுத்துவது முடியின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் முடி உடைந்து உதிர தொடங்குகிறது. உங்கள் தலைமுடிக்கு எண்ணெய் தடவிய பிறகு, சீப்பு பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள். இதற்கு மாறாக உங்கள் கைகளால் கோதி விடலாம்.
எண்ணெய் தடவிய பின், முடி பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம்
முடிக்கு எண்ணெய் தடவிய பின் ஹேர் மாஸ்க் அல்லது வேறு எந்த முடி பராமரிப்பு பொருட்களையும் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில், இரசாயனம் நிறைந்த பராமரிப்பு பொருட்களை தடவுவது, உங்கள் தலை முடியைச் சேதப்படுத்தலாம். அதனால், எண்ணெய் தேய்த்து, தலைக்குக் குளித்தபின், உங்கள் தலைமுடிக்கான மற்ற பராமரிப்புகளை பின்பற்றலாம்.
எண்ணெய் தடவிய பின் நீண்ட நேரம் வைத்திருக்கக் கூடாது
தலைமுடிக்கு எண்ணெய் தடவிய பிறகு, நீண்ட நேரம் வைத்திருக்கக் கூடாது. ஏனெனில் நீண்ட நேரம் வைத்திருந்தால், தூசி மற்றும் அழுக்குகள் கூந்தலில் ஒட்டிக்கொள்ளலாம். இது முடியைச் சேதப்படுத்தி, முடி உதிர்தல் மற்றும் பொடுகு போன்ற பிரச்சனைகளுக்கும் காரணமாகலாம்.
முடி ஆரோக்கியமாக இருக்க எண்ணெய் தடவ வேண்டியது மிகவும் அவசியம். ஆனால் முடிக்கு எண்ணெய் தடவிய பின் மேற்கூறிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் தலைமுடியை சேதப்படுத்தும் இந்தத் தவறுகளை செய்யாமல் தவிர்த்திடுங்களேன்.
image source: freepik