Cholesterol Diet: நமக்கு வயதாகும்போது, நம் ஆரோக்கியம் நம் வாழ்வின் முக்கிய அம்சமாக மாறுகிறது. அதேபோல் வயதான காலத்தில் நம் பெற்றோர்களின் ஆரோக்கியத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியதும் மிக முக்கியம். முதியவர்களுக்கு ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு பிரதான காரணம் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பு தான். குறிப்பாக இது இதய ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
உயர்ந்த கொலஸ்ட்ரால் அளவுகள் வயதானவர்களிடையே ஒரு பொதுவான கவலையாகும், ஆனால் இதில் நல்ல விஷயம் என்னவென்றால், ஆரோக்கியமான உணவின் மூலம் அவற்றை திறம்பட நிர்வகிக்க முடியும்.
வயதானவர்களின் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவும் உணவுகள்
வயதானவர்கள் இந்த உணவை சாப்பிடுவதன் மூலம் தங்கள் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த முடியும். இருப்பினும் உடற்பயிற்சி, வாக்கிங், யோகா போன்ற முறைகளும் தேவை என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஓட்ஸ் மற்றும் முழு தானியங்கள்
உங்கள் உணவில் ஓட்ஸ் மற்றும் முழு தானியங்களை சேர்த்துக்கொள்வது கொலஸ்ட்ரால் சமநிலையில் பெரிதும் உதவுகிறது. இந்த உணவுகளில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது LDL (கெட்ட) கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. ஓட்ஸ், முழு தானியம் மற்றும் பாஸ்தா போன்றவைகள் உடன் உங்கள் நாளைத் தொடங்குவது கூடுதல் சிறப்பு.
பழங்கள் மற்றும் காய்கறிகள்
புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. இது இதய ஆரோக்கியத்திற்கு சிறந்த தேர்வுகளாக அமைகின்றன. பெர்ரி, சிட்ரஸ் பழங்கள், இலை கீரைகள், ப்ரோக்கோலி மற்றும் காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளை சாப்பிடுங்கள். இதில் அதிக கவனம் செலுத்துவது உங்கள் கொழுப்பு அளவை குறைக்க முடியும்.
கொழுப்பு மீன்
சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் ட்ரவுட் போன்ற மீன்கள் சிறந்த தேர்வாகும். காரணம் இந்த மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. ஒமேகா-3 ட்ரைகிளிசரைடுகளைக் குறைத்து இதய நோய் அபாயத்தைக் குறைக்கும். அதிகபட்ச நன்மைகளைப் பெற வாரத்திற்கு இரண்டு முறையாவது உங்கள் உணவில் மீன்களை சேர்த்துக் கொள்ள முயற்சிக்கவும்.
நட்ஸ் மற்றும் விதைகள்
பாதாம், அக்ரூட் பருப்புகள், ஆளி விதைகள் மற்றும் சியா விதைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. சிறிதளவு நட்ஸ்களை நேரடியாக சாப்பிடுவதோ அல்லது உங்கள் ஸ்மூத்தி, ஸ்நாக்ஸ் போன்ற விதைகளை சாப்பிடுவது என்பது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க பெரிதளவு உதவும். இது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
பருப்பு வகைகள்
பீன்ஸ், பருப்பு மற்றும் கொண்டைக்கடலையில் கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் தாவர அடிப்படையிலான புரதம் நிறைந்துள்ளது. இவை கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவுகிறது.
ஆலிவ் எண்ணெய்
நிறைவுற்ற அல்லது டிரான்ஸ் கொழுப்பு எண்ணெய்களுக்கு பதிலாக ஆலிவ் எண்ணெய் போன்ற ஆரோக்கியமான எண்ணெயை தேர்ந்தெடுக்கவும். இதில் ஆரோக்கியமான நன்மைகள் நிறைய உள்ளது. ஆலிவ் எண்ணெயில் சமைத்து சாப்பிடுவது என்பது உங்கள் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
க்ரீன் டீ
தொடர்ந்து க்ரீன் டீ குடிப்பது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க பெருமளவு உதவும். கேடசின்கள் எனப்படும் அதன் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இந்த நன்மைகளுக்கு வழிவகுக்கும்.
சீரான மற்றும் மாறுபட்ட உணவு என்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது மிக முக்கியம். புகைப்படித்தல் போன்ற கெட்ட பழக்கத்தை தவிர்க்க வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு கொலஸ்ட்ரால் அளவை பராமரிப்பது என்பது மிக முக்கியம். உங்களுக்கு ஏதேனும் தீவிர அசௌகரிய நிலை இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
Image Source: FreePik