கிரீன் டீயில் என்ன கலந்து குடிக்கலாம்?

By Ishvarya Gurumurthy G
25 Sep 2023

கிரீன் டீ என்றால் உங்களுக்கு விருப்பமா? இதோடு எவற்றை எல்லாம் கலந்து குடிக்கலாம் என்று உங்களுக்கு தெரியுமா? இந்த பதிவை படித்து தெரிந்துக்கொள்ளவும்.

கிரீன் டீயுடன் லெமன்

கிரீன் டீயுடன் லெமன் கலந்து குடிப்பது, உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இது கொழுப்பை வேகமாகக் கரைக்கிறது. மேலும், இதைக் குடிப்பதன் மூலம் செரிமான பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்.

கிரீன் டீயுடன் தேன்

கிரீன் டீயின் சுவை கசப்பாக இருப்பதாக உணர்ந்தால், தேன் கலந்து குடுத்து பாருங்கள். இது கிரீன் டீயின் கசப்பை குறைத்து. இது பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பானமாக அமைகிறது.

கிரீன் டீயுடன் துளசி

துளசியை கிரீன் டீயுடன் கலந்து குடிப்பதால் சளி, இருமல் மற்றும் பல வகையான பருவகால நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம். கிரீன் டீ மற்றும் துளசி இலைகளைத் தண்ணீரில் சேர்த்து, கொதிக்க வைத்துக் குடிக்கலாம்.

கிரீன் டீயுடன் இஞ்சி

இஞ்சி மற்றும் கிரீன் டீயில் உள்ள சத்துக்கள் உடலை உள்ளிருந்து வெப்பமாக வைத்திருக்க உதவுகிறது. இதனுடன் சளி, இருமல் போன்ற பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் பெறலாம்.

எந்தப் பானமாக இருப்பினும், அதைக் குறிப்பிட்ட அளவில் மட்டுமே குடிக்க வேண்டும். கிரீன் டீயை அதிகமாக உட்கொண்டால் தலைவலி, வயிற்றுவலி, மலச்சிக்கல் மற்றும் சீரற்ற இதயத் துடிப்பு போன்ற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும். சுகாதார நிபுணர்கள் பரிந்துரைப்படி, ஒரு நாளைக்கு 2 முதல் 3 கப் க்ரீன் டீயை விட அதிகமாகக் குடிக்க வேண்டாம்.