எடை இழப்பு என்றாலே அனைவரும் நாடுவது பெரும்பாலும் பழங்களைத் தான். உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைக்க பழங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில், பழங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்றக்கூடிய நார்ச்சத்துக்களைக் கொண்டுள்ளது. எந்த இரசாயனங்களும் கலக்கப்படாத பழங்கள் எப்போதும் சுவையானது மற்றும் பாதுகாப்பானதும் கூட. எனவே இயற்கையான முறையில் உடல் எடை குறைப்பதில் பழங்கள் பெரிதும் உதவுகிறது. மேலும், இவை செரிமானம் தொடர்பான பிரச்சனைகளுக்கும் உதவக்கூடியதாக அமைகிறது. இதில், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் குறைப்பதில் பங்கேற்கும் சில பழங்களைக் காணலாம்.
கொழுப்புகளைக் கரைக்க உதவும் பழங்கள்
அதிக அளவிலான கொழுப்பு இருப்பது இதய நோய் பாதிப்பை உண்டாக்குகிறது. எனவே, ஹெச்டிஎல் எனப்படக்கூடிய நல்ல கொலஸ்ட்ரால் அளவை எடுத்துக் கொள்வதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க முடியும். இதில் கொழுப்பைக் குறைப்பதற்கான பழங்களைக் காணலாம்.
அவகேடா
நம் அன்றாட உணவில் சேர்க்க வேண்டிய பழங்களில் அவகேடோ பழமும் ஒன்று. இவற்றை சரியான டயட்டுடன் எடுத்துக் கொள்வதன் மூலம் மோனோசாச்சுரேட்டர் உற்பத்தியாகிறது. இதனால் உடலில் நல்ல கொழுப்புகள் அதிகரிக்கப்படுகிறது. இந்த பழங்களைச் சாப்பிடும் போது எல்டிஎல் எனப்படக்கூடிய கொலஸ்ட்ரால் அளவு குறைவதாகக் கூறப்படுகிறது. எனவே அவகேடோ ஆனது கெட்ட கொழுப்புகளைக் குறைக்க உதவுகிறது.
தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, காலக்கெடு மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்த அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன; இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இணையதளம் வழங்கும் எந்த தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பப்படி மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால், மேலே குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் பதில்கள்/கருத்துகள் வடிவில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் வழங்கப்படும் ஏதேனும் ஆலோசனை/உதவிக்குறிப்புகளைப் பயன்படுத்துவதற்கு முன், தகுதிவாய்ந்த மருத்துவப் பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்