மனித வாழ்வில் மிகவும் இன்றியமையாத ஒன்றாக விளங்குவது தூக்கம் ஆகும். உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்லாமல் மன ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், சிலருக்கு இரவு நேரங்களில் சரியாக தூக்கம் வராமல் விழிப்பு ஏற்படும். இது இயல்பான ஒன்று தான். ஆனால், தூங்கிய பிறகு மிகக்குறுகிய இடைவெளியிலேயே விழித்துக் கொள்வர். இதற்கான காரணம் தூங்கும் நிலை சரியில்லாமல் இருப்பதே ஆகும். தூக்க நிலை சரியில்லாத போது பல உடல் உபாதைகளும் ஏற்படக்கூடும். எந்த நிலையில் தூங்கும் போது நல்ல தூக்கத்தைப் பெறவும், உடலில் பிரச்சனைகள் ஏற்படாதவாறும் எப்படி தூங்குவது என்பதைக் காணலாம்.
தவறான நிலையில் தூங்குவதால் உண்டாகும் பிரச்சனைகள்
ஒருவர் இரவு உட்கொள்ளும் உணவு மற்றும் தூங்கும் நிலை பொறுத்தே இரவில் நல்ல உறக்கத்தை பெற முடியும். தவறான நிலையில் தூங்கும் போது அடிவயிற்றில் வலி, நெஞ்செரிச்சல், வயிறு உப்புசம் அடைதல் போன்றவை ஏற்படும். மேலும் செரிமானப் பிரச்சனை ஏற்பட்டு அஜீரணக் கோளாறு ஏற்படும். எனவே, இரவு நேரத்தில் உட்கொள்வது மற்றும் தூங்கும் நிலை இவற்றை சரியாக வைத்துக் கொண்டால் மட்டுமே நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெற முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: Things Do Before Going To Bed: தூங்கும் முன் நீங்க கட்டாயம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் இங்கே!
தூங்குவதற்கான சரியான நிலை
நம்மில் பலர் தூங்கும் போது பல்வேறு நிலைகளில் தூங்குவர். முதுகுப் புறத்தை அடியில் வைத்து நேராக தூங்குவது, வயிற்றுப்பகுதியை கீழே வைத்து குப்புறப்படுத்து தூங்குவது, வலது புறம், இடது புறம் போன்ற பல்வேறு தூக்க நிலைகள் உள்ளன. இவற்றில் எந்த நிலை சரியான தூக்க நிலை என்பது பலரும் அறியாத ஒன்றாகும்.
வலது புறமாகத் தூங்கும் போது வயிற்றுப்பகுதியானது முதுகெலும்பு மற்றும் உணவுக் குழாய்க்கு மேல் நோக்கி அமைந்திருக்கும். இதனால், வயிற்றுப் பகுதி குறுகி இல்லாமல் உப்பியவாறு அமையும். மேலும், இவ்வாறு தூங்கும் போது அசிடிட்டி உண்டாகும். வயிற்றுப் பகுதி மேல்நோக்கியவாறு தூங்கும் போது ஏற்படும் பிரச்சனைகள் குறைவாகத் தான் இருக்கும். இருப்பினும் இந்த நிலையில் அசிடிட்டி பிரச்சனையைச் சந்திக்க வாய்ப்புண்டு. வயிற்றுப்பகுதி கீழே உள்ளவாறு படுப்பதால் அடிவயிற்றில் கடுமையான வழி உண்டாகும். மேலும் இது செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் அஜீரணக் கோளாறை ஏற்படுத்துகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Sleeping Tips: உங்களின் தூக்கத்தை கெடுக்கும் 5 கெட்ட பழக்கங்கள்!
இந்த பிரச்சனைகள் ஏதும் இல்லாமல், நல்ல ஆழ்ந்த உறக்கத்தைப் பெற இடப்பக்கம் தூங்குவதே சரியான முறையாகும். இடது புறமாக உறங்கும் போது செரிமானம் சிறப்பாகச் செயல்படும். எனவே, மற்ற நிலைகளில் உறங்குவதை விட இடது பக்கமாக உறங்குவது ஆழ்ந்த உறக்கத்தைத் தருவதாக அமைகிறது. அதாவது இடது புறமாக தூங்கும் போது, உடலில் வலது புறமாக இருக்கக்கூடிய உறுப்புகள் புவியீர்ப்பு விசையின் மூலம் ஈர்க்கப்பட்டு விரைவாக ஜீரணமடைய உதவுகிறது. இதன் மூலம், இரவில் நல்ல தூக்கம் பெறுவதுடன், காலை நேரத்தில் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
Image Source: Freepik