திருமணத்தில் ஜொலிக்க வேண்டுமா? இதை ஃபாலோ பண்ணுங்க…

  • SHARE
  • FOLLOW
திருமணத்தில் ஜொலிக்க வேண்டுமா? இதை ஃபாலோ பண்ணுங்க…

நமது வாழ்வில் ஒரு முக்கியமான நிகழ்வு என்றால் அது நம் திருமணம் தான். அன்றைய நாளில் நாம் நம்மை மிக அழகாக அலங்கரித்துக்கொள்ள ஆசைப்படுவோம். குறிப்பாக பெண்கள் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை தங்களை அலங்கரித்துக்கொள்வர். நிச்சயதார்த்தம், சங்கீத் இரவு முதல் திருமணம் முடியும் வரை உள்ள அனைத்து நிகழ்ச்சியிலும், பெண்கள் அசத்தலாக தயாராவர். இந்த அலங்காரத்தில் முக்கியமானது என்னவென்பது உங்களுக்குத் தெரியுமா? ஆடைகள், நகைகள், சிகை அலங்காரங்கள், கணுக்கால் அலங்காரங்கள் என பல உள்ளன. இது தொடர்பான சில முக்கிய குறிப்புகளை இத்தொகுப்பில் காணலாம். உங்கள் திருமண ஒப்பனையை கச்சிதமாக மாற்ற பின்வரும் விஷயங்களைச் செய்யுங்களேன்.

மேக் அப் சோதனை

திருமணத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு மேக்கப்பைச் சோதிப்பது ஒரு சிறந்த தீர்வாகும். இதன் மூலம் மணப்பெண்ணுக்கு எது நன்றாக இருக்கிறது, எவ்வாறு ஒப்பனை செய்ய வேண்டும், எதனை தவிர்க்க வேண்டும் போன்றவற்றை ஒப்பனை கலைஞர்கள் புரிந்துகொள்வர். திருமணம் அன்று உங்கள் முழு தோற்றத்தையும் சிறப்பாக காட்சிப்படுத்த இந்த மேக் அப் சோதனை உதவும்.

திருமண உடை

மேக்கப்பை முன்கூட்டியே முயற்சிப்பதன் நன்மை என்னவென்றால், திருமண உடையுடன் உங்களது மேக் அப் பொருந்துகிறதா என சரி பார்க்க முடியும். இவ்வாறு முன்கூட்டியே திருமண உடையுடன் மேக் அப் செய்து சோதனை செய்தால், திருமணத்தின் போது உங்களின் உடைக்கு ஏற்றவாறு எளிதில் மேக் அப் செய்து விடலாம்.

கண் ஒப்பனையில் கவனம் தேவை

பொதுவாக பெண்களுக்கு மேக் அப்-ஐ தூக்கி நிறுத்துவது கண் ஒப்பனை என்று சொல்லலாம். கண் ஒப்பனை தோற்றத்தை உருவாக்கலாம். எனவே அது உடையாமல் இருக்க, கண்களுக்கு கொடுக்கப்போகும் தோற்றத்தை முன்கூட்டியே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். கண்களை சுற்றி சிறிது கன்சீலர் பயன்படுத்த வேண்டும். மேலும் ஜலைனர் தேர்வு செய்வதில் அதிக கவனம் வேண்டும்.

அழகை அதிகரிக்கும் கண் இமைகள்

கண் இமைகளை பெரிதாகவும், அழகாகவும் காட்டுவதற்கு செயற்கை கண் இமைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். திருமணத்திற்கு முன், சில ஜோடி கண் இமைகளைத் தேர்ந்தெடுத்து, உங்கள் கண்களுக்கு ஏதுவாக உள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும்.

புருவங்களை ஹைலைட் செய்யவும்

உங்கள் புருவங்களில் ஹைலைட்டரைப் பயன்படுத்த வேண்டும். இதற்காக, பெரும்பாலும் லைட் மேட் ஷேடுகளைத் தேர்ந்தெடுத்து, வெளிப்புறத்தில் ஹைலைட்டருடன் புருவங்களை முன்னிலைப்படுத்தவும். மேலும் காம்பாக்ட் பவுடர், லிப்ஸ்டிக், கன்சீலர், பிரஷ் அல்லது ஸ்பாஞ்ச் போன்ற சில மேக்கப் பொருட்களை முன்கூட்டியே வாங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த வேண்டாம்

திருமண ஒப்பனையில் சன்ஸ்கிரீனைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது உங்கள் முகத்தை வெண்மையாக்கும். மேலும் கேமராவில் ப்ளாஷ் செய்யும். இது உங்கள் முகத்தை மிருதுவாகவும் பிசுபிசுப்புத் தன்மையுடனும் மாற்றும். சன்ஸ்கிரீனுக்கு பதிலாக, நீங்கள் வழக்கமான டோனர் அல்லது கிரீம் பயன்படுத்தலாம்.

வேக்சிங் அல்லது த்ரெடிங் செய்தல்

திருமணத்திற்கு குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பே உங்கள் முகத்தை வேக்சிங் அல்லது த்ரெடிங் செய்ய வேண்டும். அதனால் முகத்தில் சொறி, பரு, ஏதேனும் இருந்தால் திருமண நாளுக்குள் சரியாகும். இதற்காக, உங்கள் பார்லர் சிட்டிங்கை சில வாரங்களுக்கு முன்பே பதிவு செய்ய வேண்டும். இது திருமண நாளில் உங்கள் சருமத்தை சுத்தமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.

முடி ஒப்பனை

திருமணத்திற்கு முன் இரண்டு முறை ஹேர் ஸ்பா செய்யலாம். முடி நிறம் மற்றும் ஸ்டைலுக்கு திருமணத்திற்கு முன், சிகையலங்கார நிபுணரை முன்பே தொடர்பு கொள்ள வேண்டும். உங்கள் திருமண தோற்றத்திற்கு மேலே உள்ள விஷயங்களை நீங்கள் கவனித்துக் கொண்டால், திருமண நாளில் நீங்கள் மிகவும் அழகாக இருப்பீர்கள்.

Images source: freepik

அடுத்ததை படிக்கவும்

Overeating: அதிகமாக சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? இதை கைவிட சிம்பிள் டிப்ஸ்!

பொறுப்புத் துறப்பு

குறிச்சொற்கள்