பள்ளி செல்லும் குழந்தைக்கு அடிக்கடி உடம்பு சரி இல்லாமல் போவது ஏன்?

  • SHARE
  • FOLLOW
பள்ளி செல்லும் குழந்தைக்கு அடிக்கடி உடம்பு சரி இல்லாமல் போவது ஏன்?

பள்ளி செல்லும் உங்கள் குழந்தைக்கு அடிக்கடி உடம்பு சரி இல்லாமல் போவதற்கான காரணங்களை இப்பதிவில் படித்தறிவோம் வாருங்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவிட் தொற்றுநோய் தாக்கியபோது உலகமே தலைகீழாக மாறிய உணர்வைக் கொடுத்தது. ஒடுக்கித் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் பெரியவர்களைப் போலவே குழந்தைகளும் மோசமாகப் பாதிக்கப்பட்டனர். ஆன்லைன் வகுப்புகளுக்கு ஆதரவாகப் பள்ளிகளும் மூடப்பட்டன. ஒரு குழந்தை சமுதாயத்துடன் ஒன்றி வாழ்வதற்கும், தன் சக வயதினருடன் கற்று செழிப்பான வளர்ச்சி அடைவதற்கும் நேரடியாகப் பள்ளி சென்று கல்வி கற்பதே சிறந்தது என்பதை பெரும்பாலான பெற்றோர்கள் இந்த நேரத்தில் உணர்ந்து விட்டனர். இருப்பினும், பள்ளிகள் மீண்டும் இயங்கத் தொடங்கியது பல பெற்றோர்களைக் கவலையடைய செய்துள்ளது. உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் பயிற்சி தாமதமான காரணத்தினால் குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறார்கள். ஒவ்வாமை, வைரஸ் தொற்று, நீர்வழிப் பரவும் நோய்கள், சுவாசக் குழாய் தொற்றுகள், இரைப்பைக் குடல் தொற்றுகள் போன்றவற்றால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகள் நோய்வாய்ப்படுவதற்கான பல்வேறு காரணங்களைத் தெரிந்து கொள்ள நொய்டாவில் உள்ள மதர்ஹுட் மருத்துவமனையின் மூத்த குழந்தை நல மருத்துவர் மற்றும் நியோனாட்டாலஜிஸ்ட் டாக்டர் அமித் குப்தா அவர்களுடன் பேசினோம்.

அதிக உடல் உழைப்பில்லாத வாழ்க்கை முறை

இரண்டு வருடங்களாக வீட்டிலேயே உட்கார்ந்து, விளையாடி, பள்ளிப்படிப்பு நடந்தேறியது நிச்சயமாகக் குழந்தையின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகளின் உடல் செயல்பாடு குறைந்ததும் அவர்கள் நோய்வாய்ப்படுவதற்கான மற்றொரு காரணம். இதனால் குழந்தைகளின் உடல் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. உடல் ரீதியாகச் சுறுசுறுப்பாக இருக்கும் குழந்தைகளைவிட, குறைவான அல்லது வரம்புக்குட்பட்ட உடல் செயல்பாடுகளுடன் இருக்கும் குழந்தைகளே அடிக்கடி நோய்வாய்ப்படுகின்றனர். பள்ளியிலிருந்து வீடு திரும்பியபிறகு குழந்தைகள் தங்களுக்கு இருக்கும் கால் வலி, தலைவலி மற்றும் அதிகப்படியான சோர்வு பற்றி முறையீடுவது பெற்றோர்களுக்குப் பெரும் கவலை அளிக்கிறது. பள்ளிகள் மீண்டும் இயங்கும் நிலையில், குழந்தைகள் தங்கள் தினசரி படிப்பு மற்றும் விளையாடும் நேரத்துக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த விஷயங்களை மெதுவாகக் கையாளுவது நல்லது. குழந்தைகளின் உள்ளுறுதி மாறும் ஆனால் அதை மறுசீரமைக்க சிறிது நேரமாகும்.

வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களால் ஏற்பட்ட குறைவான தாக்கம் அல்லது தாக்கமின்மை

சிறு குழந்தைகள் தங்கள் பள்ளி மற்றும் விளையாடும் தோழர்களிடமிருந்து நுண்ணுயிரிகளால் (வரம்பு மீறாத அளவு) தாக்கப்படுவதன் மூலன் பல்வேறு வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிராக, உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகுகிறது. பள்ளிகளில், குழந்தைகள் மகரந்தம், தூசி, களை, வைரஸ் தொற்று போன்ற பல்வேறு ஒவ்வாமைகளுக்கு ஆளாகும்போது, இது ஒவ்வாமை இருமலாக வெளிப்படும். இந்தத் தாக்கத்தின் விளைவாக குழந்தைகளுக்கு நோய் அல்லது அறிகுறியற்ற நோய்த்தாக்கம் ஏற்படக்கூடும். இவை ஆன்டிபாடிகள் மற்றும் உயிரணு நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்க வழிவகுக்கும். இவை இரண்டும் அவர்களை அடுத்தடுத்த தொற்று மற்றும் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

நீர்வழிப் பரவும் நோய்கள்

குறிப்பாகக் கோடை மற்றும் மழைக்காலங்களில் குழந்தைகளுக்கு நீர் அல்லது உணவின் மூலம் பரவும் நோய்கள் அல்லது தொற்றுகள் ஏற்படக்கூடும். வருடத்தின் இந்தக் காலகட்டத்தில், மோசமான உணவு சுகாதாரம் காரணமாக பெரும்பாலான குழந்தைகள் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கினால் அவதிப்படுகிறார்கள்.

ஒழுங்கற்ற தூக்க முறை

பெருந்தொற்று நம் அனைவருக்கும் வழக்கமான சீரான தூக்கசுழற்சியை பராமரிப்பதை கடினமாக்கிவிட்டது. குறிப்பாகக் காலைச் சீக்கிரம் எழுந்து பள்ளிக்குச் செல்லும் சூழல் இல்லாதமையால் குழந்தைகளின் தூக்கச் சுழற்சி பெரிதும் பாதிக்கப்பட்டது.

போதுமான தூக்கம் நமது நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு அவசியம். இது திடமான இயற்கை மற்றும் தகவமைப்பு நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்த உதவுகிறது, மேலும் கடுமையான ஒவ்வாமை எதிர்விளைவுகளைத் தவிர்க்க உதவுகிறது. மாறாக, ஒழுங்கற்ற தூக்க நடைமுறைகள் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டை சீர்குலைக்கும்.

குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவதில் தாமதம்

கோவிட்-19 நோய்தொற்றின்போது குழந்தைகளுக்கு வழக்கமாகச் செலுத்தபட வேண்டிய தடுப்பூசிகள் முக்கியமாகக் கருத்தப்படவில்லை. இதன் காரணமாகப் பல குழந்தைகள் சின்னம்மை, தட்டம்மை, காய்ச்சல் போன்ற தொற்று நோய்களுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, நிலுவையில் உள்ள அனைத்து தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர் டோஸ்களை முடிந்தவரை விரைவாகப் போட வேண்டியது அவசியம்.

பொதுவாகக் குழந்தைகளுக்கு வருடத்திற்கு 4-5 முறை சளி பிடிப்பது இயல்பானதே, ஆகையால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஏற்படும் சளி தொந்தரவுகளால் கவலைப்பட வேண்டாம். இருப்பினும், உங்கள் குழந்தைக்கு உடல் நலக் குறை அல்லது மற்ற கடுமையான அறிகுறிகள இருந்தால், உங்கள் குழந்தை நல மருத்துவரை அணுகி, டைபாய்டு மற்றும் ஹெபடைடிஸ் போன்ற நீர்வழி நோய்களால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கவும்.

உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான, சுகாதாரமான பழக்கவழக்கங்களை வீட்டிலேயே கற்பிப்பதன் மூலம் பள்ளியில் இருக்கும்போது அவர்கள் அந்தப் பழகங்களை கடைபிடிப்பது எளிதாகிறது. உங்கள் குழந்தைகளுக்கு எப்படி கைகளைச் சரியாகக் கழுவ வேண்டும் என்பதை கற்றுக்கொடுப்பதும், அழுக்கு மற்றும் தூசியிலிருந்து விலகி இருக்க அவர்களுக்கு அறிவுரை வழங்குவதும் முக்கியம்.

குழந்தைகளின் திரை நேரம் அதிகரிப்பு

நீண்ட நேரம் வீட்டுக்குள்ளேயே இருப்பது, மொபைல் அல்லது கணினியில் ஆன்லைன் வகுப்புகளைக் கவனிப்பது, அதிக நேரம் சாப்பிடுவது, வீடியோ கேம்களை விளையாடுவது, ஸ்மார்ட்போன்களை அதிகமாகப் பயன்படுத்துவது போன்ற விஷயங்கள் பல குழந்தைகளுக்குக் கவனக் குறைவை ஏற்படுத்தியிருக்கின்றன. டிஜிட்டல் சாதனங்களுக்குப் பழகிவிட்ட பெரும்பாலான குழந்தைகளால் வகுப்பில் கவனம் செலுத்த முடிவதில்லை.

உடல் உழைப்பின்மைக்கு திரை நேரமும் முக்கியமான காரணம். இது உலகளவில் பெரிய உயிரிழப்பை ஏற்படுத்தும் குழந்தை பருவ உடல் பருமனுக்கு ஒரு முக்கிய ஆபத்துக் காரணி. குழந்தைகள் திரைகளுடன் செலவழிக்கும் நேரத்தைக் கட்டுப்படுத்த உடல் செயல்பாடுகளை வலுக்கட்டாயமாகத் திணிப்பதை ஒரு வழியாகச் சிலர் வாதிடுகின்றனர், ஆனால் இது ஆராய்ச்சியால் ஆதரிக்கப்படவில்லை.

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் செய்யும் செயல்களுக்கு எல்லைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். சில எல்லைகளுடன் சமநிலைபடுத்திய திரை நேரத்தை நிர்ணயிப்பது பெற்றோரின் கடமை.

Images Credit: freepik

அடுத்ததை படிக்கவும்

Overeating: அதிகமாக சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? இதை கைவிட சிம்பிள் டிப்ஸ்!

பொறுப்புத் துறப்பு

குறிச்சொற்கள்